இந்தோனேசியா Twitter
உலகம்

700 வயதான மரத்தில் நிர்வாண புகைப்படம்; பாலியை விட்டு வெளியேற்றப்பட்ட பெண் - நடந்தது என்ன?

Antony Ajay R

ரஷ்யாவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் அலினா பஸ்லீவாவும் அவரது கணவரும் இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவுக்குச் சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு உள்ளூர் மக்களால் புனிதமாகக் கருதப்படும் 700 வயது ஆலமரத்தில் அலினா நிர்வாணமாகப் புகைப்படமெடுத்ததால் அவர்கள் பாலியை விட்டு வெளியே அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்தோனேசியா அதிகமாக வெளிநாட்டுப் பயணிகளை ஈர்க்கக் கூடிய நாடாகும். மலைகள், ஆறுகள், காடுகள், கடற்கரைகள் என இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத் தலங்கள் அதிகம் காணப்படும் நாடான இந்தோனேசியாவில் பாலி மிகச் சிறப்பு வாய்ந்தது. இந்தோனேசியா ஒரு இஸ்லாமிய நாடாக இருந்தாலும் பாலியில் மட்டும் இந்துக்கள் அதிகம் வசிக்கின்றனர். அங்கு 10% மட்டுமே இஸ்லாமியர்கள்.

பாலி மக்கள் தங்களது கலாச்சாரம் மற்றும் கோவில்களின் புனிதத் தன்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள். பாலி, தெபனான் மாவட்டத்தில் உள்ள ஒரு 700 ஆண்டு பழமையான ஆலமரம் அங்குள்ள மக்களால் புனிதமாக வணங்கப்படுகிறது.

மரம்

அந்த மரத்தின் அழகைக் கண்டு வியந்த ரஷ்ய பெண்ணான அலினா நிர்வாணமாக அதனை தழுவிய படி போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்து அதனைச் சமுக வலைத்தளங்களில் பதிவேற்றியிருக்கிறார்.

அலினாவின் புகைப்படம் வைரலானது. பாலி மக்கள் தாங்கள் புனிதமாக கருதும் மரம் மாசு பட்டுவிட்டதாகக் கோபமுற்றுள்ளனர். பாலி குடியேற்ற அதிகாரி ஜமாருலி மணிஹுருக் அந்த தம்பதியை அங்கிருந்து வெளியேற்றியுள்ளார். அவர்கள் 6 மாதத்துக்கு அங்கு நுழைய முடியாதபடிக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

அலினா இழைத்த தவறுக்கு இந்திய மதிப்பில் 74 லட்சம் ரூபாய் அபராதம் மற்றும் 6 வருடம் சிறை தண்டனை அளிக்கப்படும் எனக் கூறப்பட்டது.

ஆனால், அலினா தான் செய்தது தவறு எனப் புரிந்து கொண்டு அந்த மரத்தின் முன் மன்னிப்புக் கேட்டுள்ளார். அத்துடன் அந்த இடத்தின் புனிதம், நம்பிக்கைகள் தனக்கு தெரியாது என்றும் கூறியுள்ளார். அவர் எடுத்த புகைப்படத்தையும் சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கியுள்ளார்.

இறுதியாக அலினாவும் அவரது கணவரும் பாலியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்தோனேசியாவில் சுற்றுலா செல்பவர்கள் சுற்றுலா விதிமுறைகள் குறித்து கவனமாக இருக்க வேண்டியது அவசியம். கடந்த ஆண்டு மட்டும் சுற்றுலா விதிமுறையை மீறியதாக 200 பேருக்கும் மேல் வெளியேற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?