ஆங்கில புத்தாண்டு ஏன் இன்று கொண்டாடுகிறோம்? - கிரிகோரியன் காலண்டர் குறித்த 6 தகவல்கள் Twitter
உலகம்

ஆங்கில புத்தாண்டு ஏன் இன்று கொண்டாடுகிறோம்? - கிரிகோரியன் காலண்டர் குறித்த 6 தகவல்கள்

இந்த காலண்டர், ஏதோ ஒரு நாள் இரண்டு நாள் வேலையில் ஒரு சிலரால் உருவாக்கப்பட்டு விடவில்லை. கிட்டத்தட்ட பல நூற்றாண்டுகள் பல்வேறு முறைகள் செயல்படுத்தப்பட்டு, பல தவறுகள் பிரச்சனைகள் எழுந்து, கடைசியில் தான் இந்த கிரிகோரியன் காலண்டர் முறை நடைமுறைக்கு வந்தது.

NewsSense Editorial Team

ஒருவரின் பிறந்தநாள், நினைவு நாள் உலகையே உலுக்கிய சம்பவங்கள் நடைபெற்ற நாள், ஒட்டுமொத்த உலகமும் மகிழ்ச்சியில் திளைக்கும் கொண்டாட்டங்களுக்கான நாள்... என எல்லாமே நாட்காட்டி என்று அழைக்கப்படும் காலண்டர் அடிப்படையிலேயே நடைபெற்று வருகிறது.

உலகம் முழுக்க உள்ள பல மத, பல சமய, கலாச்சாரங்களை பின்பற்றுபவர்கள் தங்களுக்கு என தனி நாட்காட்டிகள் எல்லாம் வைத்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு உலகின் ஆதி முதல் குடிகளில் ஒன்றான தமிழினத்தையே கூறலாம்.

இன்றும் தமிழ் மக்கள் சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி... என்று அழைக்கப்படும் தமிழ் மாதங்களில் திருமணங்கள் நிச்சயதார்த்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு தேதி குறித்து அதன் பின்னர் ஆங்கில தேதியை குறிப்பிடுவதை பல பத்திரிகைகளில் கூட நம்மால் பார்க்க முடியும்.

இருப்பினும் ஒட்டுமொத்த உலகமும் முரண்பாடுகள் இன்றி கிரிகோரியன் காலண்டர் முறையை பின்பற்றி வருகிறது.

கிறிஸ்துமஸ் என்றால் அது டிசம்பர் 25 தான், ஒசாமா பின்லேடன் அமெரிக்காவில் இருந்த இரட்டை கோபுரத்தை செப்டம்பர் 11ஆம் தேதி தான் தாக்கினார்... என இன்று நம்மால் தேதியை நினைவுபடுத்திச் சொல்ல முடிகிறது என்றால், அதற்கு கிரிகோரியன் காலண்டரை உலகம் முழுக்க பின்பற்றுவதுதான் ஒரு மிக முக்கிய காரணம்.

இந்த காலண்டர், ஏதோ ஒரு நாள் இரண்டு நாள் வேலையில் ஒரு சிலரால் உருவாக்கப்பட்டு விடவில்லை. கிட்டத்தட்ட பல நூற்றாண்டுகள் பல்வேறு முறைகள் செயல்படுத்தப்பட்டு, பல தவறுகள் பிரச்சனைகள் எழுந்து, கடைசியில் தான் இந்த கிரிகோரியன் காலண்டர் முறை நடைமுறைக்கு வந்தது.

இந்த கிரகோரின் காலண்டர் முறையை கண்டுபிடித்தது யார்? எங்கிருந்து வந்தது? லீப் ஆண்டுகள் என்றால் என்ன? ஏன் அது நடைமுறையில் பின்பற்றப்பட்டு வருகிறது? வாருங்கள் பார்ப்போம்.

1. கிரிகோரியன் காலண்டரைக் கண்டுபிடித்தது யார்? எப்போது கண்டுபிடித்தார்?

கிரிகோரியன் காலண்டர் முறையை 1582 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கொண்டு வந்தார் போப் 13ஆம் கிரிகோரி. கிரிகோரியன் காலண்டர் முறை நடைமுறைக்கு வருவதற்கு முன், கிமு 45 ஆம் ஆண்டு வாக்கில் ஜூலியஸ் சீசர் அறிமுகப்படுத்திய ஜூலியன் காலண்டர் நடைமுறையை தான் உலகம் பின்பற்றி வந்தது.

இன்று நாம் காலண்டரில் பார்க்கும் பெரும்பாலான தேதி அமைப்புகள், மாத அமைப்புகள் எலலம் ஜூலியன் காலண்டரிலேயே உருவாக்கப்பட்டிருந்ததும் இங்கு நினைவு கூறத்தக்கது.

ஜூலியன் காலண்டரில் மூன்று ஆண்டுகள் 365 நாட்களை கொண்டதாகவும் ஒரே ஒரு ஆண்டு மட்டும் 366 நாட்களைக் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தது. இப்போது இருப்பதைப் போலவே 365 நாட்கள் 12 மாதங்களாக பிரிக்கப்பட்டிருந்தன.

2. ஏன் கிரிகோரியன் காலண்டருக்கு மாறினோம்

ஜூலியன் காலண்டருக்கு முன் நிலவை அடிப்படையாகக் கொண்ட நாட்காட்டி பயன்படுத்தப்பட்டு வந்தது. அதில் பல்வேறு பண்டிகைகளும் தேதிகளும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருந்தன.

சூரியன் வடக்கிலிருந்து தெற்காகவும், தெற்கிலிருந்து வடக்காகவும் பயணிப்பதை உத்திராயனும் தட்சிணாயணம் என கூறுவர். அது போக, பண்டிகை தினங்களும் ஒத்தி போய்க்கொண்டே இருந்தன. உதாரணத்துக்கு ஈஸ்டர் பண்டிகை கூட தவறான பருவங்களில் கொண்டாட வேண்டிய சூழல் ஏற்பட்டது.

3. எப்போது கிரிகோரியன் நாட்காட்டி பின்பற்றப்பட்டது?

1582 ஆம் ஆண்டு சூரியனை அடிப்படையாகக் கொண்ட நாட்காட்டியிலிருந்து ஜூலியன் நாட்காட்டி ஒருங்கிணையாமல் மிகப்பெரிய வேறுபாடுகளோடு இருந்தன. சுமார் பத்து நாட்கள் வேறுபட்டு இருந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நான்கு ஆண்டுகளும் கழியும் போது இந்த பிரச்சனை மேலும் மேலும் அதிகரித்ததே ஒழிய குறையவில்லை.

எனவே போப் 13வது கிரிகோரி ஜூலியன் காலண்டரில் உள்ள பிரச்சனைகளை சரி செய்யத் தீர்மானித்தார். 1582 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 நாட்களை நீக்கிவிட்டு கிரகோரியன் காலண்டர் உலகம் முழுக்க அறிவிக்கப்பட்டது. அதைப் பல கத்தோலிக்க நாடுகளால் பின்பற்றத் தொடங்கின.

கிரிகோரியன் காலண்டர் அறிமுகப்படுத்தப்பட்ட பின் ஈஸ்டர் பண்டிகை வழக்கமாக கொண்டாடும் வசந்த காலத்திலும், உத்தராயண தட்சினாயன காலங்கள் கூட சரியான தேகளிலும் அமரத் தொடங்கின.

4. கிரிகோரியன் காலண்டரை 170 ஆண்டுகள் பின்பற்றாத இங்கிலாந்து

ஐரோப்பாவில் உள்ள பெரும்பாலான கத்தோலிக்க நாடுகள் கிரிகோரியன் காலண்டரை பின்பற்றினாலும், அமெரிக்கா & பிரிட்டன் போன்ற நாடுகள் சுமார் 170 ஆண்டுகளுக்கு இந்த கிரிகோரியன் காலண்டர் முறையைப் பின்பற்றவில்லை. இதற்கு கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் அதன் குறிக்கோள்கள் மீது இருந்த அவநம்பிக்கைகளே முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

இதனால் காலப்போக்கில் வர்த்தகம், வணிகம், சட்டம், மதம் சார்ந்த வழிபாடுகளில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டன. உதாரணத்திற்கு கிரிகோரியன் காலண்டரை பின்பற்றிய பல்வேறு நாடுகளும் ஒரு காலத்தில் ஒரு கிறிஸ்தவப் பண்டிகையை கொண்டாடினால், பிரிட்டன் மட்டும் அதே பண்டிகையை வேறு ஒரு நாளில் கொண்டாடியது அல்லது கொண்டாட வேண்டிய சூழல் ஏற்பட்டது.

5. கிரிகோரியன் காலண்டர் நடைமுறைக்கு வருவதற்கு முன் எப்போது புத்தாண்டு

இப்போது தமிழகத்தில் எது தமிழ் வருடப் பிறப்பு என்கிற கேள்விக்கு பல தரப்பினரும் பலவிதமான பதில்களை கூறி வருகின்றனர். திராவிட முன்னேற்றக் கழகத் தரப்பினர், தை 1ஆம் தேதிதான் தமிழர் திருநாள் என்கிற வகையில் அதை புத்தாண்டாக கொண்டாடுகின்றனர். பொதுமக்களில் பலரும் சித்தரைமாதம் 1ஆம் தேதியை தமிழ் வருடப் பிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.

இப்படி கிரிகோரியன் காலண்டர் உலகம் முழுக்க ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன் பல நாடுகளும், பல தேதிகளில் புத்தாண்டை கொண்டாடினர். சில நாடுகள் கிறிஸ்துமஸ் தினத்தை புத்தாண்டாக கொண்டாடியது. அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகள் மார்ச் 25ஆம் தேதி புத்தாண்டாகக் கொண்டாடின. 1752 ஆம் ஆண்டு பிரிட்டன் உலகின் மிகப்பெரிய சாம்ராஜ்யமாக இருந்தபோது கிரிகோரியன் காலண்டரை பின்பற்ற தொடங்கியது. அதிலிருந்து உலகின் பல நாடுகள் கிரிகோரியன் காலண்டரையே பெரிய அளவில் பின்பற்றி புத்தாண்டைக் கொண்டாடத் தொடங்கினர்.

6. ஒவ்வொரு நான்காண்டுகளுக்கும் ஓராண்டு லீப் ஆண்டு.

ஜூலியன் காலண்டரில் நான்காண்டுகளுக்கு ஓராண்டு லீப் இயர் கட்டாயமாக ஒரு சுழற்ச்சியாக வைக்கப்பட்டிருந்தது. ஆனால் கிரிகோரியன் காலண்டர் முறையில் நான்காண்டுகளுக்கு ஓராண்டு லீப் ஆண்டாக வந்தாலும், அது நாட்களை அட்ஜஸ்ட் செய்து சூரிய நாட்காட்டியோடு ஒத்துப் போக செய்யவே வைக்கப்பட்டிருக்கிறது.

ஆண்டைக் குறிக்கும் என் '4'ஆல் முழுமையாக வகுபட்டால், அது லீப் ஆண்டு என்பர். உதாரணத்திற்கு 2022 என்கிற எண்ணை, நான்கால் வகுத்தால் 505.5 கிடைக்கும். இதுவே 2024 ஆம் ஆண்டை 4ஆல் வகுத்தால், 506 கிடைக்கும். 2024 முழுமையாக நான்காம் வகுக்கப்படுவதால் அது லீக் ஆண்டு என அடையாளம் கண்டு கொள்ளலாம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?