Adani: உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்ட Forbes - டாப் 10ல் யார் யார்? அதானி இடம் என்ன? twitter
உலகம்

Adani: உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்ட Forbes - டாப் 10ல் யார் யார்? அதானி இடம் என்ன?

Keerthanaa R

உலகப் பணக்காரர்கள் பட்டியலின் Real Time Billionaires தரவரிசையை வெளியிட்டுள்ளது Forbes பத்திரிகை. இதில் முதல் பத்து இடங்களில் ஒரே ஒரு இந்தியரின் பெயர் உள்ளது.

உலகின் டாப் 10 பணக்காரர்களில் 9வது இடத்தில் வீற்றிருக்கிறார் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி.

ஹிண்டன்பெர்க் அறிக்கை வெளியிடப்பட்ட பிறகு உலகப் பணக்காரர்களில் ஒருவராகவும் இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரராகவும் இருந்த கௌதம் அதானி தனது சொத்து மதிப்பை இழந்தார்.

முதலில் உலகின் டாப் 10 பணக்காரர் பட்டியலில் இருந்து வெளியேறினார். பின்னர் இந்தியாவின் இரண்டாவது பணக்காரர் அம்பானியால் பின்னுக்கு தள்ளப்பட்டார்.

நிகழ்நேர பில்லியனர்கள் பட்டியலை Forbes பத்திரிகை வெளியிட்டுள்ளது. நிகழ்நேர பணக்காரர்கள் பட்டியலில் சரிந்துள்ளார் அதானி.

தற்போது பட்டியலில் டாப் 10ல் இருப்பவர்கள் யார்?

பெர்னார்ட் அர்னால்ட்

பெர்னார்ட் அர்னால்ட்

வயது: 73

நிறுவனம்: LVMH Luxury Goods

சொத்து மதிப்பு: 213.7 பில்லியன் டாலர்கள்

குடியுரிமை: பிரான்ஸ்

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

வயது: 51

நிறுவனம்: டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ்

சொத்து மதிப்பு:178.3 பில்லியன் டாலர்கள்

குடியுரிமை: அமெரிக்கா

ஜெஃப் பெசாஸ்

ஜெஃப் பெசாஸ்

வயது: 59

நிறுவனம்: அமேசான்

சொத்து மதிப்பு: 126.3 பில்லியன் டாலர்கள்

குடியுரிமை: அமெரிக்கா

லேரி எல்லிசன்

லேரி எல்லிசன்

வயது: 78

நிறுவனம்: ஆரக்கிள் (Oracle)

சொத்து மதிப்பு: 111.9 பில்லியன் டாலர்கள்

குடியுரிமை: அமெரிக்கா

வாரன் புஃபே

வயது: 92

நிறுவனம்: பெர்க்‌ஷையர் ஹாத்தவே

சொத்து மதிப்பு: 108.5 பில்லியன் டாலர்கள்

குடியுரிமை: அமெரிக்கா

பில் கேட்ஸ்

பில் கேட்ஸ்

வயது: 67

நிறுவனம்: மைக்ரோசாப்ட்

சொத்து மதிப்பு: 104.5 பில்லியன் டாலர்

குடியுரிமை: அமெரிக்கா

கார்லோஸ் ஸ்லிம் ஹேலு

வயது: 83

நிறுவனம்: ஃபண்டேஷியன் கார்லோஸ் ஸ்லிம் (டெலிகாம்)

சொத்து மதிப்பு: 91.7 பில்லியன் டாலர்

குடியுரிமை: அமெரிக்கா

லேரி பேஜ்

வயது: 49

நிறுவனம்: கூகுள் (துணை நிறுவனர்)

சொத்து மதிப்பு: 85.8 பில்லியன் டாலர்கள்

குடியுரிமை: அமெரிக்கா

Mukesh Ambani

முகேஷ் அம்பானி

வயது: 65

நிறுவனம்: ரிலையன்ஸ் (டெலிகம்யூனிகேஷன்ஸ்)

சொத்துமதிப்பு: 83.7 பில்லியன் டாலர்

குடியுரிமை: இந்தியா

செர்கே பின்

வயது: 49

நிறுவனம்: கூகுள் (துணை நிறுவனர்)

சொத்து மதிப்பு: 82.2 பில்லியன் டாலர்கள்

குடியுரிமை: அமெரிக்கா

இவர்களை தொடர்ந்து 16வது இடத்தில் இருக்கிறார் கௌதம் அதானி. தற்போதைய நிலவரப்படி அதானியின் சொத்து மதிப்பு 68.5 பில்லியன் டாலர்கள். இது தொடர்ந்து சரிவு நிலையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?