ரசீது Twitter
உலகம்

ரூபாய் 9 கோடிக்கு ஏலம் போன ஒரு பேப்பர் ரசீது - ஆச்சர்ய தகவல்

NewsSense Editorial Team

ஏராளமான கலைப்படைப்புகள் அவ்வப்போது ஏலத்தில் விற்கப்படுகின்றன. ஆனால் 'கண்ணுக்கே தெரியாத கலை' விற்கப்படுவதை நீங்கள் எப்போதாவது கற்பனை செய்திருக்கிறீர்களா? அதுவும் கிட்டத்தட்ட 1.2 மில்லியன் டாலர்களுக்கு…

உங்களால் இதை நம்ப முடியுமா எனத் தெரியவில்லை. ஆனால், இது உண்மை சம்பவம். 60 ஆண்டுக் காலப் பழமையான ரசீது ஏலத்தில் கிட்டத்தட்ட $1.2 மில்லியனுக்கு விற்கப்பட்டது. அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக 9 கோடி ரூபாய். இவ்வளவு பணம் போட்டு வாங்க அந்த ரசீதில் என்ன அப்படி இருக்கிறதென்றால் ஏதோ, கண்களுக்கே தெரியாத கலை இருக்கிறதாம்.

ஆமாம்… சமீபத்தில் நடந்த ஏலத்தில் இந்த சம்பவம் உண்மையாகவே நடந்திருக்கிறது. நினைத்துக்கூடப் பார்க்க முடியாத இந்தச் சம்பவம் நிஜமாகவே நடந்ததால், கலை ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஃபிரெஞ்சு கலைஞரான Yves Klein-இன் "கண்ணுக்குத் தெரியாத கலை"க்கான ரசீது, 60 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழமையானது என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இது ஒரு தனியார் ஐரோப்பிய சேகரிப்பாளரால் $1,151,467.40 ஏலத்தில் வாங்கப்பட்டது. யுனைடெட் பிரஸ் இன்டர்நேஷனல் படி, இது எதிர்பார்க்கப்பட்டதைவிட ($551,000) அதிகமாக இருந்தது.

டிசம்பர் 7, 1959 தேதியிட்ட இந்த ரசீது, க்ளீனின் கற்பனை கலைத் தொடரான ‘Zones of Immaterial Pictorial Sensibility’யின் ஒரு பகுதியாகும். கலைபொருட்கள் சேகரிப்பு நிறுவனமான Sotheby-யின் படி, அதனை வாங்குபவர்கள் ஆட்கள் இல்லாத காலியான அறைகளை அதன் தூய நிலையில் காண முடியுமாம்.

இந்த தொழில்நுட்பத்தின் மூலம் என்ன ஆய்வுகள் சாத்தியமாகும் என்பதற்கு யவ்ஸ் க்ளீனின் படைப்புகள், ‘அசல் முன்மாதிரியாகத் தனித்து நிற்கின்றன’ என்று ஏலப்பட்டியல் கூறியுள்ளது.

ரசீதை முதலில் வாங்கியவர் பழங்காலப் பொருட்களின் விற்பனையாளர், ‘ஜாக் குகல்’. இது முன்னாள் கேலரி உரிமையாளர் லோயிக் மல்லேவின் "ஒன்லி டைம் வில் டெல்" சேகரிப்பில் இருந்து ஏலம் விடப்பட்ட 100-க்கும் மேற்பட்ட பொருட்களின் ஒரு பகுதியாகும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?