இங்கிலாந்து இளவரசி டயானாவின் தனித்துவமான ஸ்வெட்டர் 1.1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது, 9 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. இதனை சாதனையாக கருதுகின்றனர்.
சோதபே என்ற அமைப்பு ஆன்லைனில் இந்த ஏலத்தை நடத்தியது. இந்த ஸ்வெட்டர் 1981ம் ஆண்டு இளவரசர் சார்லஸுடன் நிச்சயம் செய்துகொண்ட பிறகு டயானா அணிந்திருந்தது.
சிகப்பு நிறத்தில் இருக்கும் இந்த ஸ்வெட்டரில் வெள்ளை நிற ஆடுகள் வரிசையாக இருக்கும் டிசைனைக் காணலாம். ஆனால் ஒரே ஒரு ஆடு மட்டும் கருப்பு நிறமாக இருக்கும்.
இந்த ஸ்வெட்டருக்கு பிளாக் ஷீப் ஸ்வெட்டர் என்று பெயர். அரசக் குடும்பத்தில் ஒருவராக தன்னை இணைத்துக்கொள்ளும் நேரத்தில் டயான சந்தித்த பிரச்னைகளின் அடையாளமாக இது கருதப்படுகிறது.
இந்த ஸ்வட்டர் 50,000 - 80,000 டாலர்கள் வரை விலைப் போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இறுதியில் எதிர்பார்த்ததை விட 10 மடங்குக்கும் அதிகமான தொகையில் வாங்கப்பட்டது.
இந்த ஸ்வெட்டரை வாங்க அதிக போட்டி நிலவியதால் ஏலமே அதிக நேரம் விடப்பட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
இதற்கு முன்னர் அதிகபட்சமாக டயானாவின் இன்ஃபேண்டா-ஸ்டைல் கௌன் 6,04,000 டாலர்களுக்கு விலைபோனது குறிப்பிடத்தக்கது.
இதுவரையில் அதிக விலைபோன ஸ்வெட்டர் என்ற பெருமையும் இதற்கு உண்டு. இதனை ஏலத்தில் வெற்றிகரமாக வாங்கியவர் யார் என்பது வெளியில் சொல்லப்படவில்லை.
இந்த ஏலத்தில் பக்கிங்கம் அரண்மனையின் இன்னும் சில பொருட்களும் விடப்பட்டதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust