Yukio Shige: 800 பேரின் உயிரைக் காப்பாற்றிய 79 வயது முதியவர் - நெகிழவைக்கும் கதை ட்விட்டர்
உலகம்

Yukio Shige: 800 பேரின் உயிரைக் காப்பாற்றிய 79 வயது முதியவர் - நெகிழவைக்கும் கதை!

Keerthanaa R

மனிதன் தன் வாழ்வில் அதிகபட்சமாக ஆசைப்படுவது, அன்புடன் தன்னை அரவணைத்துக்கொள்ள ஒரு துணையை தான். அது எந்த இடத்திலும் கிடைக்காமல் போகும்போது தான் வாழ்வை வெறுக்கிறான்.

அப்படி வாழ்க்கையின் மீது நம்பிக்கை இழந்தவர்களுக்கு 19 ஆண்டுகளாக தன் அரவணைப்பை அளித்து வருகிறார் ஜப்பானை சேர்ந்த யுகியோ சிகே. இவருக்கு வயது தற்போது 79. இந்த தள்ளாத வயதிலும் தினமும் தோஜின்போ மலைக்கு செல்கிறார்.

அங்கு தற்கொலை செய்துகொள்ள முயற்சிப்பவர்களை காப்பாற்றுவது தான் இவரின் வேலை.

இந்த தோஜின்போ மலையானது, கடல்மட்டத்திலிருந்து 80அடி உயரத்தில் உள்ளது. பிரபலமான சுற்றுலா தலம் மட்டுமல்லாமல், அதிகம் மக்கள் தற்கொலை செய்துகொள்ளும் இடமும் தான் இந்த தோஜின்போ மலைகள். ஒவ்வொரு ஆண்டும் இங்கிருந்து குதித்து குறைந்தது 25 பேர் இறக்கின்றனர்.

கையில் பைனாக்குலருடன், கிளவுஸ் மாட்டிக்கொண்டு, ஒரு தொப்பியையும் தலையில் போட்டுக்கொண்டு மலைகளில் சுற்றித்திரியும் யுகியோ, தற்கொலை செய்யப்போகும் தருவாயில் இருப்பவர்களை தேடுகிறார். அப்படி மனிதர்கள் கண்ணில் பட்டால் ஓடிச் சென்று அவர்களை அங்கிருந்து அழைத்து வருகிறார்.

உலகில் வளர்ந்த நாடுகளை ஒப்பிடுகையில், ஜப்பானின் தற்கொலை விகிதம் மற்ற நாடுகளை விட அதிகமாக இருப்பதாக தரவுகள் சொல்கின்றன.

ஜப்பானின் தேசிய போலீஸ் ஏஜென்சியின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் சுகாதாரம், தொழிலாளர் மற்றும் நல அமைச்சகம் மேற்கொண்ட ஆய்வில், கடந்த 2022ஆம் ஆண்டு தற்கொலைகள் அதிகரித்துள்ளதாகவும், 2021ஐ விட 297 பேர் அதிகமாக கடந்த ஆண்டு தற்கொலை செய்துகொண்டதாக அறியப்பட்டுள்ளது.

அதில் பெரும்பாலானோர் உடல்நலக் குறைபாடு இருந்தால் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

யுகியோ தற்கொலை எண்ணத்தின் விளிம்பில் நிற்கும் நபர்களை பேசி மனம் மாற்றி, அவர்களுக்கு பருக தேநீர் கொடுத்து, தங்க இடம் கொடுக்கிறார். முக்கியமாக அவர்களிடம் பேசி, மனம் திறக்க வைக்கிறார்.

“யாருக்குமே சாக விருப்பமிருக்காது. தங்களை புரிந்துகொள்ள இந்த உலகில் யாருமில்லை என்பதால் பாதிக்கப்பட்டிருபவர்கள் தான் இந்த் எண்ணத்தை கையில் எடுக்கின்றனர்” என்கிறார் யுகியோ

இப்படி இவர் கடந்த 19 ஆண்டுகளாக எடுத்துகொண்ட முயற்சியில், இதுவரை 789 பேரை காப்பாற்றியுள்ளார் யுகியோ. தன்னால் இயன்ற வரை இந்த உன்னத பணியை செய்துகொண்டிருப்பேன் என்றும் சொல்கிறார் யுகியோ!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?