Twitter Canva
உலகம்

குழந்தைகள் ஆபாச பட பரிமாற்ற தளமாகும் Twitter...பெரு நிறுவனங்கள் விளம்பரங்கள் நிறுத்தம்?

இப்படி தங்கள் நிறுவனத்தின் விளம்பரங்கள் குழந்தைகள் தொடர்பான பாலியல் பதிவுகளை ஒட்டித் தோன்றுவது தங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக, கோல் ஹான் நிறுவனத்தின் பிராண்ட் தலைவர் டேவிட் மட்டாக்ஸ் ராய்டர்ஸிடம் கூறினார்.

Gautham

கடந்த சில ஆண்டுகளாகவே டிவிட்டர் அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பல சவால்களை சந்தித்து வருகிறது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றதில் இருந்து, டிவிட்டர் பல தருணங்களில் அதிபரோடே சமூக ரீதியாக முரண்படத் தொடங்கியது.

கடைசியில் டொனால்ட் டிரம்பையே தன் தளத்திலிருந்து நீக்கி எல்லோரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. தற்போது உலகின் பல பெருநிறுவனங்களின் விளம்பரங்கள், குழந்தைகள் தொடர்பான பாலியல் மற்றும் ஆபாச பதிவுகள் பகிரப்பட்டு வருவதாக ஒரு புதிய பிரச்சனை எழுந்துள்ளது.

உதாரணத்துக்கு பதின் வயதினரை வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான டிவிட்டர் பதிவைத் தொடர்ந்து, கோல் ஹான் (Cole Haan) என்கிற காலணி நிறுவனத்தின் விளம்பரங்கள் தோன்றியுள்ளன.

இப்படி தங்கள் நிறுவனத்தின் விளம்பரங்கள் குழந்தைகள் தொடர்பான பாலியல் பதிவுகளை ஒட்டித் தோன்றுவது தங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக, கோல் ஹான் நிறுவனத்தின் பிராண்ட் தலைவர் டேவிட் மட்டாக்ஸ் ராய்டர்ஸிடம் கூறினார். இந்த பிரச்னையை டிவிட்டர் நிறுவனம் சரி செய்ய வேண்டும் அல்லது எப்படியாவது நாங்கள் இதை சரி செய்வோம். இதில் டிவிட்டர் நிறுவனத்தில் விளம்பரம் செய்யாததும் அடக்கம் என்று தங்கள் தரப்பிலிருந்து இதைத் தெளிவுபடுத்தினார் கோல்.

அதே போல அமெரிக்காவின் முன்னணி கார் தயாரிப்பாளரான மாஸ்டா நிறுவனமும் இப்படி தங்கள் நிறவன விளம்பரங்கள் டிவிட்டரில் தோன்றுவது ஏற்றுக் கொள்ள முடியாதென கூறியுள்ளது. மேலும், டிவிட்டரில் விளம்பரம் செய்வதை நிறுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளது. கிட்டத்தட்ட கோக கோலா, டிஸ்னி போன்ற நிறுவனங்களும் மேற்கூறிய நிறுவனங்களைப் போன்றே தங்கள் அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர்.

என் பி சி யுனிவர்சல் நிறுவனம், ஆபாசப் படங்களைத் தொடர்ந்து தோன்றும் தங்கள் நிறுவன விளம்பரங்களை நீக்குமாறு கூறியுள்ளதாக அல்ஜெசீராவில் செய்தி வெளியாகியுள்ளது.

மற்றொரு உதாரணத்தில், ஒருவர் “Young girls ONLY, NO Boys” என டிவிட்டரில் தேடியுள்ளார். அதற்கு அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஸ்காட்டிஷ் ரைட் குழந்தைகள் மருத்துவமனையின் விளம்பரம் தோன்றியள்ளது.

இது குறித்து செய்தியறிக்கை வெளியிட்ட டிவிட்டர் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் செலெஸ்டே கார்ஸ்வெல் (Celeste Carswell) "டிவிட்டர் நிறுவனம் குழந்தைகள் பாலியல் ரீதியில் சுரண்டப்படுவதை ஒரு துளி கூட பொறுத்துக் கொள்ளாது. டிவிட்டர் தன் தளத்தில் குழந்தைகளின பாதுகாப்பை உறுதி செய்ய நிறைய முதலீடு செய்து வருகிறது. இதில் புதிதாக கொள்கைகளை வடிவமைத்து அதை செயல்படுத்துவதற்கான நபர்களை பணியில் அமர்த்துவதும் அடக்கம்" என கூறினார்.

மேலும், இப்படி குழந்தைகள் தொடர்பான பாலியல் பதிவுகளைத் தொடர்ந்து நிறுவனங்களின் விளம்பரங்கள் வராமல் இருக்கவும், மேற்கொண்டு இதுபோல் நடக்காமல் இருக்கவும் டிவிட்டர் தன் பயனர்களோடும், கூட்டாளிகளோடும் ஒருங்கிணைந்து பணியாற்றி வருவதாகவும் கூறினார்.

டிவிட்டர் நிறுவனம், தங்கள் தளத்தில் குழந்தைகள் துன்புறுத்தப்படுவது போன்ற பதிவுகளைக் கண்டுபிடிக்க சிரமப்படுவது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதத்திலேயே 'தி வெர்ஜ்' வலைதளத்தில் செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து, பெரு நிறுவனங்களின் விளம்பரங்கள் குழந்தைகள் தொடர்பான பாலியல் பதிவுகளை ஒட்டி வருவது ராய்டர்ஸ் முகமையால் முதலில் செய்தி பிரசுரிக்கப்பட்டது.

ட்விட்டரில் பாலியல் பதிவுகள்:

இன்று உலகில் பிரபலமாகச் செயல்பட்டு வரும் பெரும்பாலான சமூக ஊடகங்களிலும் குழந்தைகள் பாலியல் ரீதியில் சுரண்டப்படுவதை எதிர்க்கின்றன, தடை செய்கின்றன. ஆனால் பொதுவாகவே சமூக வலைதளங்களில் ஆபாசப் படங்களை அனுமதிக்கப்படுகின்றன.

டிவிட்டர் தளத்தில் உள்ள ஒட்டுமொத்த உள்ளடக்கங்களில் கிட்டத்தட்ட 13 சதவீத பதிவுகள் பாலியல் & ஆபாசப் படம் சம்பந்தப்பட்டவை என ராய்டர்ஸ் கூறுகிறது. இதை டிவிட்டர் நிறுவனம் ஆதரிக்கவோ எதிர்க்கவோ இல்லை.

இந்த சூழலில் தான், கோஸ்ட் டேட்டா என்கிற நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் ஆய்வு செய்த 20 நாள் காலகட்டத்தில், 500க்கும் மேற்பட்ட டிவிட்டர் கணக்குகள் வெளிப்படையாக குழந்தைகள் பாலியல் ரீதியில் தவறாகப் பயன்படுத்தப்படும் காணொளிகள் மற்றும் படங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளன அல்லது வியாபார ரீதியில் விலைக்கு கேட்கப்பட்டுள்ளன என்பதை கண்டறிந்தது

ஆய்வு காலத்திலேயே, டிவிட்டர் நிறுவனம் 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட மேற்கூறிய கணக்குகளை நீக்கவில்லை என்கிறது கோஸ்ட் டேட்டா. அதன் பிறகு தான், தன் கண்டுபிடிப்புகளை ராய்டர்ஸ் முகமையிடம் வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டது.

ஒரு கட்டத்தில் கோஸ்ட் டேட்டா நிறவனம், ராய்டர்ஸ் முகமையிடம் கொடுத்த 500 ட்விட்டர் கணக்கு விவரங்களையும், டிவிட்டர் நிறுவனத்திடமே கொடுத்தது ராய்டர்ஸ். அதன் பிறகுதான் கொடுத்த 500 டிவிட்டர் கணக்குகளையும் சரிபார்த்து, அனைத்து கணக்குகளும் டிவிட்டரின் விதிமுறைகளை மீறி இருப்பதாகக் கண்டு பிடித்து நிரந்தரமாக கணக்குகள் முடக்கப்பட்டன. இதை டிவிட்டர் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கார்ஸ்வெல்லும் ஒப்புக் கொண்டார்.

சரி... ஏன் டிவிட்டர் நிறுவனத்தில் இப்படி ஒரு சோதனையை கோஸ்ட் டேட்டா நிறுவனம் நடத்தியது?

ஆபாசப் படம் மற்றம் குழந்தைகள் பாலியல் ரீதியில் சுரண்டப்படுவது தொடர்பான உள்ளடக்கங்களை டிவிட்டரால் நீக்க முடிகிறதா என்பது தொடர்பான மதிப்பீட்டுக்குத் தான் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது என கோஸ்ட் டேட்டா நிறுவனத்தின் நிறுவனர் ஆண்ட்ரியா ஸ்ட்ரொப்பா ஊடகங்களிடம் கூறியுள்ளார்.

டிவிட்டரின் வெளிப்படைத்தன்மை அறிக்கையின் படி, கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பிரச்னைக்குரிய அல்லது விதிகளை மீறிய டிவிட்டர் கணக்குகளை முடக்கியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பரிமாற்றத் தளமாகும் டிவிட்டர்:

குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்கள் மற்றும் பாலியல் சுரண்டல் காணொளிகள் மற்றும் படங்களை சந்தைப்படுத்தும் களமாக டிவிட்டரைப் பயன்படுத்துவதாகவும், டிஸ்கார்ட் & டெலிகிராம் போன்ற செயலிகள் மூலம் காணொளி மற்றும் படங்களை வாங்குவது விற்பது தொடர்பான விவாதங்கள் நடப்பதாகவும், வாங்கப்படும் & விற்கப்படும் உள்ளடக்கங்கள் மெகா, டிராப் பாக்ஸ் போன்ற சேவைகளில் சேகரித்து வைக்கப்படுவதாகவும் அல் ஜெசீரா கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இது குறித்து டிஸ்கார்ட் சேவை நிறுவனத்திடம் சில ஊடகங்கள் கேட்ட போது, இப்படி ஆபாசப் படங்களை, குறிப்பாக குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்களை பதிவேற்றம் செய்யும் ஒரு பயனர் மற்றும் ஒரு சர்வரை தடை செய்திருப்பதாகக் கூறியது.

Elon Musk

டிராப் பாக்ஸ் & டெலிகிராம் போன்ற பிரபலமான செயலிகள், தங்கள் தளங்களில் பதிவேற்றப்படும் பல உள்ளடக்கங்களை நிர்வகிக்க பல சாதனங்களைப் பயன்படுத்துவதாகக் கூறியுள்ளன. ஆனால் என்ன மாதிரியான சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன, என்ன தொழில்நுட்பங்கள் கையாளப்படுகிறது என விவரிக்கவில்லை.

டிவிட்டர் நிறுவனத்தின் 90 சதவீத வருமானம் நிறவனங்களின் விளம்பரங்களில் இருந்துதான் வந்து கொண்டிருக்கின்றன. இப்போது அதிலேயே ஒரு மரண அடி விழுந்திருப்பது ஒட்டுமொத்த டிவிட்டர் நிறுவனத்தின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

இது போக டிவிட்டர் நிறுவனத்தை சுமார் 44 பில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து வாங்கவிருந்த திட்டத்திலிருந்து, எலான் மஸ்க் பின்வாங்குவது தொடர்பாக நீதிமன்றத்திலும் மோதிக் கொண்டிருக்கிறது நீலக் குருவி நிறுவனம்.

parag agarwal

டிவிட்டர் நிறுவனத்தை வருமான ரீதியில் மேம்படுத்துவது, ஆபாசப் படங்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான பாலியல் உள்ளடக்கங்களை தன் தளத்திலிருந்து நீக்குவது அல்லது சரியாகக் கையாள்வது, எலான் மஸ்குடனான மோதல் என பன்முனைப் பிரச்னைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

இதை எல்லாம் தாண்டி டிவிட்டர் நிறுவனத்தை வெற்றிகரமாக செயல்பட வைத்துவிட்டால், உலகின் ஆகச் சிறந்த முதன்மைச் செயல் அதிகாரிகளில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பராக் அகர்வாலுக்கு நிச்சயம் ஓர் இடம் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?