lizard and iguanas canva
உலகம்

பார்சலில் வந்த பல்லி; அதிர்ச்சியில் குடும்பத்தினர் - என்ன நடந்தது?

Keerthanaa R

வீட்டிற்கு வந்த பார்சலில் பல்லிகளும், உடும்புகளும் இருந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளனர் நியூயார்க்கில் ஒரு குடும்பத்தினர்.

சில சமயங்களில் காவல் துறையினருக்கு விநோதமான புகார்கள் வருவதை நாம் கேள்விப்பட்டிருப்போம். வீட்டில் புகுந்த ராட்சத ஸ்பைடரை அகற்றுவது, சூட்கேசுக்குள் மனித உடல்களை கண்டது என பல புகார்கள் சமீபத்தில் போலீசாருக்கு வந்திருந்தது.

அந்த வகையில் வீட்டிற்கு பார்சலில் உயிருடன் பல்லிகளும், உடும்புகளும் வந்துள்ளது நியூயார்க்கில். ஊர்வனங்கள், உயிருடன் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், காவல் துறைக்கு தகவல் அளித்தனர்.

விசாரணையில், அவை தவறான முகவரிக்கு அனுப்பப்பட்டதாகவும், இது வேறு ஒருவருக்கு அனுப்பப்படவேண்டிய பார்சல் எனவும் தெரியவந்தது.

பல்லிகளை கைப்பற்றிய போலீசார், அவற்றை பத்திரப்படுத்தியிருக்கின்றனர். மேலும் உள்ளூர் அனிமல் ஷெல்டரை தொடர்பு கொண்டு விலங்குகளை அவர்களின் பாதுகாப்பில் ஒப்படைக்க காத்திருப்பதாகவும் கூறினர்..

இதுவரை இவற்றை குறித்து யாரும் தங்களை தொடர்புகொள்ளவில்லை என போலீசார் தெரிவித்தனர். அமெரிக்காவிற்குள் வெளிநாட்டு பிராணிகள் கடத்தல் அதிகமாக இருப்பதால் கிராமத்தில் வசிக்கும் ஒருவருக்கு விற்கப்படுகின்றனவா அல்லது கல்வி நோக்கங்களுக்காக வேறு முகவரிக்கு அனுப்பப்படுகின்றனவா என்பது தெரியவில்லை.

வனவிலங்கு மீட்பு மற்றும் மறுவாழ்வு குழுவான அனிமல் நேஷன் பல்லிகள் மற்றும் இகுவானாக்களை பராமரிப்பிற்காக அழைத்துச் சென்றதாக மியாமி ஹெரால்டின் அறிக்கை தெரிவிக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?