Anaconda Twitter
உலகம்

Anaconda : உலகின் மிகப்பெரிய பாம்பு இது இல்லையா? அனகோண்டா பற்றிய 9 ஆச்சரிய உண்மைகள்!

Priyadharshini R

அனகோண்டாக்களை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இதற்கு திரைப்படங்களை முக்கிய காரணமாக சொல்லலாம்.

அனகோண்டா தான் உலகிலேயே பெரிய பாம்பு வகை, தண்ணீருக்குள் நீண்ட நேரம் இருக்க முடியாது என்றெல்லாம் பல விஷயங்களை கேள்விப்பட்டிருப்போம்.

ஆனால் அனகோண்டா ஒரே மூச்சில் 10 நிமிடங்கள் வரை நீருக்கடியில் இருக்கும் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். அனகோண்டா குறித்த பல திடுக்கிடும் உண்மைகளை இங்கு பார்க்கலாம்.

அனகோண்டாக்கள் போவா குடும்பத்தைச் சேர்ந்தவை

அனகோண்டாக்கள் பெரிய, விஷமற்ற பாம்புகளின் குடும்பத்தைச் சேர்ந்தவை, இவை கூட்டாக போவாஸ் என்று அழைக்கப்படுகின்றன. அனகோண்டாவில் இன்று நான்கு இனங்கள் உள்ளன

  • பச்சை அனகோண்டாக்கள்

  • மஞ்சள் அனகோண்டாக்கள்

  • பொலிவியன் அனகோண்டா

  • கரும்புள்ளிகள் கொண்ட அனகோண்டா

பிரேசில், கொலம்பியா, வெனிசுலா, பெரு, ஈக்வடார் உள்ளிட்ட பகுதிகளின் ஈரநிலங்கள் மற்றும் ஆற்றுப் படுகைகளில் பச்சை அனகோண்டாக்கள் வாழும்

பச்சை அனகோண்டா உலகின் மிகப்பெரிய பாம்பு, ஆனால் மிக நீளமானது அல்ல

பெரிய அனகோண்டாக்கள் பெரும்பாலும் 200 பவுண்டுகளுக்கு மேல் எடையுள்ளதாக இருக்கும் அதாவது 90 கிலோ வரை இருக்கும்.

ஆனால் பூமியில் மிக நீளமான பாம்பு ரெட்டிகுலேட்டட் பைதான் என்கின்றனர். அவை சராசரியாக 25 அடி நீளம் இருக்குமாம்.

அனகோண்டாக்கள் பதுங்கி வேட்டையாடுபவை

மற்ற விலங்களை போல அனகோண்டாக்களும் தங்களுக்கான இறையை பதுங்கி வேட்டையாடுமாம்.

அனகோண்டாக்கள் விரும்பி உண்பவை

பச்சை அனகோண்டாக்கள் பறவைகள், அவற்றின் முட்டைகள், பிற ஊர்வன, மீன், பாலூட்டிகள் உட்பட கிட்டத்தட்ட எல்லாவற்றையும் உண்ணும். காட்டுப் பன்றி, மான் மற்றும் செம்மறி போன்ற பெரிய விலங்குகளை கூட சாப்பிடுமாம்.

கெய்மன்கள் தென் அமெரிக்க நதிகளை பூர்வீகமாகக் கொண்ட முதலை போன்ற நீர்வாழ் ஊர்வனங்கள். கெய்மனின் பல இனங்கள் சுமார் 5 அடி முதல் 13 அடி வரை நீளம் கொண்டவை, அவை அனகோண்டாக்களுக்கு இரையாகின்றன.

அனகோண்டாக்கள் கெய்மன்களை வேட்டையாடும் போது குறிப்பிடத்தக்க காயங்களை பெறுகிறது.

அனகோண்டாக்கள் அளவில் வித்தியாசம்

ஒரே இனத்தைச் சேர்ந்த அனகோண்டாக்களே அளவில் வித்தியாசப்படுகின்றன. ஆண் அனகோண்டா சராசரியாக 10 அடி நீளமும் பெண் வகை அனகோண்டாக்கள் 17 அடி முதல் 25 அடி நீளம் வரை வளருமாம்.

ஒரு பெண் அனகோண்டா 30க்கும் மேற்பட்ட குட்டிகளை தாங்குமாம்.

அனகோண்டாக்கள் ஒரு நேரத்தில் 10 நிமிடங்கள் வரை நீரில் மூழ்கி இருக்கும்.

அனகோண்டாக்கள் மனிதர்களை உண்ணுமா?

பச்சை அனகோண்டா மனிதனைக் கொன்று தின்னும் என்பதில் சந்தேகமில்லை. அந்த அளவிற்கு அதன் எடை இருக்கும். ஆனால் இன்றுவரை எந்த அனகோண்டாவும் மக்களை உட்கொண்டதாக சரியான அறிக்கைகள் எதுவும் இல்லை.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?