Dinosaur Twitter
உலகம்

உலகம் ஆறாவது பேரழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது - மனிதர்களின் நிலை என்ன?

NewsSense Editorial Team


உயிரினங்கள் அசாதாரணமான வேகத்தில் அழிந்து வருவதால், உலகம் அதன் ஆறாவது பேரழிவைச் சந்தித்து வருவதாகச் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போதைய அழிவு விகிதத்தின் வேகம் தொடர்ந்தால் பெரும்பாலான உயிரினங்கள் வரும் 2200ஆம் ஆண்டுக்குள் அழிந்துவிடும். இதனால் மனிதர்களின் உடல் நலம் மற்றும் வாழ்வில் ஏற்படும் தாக்கங்கள் பயங்கரமானவையாக இருக்கும், ஆனால் அப்பிரச்சனைகள் தவிர்க்க முடியாதவை அல்ல.

3.5 பில்லியன் (350 கோடி) ஆண்டுகளுக்கு முன்பு, பூமியில் உயிரினங்களின் தோன்றுவதற்கான அடிப்படை விஷயங்கள் தென்படத் தொடங்கியிருந்த காலத்திலிருந்து, அனைத்து உயிரினங்களிலும் இதுவரை கிட்டத்தட்ட 99 சதவீதம் அழிந்துவிட்டன.

உயிரினங்களின் பரிணாமம் கால ஓட்டத்தில் நடைபெறுகிறது. புதிய உயிரினங்கள் உருவாகும்போது, ​​அவை அழிந்துபோன உயிரினங்களுக்கு மாற்றாகின்றன.

காட்டுத்தீ

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், உயிரினங்கள் அழிவதும் மற்றும் உயிரினங்கள் உருவாவதும், காலப்போக்கில் ஒரேசீராக நிகழ்வதில்லை. மாறாக, அவை பெரிய கால இடைவெளிகளில் நிகழ்கின்றன.

சுமார் 540 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, கேம்ப்ரியன் வெடிப்பு என்று அழைக்கப்படும் உயிரினங்கள் பல்கிப் பெருகும் வெடிப்பு ஏற்பட்டது. அப்போதிருந்து, புதைபடிம பதிவுகள் குறைந்தது ஐந்து பேரழிவு நிகழ்வுகளை அடையாளம் கண்டுள்ளன.

இந்த நிகழ்வுகளில் மிகவும் மோசமான அழிவு ஒன்று சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன், ஒரு எரிகல் பூமியின் மீது மோதி ஏற்பட்டது. அதைத் தான் இன்று நாம் மெக்சிகோ வளைகுடா என்று அழைக்கிறோம்.

ஒரு அழிவை பேரழிவாகக் கருத வேண்டுமானால், அந்நிகழ்வின் மூலம் பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களிலும் குறைந்தது 75 சதவீத உயிரினங்கள் ஒரு 'குறுகிய' காலக்கட்டத்தில், அதாவது 28 லட்சம் ஆண்டுகளுக்குள் அழிய வேண்டும்.

எரிக்கல் மோதல்

வரலாறு முழுவதும், மனிதர்கள் ப்ளீஸ்டோசீனின் பிற்பகுதியிலிருந்து (சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு) ஆரம்பகால ஹோலோசீன் வரை (சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்பு) சிறிய அழிவு நிகழ்வுகளை ஏற்படுத்தினர். வூலி மமூத்கள், ராட்சத சோம்பல்கள், டிப்ரோடொடான்கள், குகை கரடிகள் போன்ற 'மெகா ஃபனா' உயிரினங்கள், கிட்டத்தட்ட எல்லா கண்டத்திலிருந்தும் சில ஆயிரம் ஆண்டுகளில் காணாமல் போயின.

சுமார் 14 ஆம் நூற்றாண்டிலிருந்து, உலகம் முழுவதும் ஐரோப்பிய காலனித்துவத்தின் விரிவாக்கம் அழிவுக்கு வழிவகுத்தது. தீவுகளில் தொடங்கிய காலனித்துவ விரிவாக்கம், பிறகு பெருங்கண்டங்களில் இருக்கும் நாடுகளுக்கும் விரிவடைந்தது. இயற்கை வளங்களைச் சுரண்டுவதற்கான உந்துதல் தீவிரமடைந்தன. அது அழிவு அடுக்கிற்கு வழிவகுத்தது.

கடந்த 500 ஆண்டுகளில் 700 க்கும் மேற்பட்ட முதுகெலும்பு கொண்ட உயிரினங்கள் மற்றும் 600 தாவர இனங்கள் அழிந்துவிட்டன.

ஒட்டுமொத்த உயிரினத்தில் 75 சதவீத உயிரினங்கள் அழிந்தால் தான் பேரழிவு என்றோம். இந்த நவீன யுகத்தில் ஏற்பட்ட அழிவுகள் அத்தகைய பலத்த சேதங்களை ஏற்படுத்தவில்லை என்பதாகச் சிலர் கூறுகிறார்கள்.

இருப்பினும், அவை மனிதர்கள் பதிவு செய்த அழிவுகள் மட்டுமே. பெரும்பாலான இனங்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே அழிந்து போகின்றன. மேலும் 25 சதவீத அழிவுகள் மனிதர்களால் கவனிக்கப்படாமலேயே போகின்றன.

இனங்கள் மறையும் போது அவை வழங்கும் சேவைகளை இழக்கிறோம். கார்பன் உறிஞ்சிக் கொள்வது குறைதல், தீவிரமடையும் காலநிலை மாற்றம், குறைந்த மகரந்தச் சேர்க்கை, அதீத மண் சிதைவு, உணவு உற்பத்தி குறைதல், மோசமான காற்று மற்றும் நீர் தரம், அடிக்கடி ஏற்படும் தீவிர வெள்ளம், காட்டுத் தீ, மனித ஆரோக்கியம் மற்றும் சுகாதார சீர்குலைவு என பல பிரச்சனைகள் இதன் விளைவாக ஏற்படுகின்றன.

எச்.ஐ.வி / எய்ட்ஸ், எபோலா, கொரோனா வைரஸ் போன்ற நோய்கள் தோன்றுவதற்கு மனிதர்களைத்தான் நாம் குறைபட்டுக் கொள்ள வேண்டும், இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புகளின் ஒருமைப்பாடு குறித்த நமது அலட்சியத்தினால் தான் இந்த பிரச்சனைகள் உண்டாயின.

ஒரு சிறு முயற்சி, நீண்ட கால திட்டமிடல் மூலம், நம் மோசமான எதிர்காலத்தை கொஞ்சமேனும் மாற்ற முடியும். உலகெங்கிலும் உள்ள சமூகங்கள் சில அடிப்படையான மற்றும் அடையக்கூடிய மாற்றங்களை மேற்கொண்டால், சேதத்தை நாம் கட்டுப்படுத்த முடியும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?