Ben Affleck  Twitter
உலகம்

ஹனிமூனில் அயர்ந்து உறங்கிய ஹாலிவுட் நடிகர் - நெட்டிசன்கள் கருத்து என்ன?

கருத்து வேறுபாடு காரணமாக 2004ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். கடந்த ஏப்ரல் மாதம் பென் ஆஃப்லெக்-ஜெனிபர் லோபஸ் ஜோடிக்கு திருமண நிச்சயம் நடந்தது. தற்போது, இருவரும் மீண்டும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

Priyadharshini R

பேட் மேன் வேடத்தில் நடித்துப் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் பென் அப்லெக் மற்றும் பாடகியும் பிரபல நடிகையுமான ஜெனிபர் லோபஸ் ஆகிய இருவரும் 20 ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்தனர்.

கருத்து வேறுபாடு காரணமாக 2004ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். அதன் பின்னர் ஜெனிபர் லோபஸ் மூன்று முறை திருமணம் செய்து விவாகரத்துப் பெற்றார்.

அதேபோல் ஜெனிபர் கார்னரை திருமணம் செய்த பென் அப்லெக் 2018ஆம் ஆண்டு அவரை பிரிந்தார்.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் பென் ஆஃப்லெக்-ஜெனிபர் லோபஸ் ஜோடிக்கு திருமண நிச்சயம் நடந்தது. தற்போது, இருவரும் மீண்டும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். தன்னைவிட 4 வயது இளையவரான நடிகர் பென் அப்லெக்கை சமீபத்தில் திருமணம் செய்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் உள்ள செய்னி ஆற்றில் சுற்றுலா கப்பல் ஒன்றில் தேனிலவு கொண்டாட மனைவி ஜெனிபர் உடன் பென் அப்லெக் சென்றுள்ளார். அப்போது அந்த சொகுசு கப்பலில் இருந்த ஒரு நாற்காலியில் அப்படியே அமர்ந்தப்படி பென் அப்லெக் அயர்ந்து உறங்குகிறார்.

இதுகுறித்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பல்வேறு கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர்.

ஒருவர், அந்த மனிதரை அமைதியில் ஆழ்ந்து தூங்க விடுங்கள் எனத் தெரிவித்து சிரிப்பு எமோஜிக்களுடன் பதிவிட்டு உள்ளார்.

மற்றொருவர், கல்லூரி காலத்தில் கணக்கு வகுப்பில் நான் இப்படிதான் தூங்குவேன் எனத் தெரிவித்துள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?