ஈரான் Canva
உலகம்

ஈரான் நாடு குறித்த ஆச்சர்யமான இந்த 8 உண்மைகள் தெரியுமா?

Antony Ajay R

வளைகுடா நாடுகள் அல்லது மத்திய கிழக்கு நாடுகளில் முக்கியமான நாடு ஈரான். மேற்கு ஆசியாவில் இருக்கும் ஈரானுக்கு பெரிசியா என்ற பெயரும் உள்ளது. சில ஈரானிய படங்களைத் தாண்டி நமக்கு ஈரான் குறித்து அதிகம் தெரியாது. அரபு நாடுகளினின்று தனித்திருக்கும் சுவாரஸ்யமான நாடான ஈரான் குறித்து 8 தகவல்களை இங்குக் காணலாம்.

உலகின் தொன்மையான நாகரீகங்களில் ஒன்று ஈரான்

சுமார் 7000 ஆண்டுகளுக்கு முன்னிருந்து இங்கு நாகரீக மக்கள் வசிக்கின்றனர். கிமு 3200-2800 இல் புரோட்டோ-எலமைட் மற்றும் எலாமைட் போன்ற இராஜாங்கங்கள் ஈரானில் உருவாகியிருக்கின்றன. கலாச்சாரம் மற்றும் வரலாற்றில் ஆர்வம் உள்ளவர்கள் இங்குக் காண்பதற்குப் பல இடங்கள் இருக்கின்றது.

ஈரானியர்கள் அரேபியர்கள் அல்ல

zoroastrian temple

ஈரானியர்கள் குறித்து பொதுவாக முன்வைக்கப்படும் ஒரு தவறான கருத்து அவர்கள் அரேபியர்கள் என்பது. மேற்குலகில் பலர் அவ்வாறு தான் குறிப்பிடுகின்றனர். ஆனால் இன ரீதியிலும் வம்சாவளி ரீதியிலும் ஈரானியர்கள் அரேபியர்களிடமிருந்து வித்தியாசப்படுகின்றனர்.

இஸ்லாம் ஈரானில் ஆதிக்கம் செலுத்துவதற்கு முன்னிருந்த பெரிசியர்கள் Zoroastrian என்ற பார்சீய மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தனர். ஈரானியர்களின் பெரும்பான்மை பெரிசிய மொழியும் அரபுமொழியிலிருந்து மாறுபடுகிறது. பெரிசிய மொழித் தவிர இன்னும் சில ஈரானிய மொழிகளும் அங்குப் பேசப்படுகிறது.

பெட்ரோல் முதல் குங்குமப்பூ வரை

இரானிய கம்பளங்கள்

ஈரான் அதிக பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்று என்பதை நாம் அறிவோம். பொருளாதாரத்தில் பெட்ரோல் முக்கியப்பங்கு வகித்தாலும் ஈரானின் தரை விரிப்புகளும் கம்பளங்களும் அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களாக இருக்கின்றன. அத்துடன், உலகிலேயே அதிகம் குங்குமப்பூ ஏற்றுமதி செய்யும் நாடாகவும் ஈரான் திகழ்கிறது. உலகின் குங்குமப்பூ உற்பத்தி 70 விழுக்காடு ஈரானில் தான் நடக்கிறது.

ஈரான் ஓர் இளமையான நாடு

ஈரானில் 8.4 கோடி மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் 30 வயதுக்கும் கீழே உள்ளவர்கள். கிட்டத்தட்ட 60 விழுக்காடு மக்கள் 30 வயதுக்கும் கீழே உள்ளவர்கள் என தரவுகள் கூறுகின்றன.

பெரும்பாலும் பாலைவனங்கள் நிறைந்த நாடு

பாலைவனங்கள்

ஈரானில் 7% மட்டுமே காடுகள் இருக்கின்றன. எனினும் உலக அளவில் பல்லுயிர் தன்மை கொண்ட நாடுகளில் 13வது இடத்தைப் பிடித்திருக்கிறது ஈரான்.

Dasht-e-Kavir மற்றும் Kavir-e-Lu ஆகிய இரு பாலைவனங்கள் ஈரானில் காணப்படுகின்றன. இவை உலகின் வறண்ட பாலைவனங்களாக இருக்கின்றன.

24 உலக பாரம்பரிய சின்னங்களைக் கொண்டது

Historic City of Yazd,

வரலாறு மற்றும் கலாச்சாரத்தில் ஆர்வமிருக்கும் நபர்கள் சுற்றிப்பார்க்க பல இடங்கள் ஈரானில் இருக்கின்றன என ஏற்கெனவே கூறியிருந்தேன் அல்லவா? இங்கு யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட 24 இடங்கள் உள்ளன.

பெர்செபோலிஸ், வரலாற்று நகரமான யாஸ்த், கோலஸ்தான் அரண்மனை மற்றும் ஜமே மசூதி ஆகியவை அதிகம் ஈர்க்கக் கூடிய இடங்களாக இருக்கின்றன.

ஈரானி சாய் ( Irani Chai )

Irani Chai

ஈரான் மக்களும் நம்மைப் போலவே தேநீர் விரும்பிகள். பால் கலந்த தேநீரை பிஸ்கட்டுடன் பரிமாறுவது அவர்களின் பாரம்பரியம். அங்குள்ள மக்களுடன் பழக வேண்டுமானால் ஒரு இரானிய தேநீரை சேர்ந்து பருகினால் போதும்.

பாதி இணையத்தை மட்டுமே பயன்படுத்த முடியும்

Ban

இரானிய மக்கள் சமுக வலைத்தளங்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் VPN இல்லாமல் அவர்களால் 50 விழுக்காடு இணையதளங்களைப் பயன்படுத்த முடியாது. உலகின் 500 முன்னணி தளங்கள் அதில் அடங்கும்.

மொத்தமாக 15000 தளங்கள் அங்குத் தடை செய்யப்பட்டிருக்கின்றன. கடந்த 2008ம் ஆண்டு Facebook மற்றும் Youtube உள்ளிட்ட தளங்கள் மொத்தமாகத் தடை செய்யப்பட்டன. கொஞ்சம் கராரான அரசு தான்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?