tik tok NewsSense
உலகம்

விவாகரத்து குறித்து டிக்டாக்கில் பேசிய இளம்பெண்ணை கொலை செய்த கணவர்

Gautham

அமெரிக்காவின் சிகாகோ நகரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தொடர்ந்து தன் விவாகரத்து குறித்து டிக்டாக் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வந்ததற்காக, அவரது முன்னாள் கணவரால் கொலை செய்யப்பட்டு, அவரும் தற்கொலை செய்து கொண்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

29 வயதான சானியா கான், 36 வயதான ரஹீல் அஹ்மத் உடனான திருமணத்தை சில மாதங்களுக்கு முன்பு தான் முறித்துக் கொண்டார். தன் மண முறிவு குறித்து தொடர்ந்து டிக்டாக்கில் "@geminigirl_099 / Sania" என்கிற கணக்கில் பதிவு செய்து வந்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அக்கணக்கு அவரது வாழ்கையைப் பிரதிபலிப்பதாக, அவருடைய சொந்த விஷயங்களோடு ஒத்துப் போவதாக இருந்தது.

Husband and wife (Rep)

சானியா கான் மற்றும் ரஹீல் அஹ்மத் இருவருக்கும் இடையிலான விவாகரத்து எந்த அளவுக்கு முன்னெடுத்துச் செல்லப்பட்டது எனத் தெளிவாகத் தெரியவில்லை. சானியாவின் இரு நண்பர்கள், அவருடைய விவாகரத்து கிட்டத்தட்ட கடைசி காலகட்டத்தை நெருங்கிவிட்டது என சிகாகோவின் சன் டைம்ஸ் என்கிற பத்திரிகையிடம் கூறியுள்ளனர். ஆனால் காவல்துறையோ, அவர்களுக்கு இடையிலான மணமுறிவு இன்னும் ஆவணங்கள் அடிப்படையில் முழுமை பெறவில்லை எனக் கூறியுள்ளனர்.

தன் முன்னாள் கணவர் நச்சுத்தன்மை வாய்ந்தவராக இருப்பதாகவும், தன் குடும்பத்தினர் விவாகரத்து செய்து கொள்ளாமல் வாழ்வில் புதிய அத்தியாயத்தைத் தொடங்குமாறு அழுத்தம் கொடுத்ததாக அவரே இணையத்தில் பதிவிட்டுள்ளார். ஆனால் அதை எல்லாம் கடந்து இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே தன் கணவரைப் பிரிந்து பல மைல் கடந்து சிகாகோவில் குடியேறினார் சானியா கான்.

divorce

டிக்டாக் பதிவுகள்

டிக்டாக் சமூக வலைத்தளத்தில் சானியா கான் தன் திருமண முறிவு சார்ந்த அனைத்து விஷயங்களையும் பதிவிட்டார். விவாகரத்து மூலம் ஏற்படும் வலி தொடங்கி அதன் மூலம் ஏற்படும் அவமானங்கள், இதை எல்லாம் கடந்து புதிதாக வாழ்கையைத் தொடங்கும் செயல்முறை என எல்லாவற்றையும் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார். ஆயிரக்கணக்கானோர் அவரைப் பின்தொடர்ந்து கேட்டனர்.

ஒரு சுயாதீனப் பெண்ணாக வாழ்வது மற்றும் புகைப்படக் கலைஞராக பணியாற்றுவதன் மூலம் மீண்டும் தன் மீதான அதிகாரத்தைத் தான் பெற்றுக் கொண்டதாகப் பதிவிட்டிருந்தார்.

2022 ஜூன் மாத மத்தியில் சானியா கான் தன் சமூக வலைத்தளத்தில் #breakupglowup" என்கிற ஹேஷ்டேகோடு அவருடைய மனைவி மற்றும் அவருடைய முன்னாள் மனைவி எனப் பதிவிட்டிருந்தார். அப்படத்தில் இருவரும் கணவன் மனைவியாக இருந்த போது சாதாரணமாக உடை உடுத்தி இருந்ததும், திருமண முறிவுக்குப் பிறகு நேர்த்தியாகவும் கம்பீரமாகவும் வண்ணமயமாக்க ஆடை உடுத்தி இருந்ததும் தெரிந்தது.

ஜூன் 14ஆம் தேதி, தன்னுடைய 29ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் விதத்தில் ஒரு டாட்டோ குத்திக் கொள்ளவிருப்பது தொடர்பாக இணையத்தில் விவாதித்தார் சானியா கான். எப்போதும் மற்றவர்களின் சுகத்துக்கு வாழ்ந்து கொண்டிருக்கும் 28 வயதான தெற்கு ஆசிய பெண்ணாக நீங்கள் உங்கள் மீதான அதிகாரத்தைத் திரும்பப் பெறும் போது... என அப்பதிவு தொடர்கிறது.

மற்றொரு பதிவில் தன் விவாகரத்து குறித்து தன் குடும்பத்தினர் என்ன கருதுகிறார்கள் என்பதைப் பற்றி விளக்கியுள்ளார். அதில் #muslimparents என்கிற ஹேஷ்டேக் பயன்படுத்தியுள்ளார்.

நான் என் கணவரைப் பிரிந்தால் சைத்தானை வெல்ல வைப்பதாகப் பொருள் என என் குடும்ப உறுப்பினர்கள் என்னிடம் கூறினர். நான் பாலியல் தொழில் செய்பவர்களை போன்று ஆடை அணிவேன் என்றும், நான் என் சொந்த ஊருக்குச் சென்றால் அவர்கள் தங்களைத் தாங்களே துன்புறுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொள்வார்கள் என்றும் கூறியதாக அப்பதிவு நீள்கிறது.

சானியா கானின் மரணம் தெற்கு ஆசிய வம்சாவளியினர் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திருமண முறிவு குறித்தும், வீட்டில் பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறை குறித்த விவாதங்கள் தொடங்கியுள்ளன.

சானியா கான் தன் திருமணத்திலிருந்து வெளியேறிய பின், அவர் வாழ்கையில் தோற்றுவிட்டது போல தெற்கு ஆசிய இஸ்லாமிய சமூகத்தினர் அவரை உணரச் செய்தாக அவரே கூறினார். ஆனால் சானியா கானோ, ரஹீல் அவரைக் கொலை செய்து, தானும் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு வரை, டிக்டாக் மூலம் தனக்கான ஆதரவையும், ஆறுதலையும் தேடிக் கொண்டார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?