ஆப்கானிஸ்தான் : பெண்கல்வியை ஒடுக்கும் தாலிபான்களுக்கு சவால் விடும் ஹசாரா பெண்கள்!
ஆப்கானிஸ்தான் : பெண்கல்வியை ஒடுக்கும் தாலிபான்களுக்கு சவால் விடும் ஹசாரா பெண்கள்! டிவிட்டர்
உலகம்

ஆப்கானிஸ்தான் : பெண்கல்வியை ஒடுக்கும் தாலிபான்களுக்கு சவால் விடும் ஹசாரா பெண்கள்!

Antony Ajay R

கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்தது முதல் பல நெருக்கடிகளை அந்த நாட்டு மக்கள் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக பெண்கள் மீதான அடக்குமுறை நாம் நினைத்துப்பார்க்க முடியாத அளவு அதிகரித்திருக்கிறது. பெண்கள் கல்வி பெறுவதை அடியோடு வேரறுக்க தாலிபான்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அமெரிக்க அரசின் உதவியோடு ஆப்கானிஸ்தான் அரசு ஆட்சி செய்து வந்த போது, பெண்கள் ஆசிரியர் முதல் நீதிபதி வரை பல வேலைகளில் இருந்தனர், கல்வி கற்றனர், சுதந்திரமாக வாழ்ந்தனர். ஆனால் தாலிபான்கள் ஆட்சியில் நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது.

தாலிபான் ஆட்சியில் புர்கா அணியாமல் வெளியே வரும் பெண்கள், காவலர்களால் தாக்கப்பட்டார்கள். தனியே நடமாடும் பெண்களுக்கு தண்டனைகள் வழங்கப்பட்டது. குடும்பத்தினர் இல்லாத ஆண்களுடன் பேசிய பெண்கள் மீது கல்லெறியப்பட்டது.

வேலைக்கு சென்ற பெண்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த மார்ச் மாதம் அடிப்படைவாத அரசு பெண் கல்விக்கு முற்றிலுமாக தடை விதித்தது. 5ம் வகுப்புக்கு மேல் பெண்கள் கல்வி கற்கக் கூடாது என்று சட்டம் வகுத்தனர்.

ஹசாரா மக்களை தாலிபான்கள் இனப்படுகொலை செய்வதாக சர்வதேச அளவில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஆப்கான் ஆட்சியில் பெண்களின் நிலையை ஐநாவின் ஆப்கானுக்கான சிறப்பு பிரதிநிதி, “தலிபான்கள் ஆட்சியில் பெண்கள் மீது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. தலிபான்களின் முந்தைய ஆட்சியைவிட இப்போது நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. ஆப்கான் பெண்களுக்கு எதிரான அநீதியை சர்வதேச சமூகம் கண்டிக்க வேண்டும். அவர்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுக்க வேண்டும்’’ என்று கூறினார்.

ஆனால் தாலிபான்களை எதிர்த்து ஆப்கானின் ஹசாரா பழங்குடி பெண்கள் கல்விகற்று வருகின்றனர்.

ஹசாரா பழங்குடி மக்கள் சார்பில் ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான பள்ளிகள், கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. ஹசாரா பழங்குடிகள் ஷியா முஸ்லீம்களாக இருந்தாலும் இந்த கல்வி நிலையங்களில் சன்னி முஸ்லீம் பெண்களும் பணியாற்றுகின்றனர். சில பள்ளிகளில் ரகசியமாக பெண்கள் கல்விகற்று வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன. இது தொடர்பாக தாலிபான் அரசு கல்வி நிலையங்களில் சோதனை நடத்தி வருகின்றது.

கடந்த செப்டம்பர் 30-ம் தேதி தலைநகர் காபூலில் ஹசாரா பழங்குடிகள் நடத்தும் பள்ளியை குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 43 மாணவிகள் உட்பட 53 பேர் உயிரிழந்தனர். ஹசாரா பெண்கள் கல்வி கற்பதை தடுக்கவே தலிபான்கள் இந்த வெடிகுண்டு தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

எனினும் அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல் ஹசாரா பழங்குடி பெண்கள் தங்கள் கல்வியை முன்னெடுக்கின்றனர். ஹசாரா பழங்குடி மக்களின் கல்வியை அச்சுறுத்துவதுடன் அவர்கள் வசிக்கும் பகுதிகளையும் புறக்கணித்து வருகிறது தாலிபான் அரசு. அவர்களுக்கு குடிநீர், சாலைகள் போன்ற எந்த வசதிகளும் செய்துகொடுக்கப்படுவதில்லை.

ஹசாரா மக்கள் மீது குறிப்பாக பெண்கள் மீது தாலிபான்கள் நடத்தும் தாக்குதல்களை இனப்படுகொலையாக அறிவிக்க வேண்டும் என்றும், சர்வதேச நாடுகள் இது தொடர்பாக குரல்கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

ஆப்கானிஸ்தான் மக்கள் தொகையில் 10% பேர் ஹசாரா பழங்குடிகள். ஹசாரா பெண்கள் தங்கள் வீடுகளிலிருந்து தொலைவிலிருக்கும் கல்வி நிலையங்களுக்கு மோட்டார் வாகனங்களில் சென்று வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?

உலகில் மிகக் குறைவாகப் பார்வையிடப்பட்ட நாடுகள் இவைதான்!