பெர்முடா முக்கோணம் sven bachstroem
உலகம்

பெர்முடா முக்கோணம் : காணாமல் போய்விட்டால் பணம் - மர்ம பகுதிக்கு திக் திக் பயணம்

NewsSense Editorial Team

பெர்முடா ட்ரையாங்கிள் க்ரூஸ் என்கிற நிறுவனம் முக்கோணப் பகுதிக்குச் செல்ல முன்பதிவு செய்துள்ள பயணிகளுக்காக ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. பயணிகள் பயணம் செய்துகொண்டிருக்கிற கப்பல், திடீரென கடலில் காணாமல் போனால், பயணச்சீட்டுப் பணத்தை முழுவதுமாகத் திரும்பப் பெறுவார்கள் என்பது தான் அது.

”பெர்முடா ட்ரையாங்கிள்” எனும் பகுதி அமெரிக்காவின் தென்கிழக்கு கடற்கரையில் அட்லாண்டிக் பெருங்கடலில் பெர்முடா, புளோரிடா மற்றும் புவேர்ட்டோ ரிக்கோ ஆகிய மூன்று பகுதிகளுக்கு இடையே அமைந்துள்ள முக்கோணப் பகுதியாகும்.

டெவில்ஸ் முக்கோணம் என்றும் அழைக்கப்படும் இப்பகுதியில் பல கப்பல்கள் மற்றும் விமானங்கள் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பல தசாப்தங்களாக இந்த மர்மம் தொடர்வதாக நம்பப்படுகிறது.

இப்படி ஒரு ஆபத்தான பகுதிக்குப் பயணம் செய்ய வைக்க வேண்டிய காரணத்தால் தான் கப்பல் நிறுவனங்களின் சலுகைகள் முற்றிலுமாக விநோதமாகத் தோன்றுகின்றன. ஆனால், எப்படியானாலும் அங்குச் செல்கிற பயணிகளின் எண்ணிக்கைக்குப் பஞ்சமில்லை.

நார்வே ப்ரிமா லைனர் நிறுவனத்தோடு இரண்டு நாள் பயணத்தில், ஒரு அறைக்கு 1,450 பவுண்டுகள் (ரூ. 1.4 லட்சம்) பயணிகள் செலுத்துகிறார்கள் என்று தி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒருவேளை ட்ரையாங்கிளில் கப்பல் காணாமல் போய்விட்டால், செலுத்தப்பட்ட முழு பணத்தையும் திருப்பித் தருவதாக ஏற்பாட்டாளர்கள் உறுதியளித்துள்ளனர்.

"இந்த பெர்முடா முக்கோண சுற்றுப்பயணத்தில் காணாமல் போவதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். நீங்கள் காணாமல் போனால் உங்கள் பணம் திருப்பித் தரப்படும்." என்று அவர்களின் இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்கள்.

இது நமக்கு அதிர்ச்சியாகத் தோன்றினாலும், இது ஒன்றும் அங்கு புதிய செய்தியல்ல. இது உலகெங்கிலும் உள்ள கான்ஸ்பைரசி தியரி உருவாக்கும் ஆட்கள் மத்தியில் பிரபலமானது தான்.

2017 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவர், பெர்முடா ட்ரையாங்கிளின் மர்மத்தைக் கண்டுபிடித்து விட்டதாகக் கூறினார். கார்ல் க்ருஸ்செல்னிக்கி என்ற அந்த விஞ்ஞானி news.com.au இணையதளத்திடம் கூறுகையில், ”இந்த சம்பவங்கள் மனித தவறுகளால் ஏற்படக்கூடும் என்பதால் தீர்க்க எந்த மர்மமும் இல்லை”. என்றார்.

மேலும் "இது பூமத்திய ரேகைக்கு அருகில் உலகின் பணக்கார பகுதியான அமெரிக்காவிற்குப் பக்கத்தில் உள்ளது. எனவே உங்களுக்கு நிறையப் போக்குவரத்து வசதிகளும் உள்ளது. அங்கு ஏற்கனவே நடந்தவை யாவும் மோசமான வானிலை மற்றும் மனித தவறுகளின் விளைவாகவே நடந்திருக்க வேண்டும். இதில் மர்மம் எதுவும் இல்லை” என்றும் அவர் கூறினார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?