6 real cities that are completely underwater! Twitter
உலகம்

இந்தியாவில் துவாரகா; உலகெங்கிலும் நீருக்கடியில் மூழ்கிய பழமையான நகரங்கள் பற்றி தெரியுமா?

கடலுக்குள் மூழ்கிய நகரங்களில் பெரும்பாலானவை வெள்ளம் காரணமாக நீரில் மூழ்கியிருந்தாலும், மற்றவை எப்படி மூழ்கியிருக்கும்? கடலுக்கு அடியில் மூழ்கியுள்ள 6 நகரங்கள் குறித்து இங்கு தெரிந்துகொள்ளலாம்.

Priyadharshini R

இந்தியாவில் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் எடுத்துரைக்கும் இடங்களாக இருந்த பூம்புகார், குமரிக்கண்டம், துவாரகா ஆகியவை கடலுக்குள் மூழ்கியதாக வரலாறு உரைக்கிறது.

இவ்வாறு கடலுக்குள் மூழ்கிய நகரங்களில் பெரும்பாலானவை வெள்ளம் காரணமாக நீரில் மூழ்கியிருந்தாலும், மற்றவை எப்படி மூழ்கியிருக்கும்? கடலுக்கு அடியில் மூழ்கியுள்ள 6 நகரங்கள் குறித்து இங்கு தெரிந்துகொள்ளலாம்.

துவாரகா, இந்தியா

சொர்க்கத்தின் வாயில் என்றும் அழைக்கப்படுகிறது, துவாரகா நகரம் 1988 இல் கண்டுபிடிக்கப்பட்டது. இது காம்பே வளைகுடாவிற்கு கீழே 100 அடிக்கு கீழே மூழ்கியது. கடலுக்கு அடியில், பழங்கால கட்டமைப்புகள், கட்டடங்கள், தூண்கள் மற்றும் பழங்கால கலைப்பொருட்கள் காணப்பட்டன.

இந்த நகரம் குறைந்தது 10,000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர். மற்றவர்கள் நகரம் 5000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் என்று கருத்து தெரிவிக்கின்றனர். குஜராத் சுல்தான் மஹ்மூத் பேகடா 1473 இல் நகரத்தைத் தாக்கி துவாரகா கோயிலை அழித்ததாக வேறு சிலர் கூறுகின்றனர்.

போர்ட் ராயல், ஜமைக்கா

வட அமெரிக்காவின் ஜமைக்கா நாட்டில் அமைந்துள்ளது தான் போர்ட் ராயல் நகரம். சுனாமி மற்றும் பூகம்பத்தால் போர்ட் ராயல் என்ற நகரம் முழுவதும் நீருக்குள் மூழ்கி விட்டது. இதில் 2000 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

பிரபல ஆங்கில கடற்கொள்ளை படங்களை பார்த்திருப்போம். ஆனால் உண்மையில் கடற்கொள்ளையர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த இடம் தான் போர்ட் ராயல். தற்போது இந்த நகரம் உலகின் சிறந்த பாதுகாக்கப்பட்ட நீருக்கடியில் மூழ்கிய நகரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

அங்கிருந்து சில பொருட்கள் அகற்றப்பட்டு ஜமைக்கா முழுவதும் உள்ள அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ளன. இங்கு வரும்போது சுற்றுலா பயணிகள், அதிகாரிகளிடமிருந்து முறையான அனுமதியைப் பெற்று மூழ்கிய நகரத்திற்கு ஸ்கூபா டைவ் செய்யலாம்.

பையா, இத்தாலி

பண்டைய ரோமின் லாஸ் வேகாஸ் என அழைக்கப்பட்ட பையா என்ற நகரம் எரிமலை வெடிப்பு காரணமாக சேதமடைந்து மூழ்கியிருக்கலாம் என்று கூறுகின்றனர்.

நகரத்தின் பெரும்பகுதி 20 அடிக்கும் குறைவான ஆழத்தில் இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மேலும் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான எச்சங்கள் நீருக்கடியில் கிடைத்துள்ளன.

பாவ்லோபெட்ரி, கிரீஸ்

கிரீஸ் நாட்டில் உள்ள பாவ்லோபெட்ரி(Pavlopetri) சுமார் 5000 ஆண்டுகள் பழமையானது என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிடுகின்றனர்.

1967 இல் கண்டுபிடிக்கப்பட்ட இந்த நகரத்தில் பண்டைய இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடலின் அடிவாரத்தில் தெருக்கள், கட்டிடங்கள், தோட்டங்கள், கல்லறைகள் என ஒரு முழுமையான நகரத்தையே கண்டுபிடித்துள்ளனர்.

கனடா

கனடாவில் உள்ள ஒன்டாரியோவின் செயின்ட் லாரன்ஸ் ஆற்றின் குறுக்கே அணை கட்ட 1950 களில் கட்டப்பட்ட நீர்வழிப் பாதையின் கட்டுமானத்தின் பொது பல நகரங்கள் நீரில் மூழ்கியது.

மொத்தம் 10 கனடிய நகரங்கள், மூழ்கியுள்ளன. நீரின் மேற்பரப்பிலிருந்து சில பகுதிகளில் இருந்து பார்க்கக்கூடிய கட்டிடங்கள் மற்றும் நடைபாதைகள் இன்னும் உள்ளன.

அட்லிட்-யாம், இஸ்ரேல்

மத்தியத்தரைக் கடலில் இஸ்ரேல் கடற்கரையில் அமைந்துள்ள அட்லிட்-யாம் நகரம் 1984 இல் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 8000 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. 30 அடி நீருக்கடியில், கல்லறைகள், கட்டிடங்கள் மற்றும் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இருப்பினும், இங்கு கண்டுபிடிக்கப்பட்ட மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஒரு வட்டத்தில் இருந்த ஏழு மெகாலித்கள், அதாவது பெரிய கல் வடிவங்கள், நீருக்கடியில் இருந்துள்ளன. நிலநடுக்கம், சுனாமி போன்ற காரணங்களால் குடியேற்றம் நீரில் மூழ்கிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?