தொழில்நுட்பம் தான் இன்று மனிதர்களின் அறிவையும், கற்றல் திறனையும், பாடங்கள் பயிற்றுவிப்பதிலும், பெரிய பெரிய ஆராய்ச்சிகளையும் அடுத்த தளத்துக்கு எடுத்துச் சென்று கொண்டிருக்கிறது.
அதில் ஒன்று தான் இந்த Chat GPT என்றழைக்கப்படும் சாட் ஜெனரேட்டிவ் ப்ரீ - டிரெயிண்ட் டிரான்ஸ்ஃபார்மர்.
நாம் கொடுக்கும் உள்ளீட்டைப் புரிந்து கொண்டு, இயற்கையான மொழியில் சொற்களைக் கோர்த்து விடை கொடுக்கும் ஒரு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் தான் இந்த ஜி பி டி.
முதலில் ஜி பி டிக்கு நிறைய தரவுகள் குறிப்பாக வரி வடிவ, சொல் வடிவத் தரவுகள் கொடுக்கப்படும். பிறகு ஜி பி டி, டிரான்ஸ்ஃபார்மர் என்கிற அல்காரிதத்தைப் பயன்படுத்தி ஒரு மனிதன் விடையளிப்பது போல, தன்னிடம் இருக்கும் தரவுகளைப் பயன்படுத்தி பதில் சொல்லக் கற்றுக்கொள்ளும்.
உதாரணத்துக்கு: இன்றைய வானிலை எப்படி இருக்கிறது என ஜி பி டி-யிடம் நீங்கள் கேட்டால்... "இன்றைய வானிலை தெளிவாகவும், 75 டிகிரி ஃபேரன்ஷீட் செல்ஷியஸ் தட்பவெப்பநிலை உடன் வெப்பமாகவும் இருக்கிறது" என விடையளிக்கலாம்.
எந்த அளவிற்கு Chat GPTயின் எழுச்சி இருக்கிறதோ, அந்த அளவுக்கு அதன் மீது சர்ச்சையும் எழுந்து வருகிறது.
சமீபத்தில் கூட இத்தாலி நாட்டின் தரவுகள் பாதுகாப்பு ஆணையம், ஏஐ சாட்பாட் சாட்ஜிபிடிக்கு தடை விதித்தது.
மற்ற பயனாளிகள் உரையாடலை காண்பதற்கு வழி செய்த தரவு மீறல் புகார் தொடர்பான விசாரணையில் இத்தாலிய அமைப்பு, இத்தாலிய பயனாளிகள் தரவுகளை, சாட்ஜிபிடி பின்னே உள்ள ஓபன் ஏஐ நிறுவனம் கையாளக்கூடாது எனத் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக 20 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும், இல்லை என்றால் 21.7 மில்லியன் வரை அபராதத்தை எதிர்கொள்ள நேரிடும் என அந்த அமைப்பு நிறுவனத்தை எச்சரித்துள்ளது.
சாட்ஜிபிடியை பயன்படுத்த வயது வரம்பு இல்லாதது மற்றும் தவறான தகவல்களை அது பதிலாக அளிக்கும் வாய்ப்பு பற்றியும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாட்ஜிபிடிக்கு தடை விதித்துள்ள நாடு இத்தாலி மட்டும் அல்ல. வடகொரியா, ஈரான், ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளிலும் சாட்ஜிபிடிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சாட்ஜிபிடி போன்ற ஏஐ சேவைகளை பயன்படுத்தி, அமெரிக்கா தவறான தகவல்களை பரப்பி, சர்வதேச உரையாடலை வழிநடத்தலாம் என்ற கவலை சீனாவுக்கு இருக்கிறது.
வெளிநாட்டு இணையதளங்கள், செயலிகளுக்கு எதிரான கடுமையான விதிமுறைகள் மற்றும் சீனா- அமெரிக்கா உறவில் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாகவும் சீனா, சாட்ஜிபிடிக்கு தடை விதித்துள்ளது.
சாட்ஜிபிடி போன்ற ஏஐ சேவைகள் தவறாக பயன்படுத்தப்படலாம் என்று ரஷ்யா எண்ணுகிறது.
மேலும், தற்போது மேற்கத்திய நாடுகளுடன் ஏற்பட்டுள்ள மோதலைக் கருத்தில் கொண்டு, ரஷ்யா சாட்ஜிபிடிக்கு அனுமதி அளிக்க விரும்பவில்லை.
எப்போதுமே ஈரானில் கடுமையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது.
அந்நாட்டு அரசு சர்வதேச இணையதளங்கள் கண்காணிக்கிறது. மேலும், அமெரிக்கா- ஈரான் இடையிலான உறவும் அவ்வளவு சுமுகமாக இல்லை. இதனிடையே, அமெரிக்க நிறுவன சாட்பாட் சேவைக்கு ஈரானில் அனுமதி கிடைக்கவில்லை.
வடகொரியாவில் இணைய பயன்பாடு தீவிரமாக கட்டுப்படுத்தப்பட்டு பயனாளிகள் ஆன்லைன் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன. எனவே, இந்நாட்டில் சாட்ஜிபிடி தடை செய்யப்பட்டதில் வியப்பில்லை.
கியூபாவிலும் இணைய பயன்பாடு அரசால் கட்டுப்படுத்தப்படுகிறது. பல இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. சாட்ஜிபிடியையும் பொதுமக்கள் அணுக முடியாது.
கடுமையான இணைய தணிக்கைச் சட்டங்களைக் கொண்ட மத்திய கிழக்கில் உள்ள நாடான சிரியாவில் பல இணையதளங்கள், சேவைகளுக்கு அனுமதி இல்லை.
இதே காரணங்களுக்காக சாட்ஜிபிடிக்கும் அனுமதி இல்லை.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust