இயேசு கிறிஸ்து கணக்கிற்கு Blue Tick  டிவிட்டர்
உலகம்

Twitter : இயேசு கிறிஸ்துக்கு வழங்கிய Blue Tick - அதிகரிக்கும் போலி கணக்குகள்?

Keerthanaa R

டிவிட்டரில் இயேசு கிறிஸ்துவின் கணக்கிற்கு ப்ளூ டிக் வழங்கப்பட்டிருப்பத்தை கண்ட நெட்டிசன்கள் குழம்பி வருகின்றனர்.

ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா ஆகிய நிறுவனங்களின் உரிமையாளர் எலான் மஸ்க். இவர் கடந்த மாதம் டிவிட்டர் நிறுவனத்தை சொந்தமாக்கினார். கிட்டதட்ட அன்று முதல் எல்லா நாளும் இவரை பற்றியும், டிவிட்டரை பற்றியும் ஏதாவது செய்திகள் வந்துகொண்டு தான் இருக்கிறது.

மஸ்க் முதலில் நிறுவனத்தை வாங்குவதாக தெரிவித்தார். பின்னர் டிவிட்டரில் போலிக்கணக்குகள் அதிகமாக இருப்பதாகவும், அது குறித்த தகவல்கள் எதுவும் தன்னிடம் பகிரப்படவில்லை என கூறி டிவிட்டரை வாங்கபோவதில்லை என மஸ்க் அறிவித்தார். இதற்கிடையே இது தொடர்பாக பதிலளிக்க கோரி மஸ்க் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், கடந்த மாதம் நிறுவனத்தை 44 மில்லியன் டாலருக்கு சொந்தமாக்கினார்.

அவர் நிறுவனத்தில் செய்த மாற்றங்களில் முக்கியமான ஒன்று பயனரின் கணக்கிற்கு ப்ளூ டிக் வேண்டுமென்றால், மாதம் 8 டாலர் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது. இதற்கு பல தரப்புகளிலிருந்து எதிர்ப்புகள் வந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அவர் வெரிஃபைட் அக்கவுண்ட்களுக்கு கட்டணம் செலுத்தவேண்டும் என கூறியப்பிறகு தான் போலிக்கணக்குகளின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது என்ற வாதமும் ஒரு புறம் இருக்கிறது. எலான் மஸ்க்கிற்கே போலிக்கணக்கு உருவாக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது டிவிட்டர் கணக்கு ஒன்று இணையவாசிகள் மத்தியில் பேசு பொருளாகியிருக்கிறது.

இயேசு கிறிஸ்துவுக்கு டிவிட்டரில் கணக்கு ஒன்று இருக்கிறது. இயேசு கிறிஸ்துவின் பக்கத்தின் பயோவில், தான் ஒரு 'தச்சர், ஹீலர் மற்றும் கடவுள்' என இருக்கிறது. இந்த கணக்கு 783.2k பின்தொடர்பவர்களை கொண்டுள்ளது. வேடிக்கையான ட்வீட்கள், கடவுளே பேசுவது போலவும் பகிரப்பட்டுள்ளது.

அக்டோபர் 2006ல் தொடங்கப்பட்ட இந்த கணக்கிற்கு டிவிட்டர் நிறுவனம் தற்போது ப்ளூ டிக்கை கொடுத்துள்ளது. இதுதான் அனைவரின் கவனத்தையும் திருப்பியுள்ளது.

இயேசு கிறிஸ்துவின் கணக்கிற்கு ப்ளூ டிக் வழங்கப்பட்டதை அடுத்து, பலரும் இது போலி கணக்கு எனக் கூறி வருகின்றனர். அதற்கு கிறிஸ்துவின் கணக்கிலிருந்து பதில் பதிவிடப்பட்ட ட்வீட்டில், "நான் போலியானவன் என்ற சந்தேகம் எதற்கு?" என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

கிட்ட தட்ட 16 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த கணக்கிற்கு தற்போது ப்ளூ டிக் விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?