அமெரிக்க ஆதிக்கத்துக்கு எதிரான பொது கரன்சி - முதலடி எடுத்து வைக்கும் அர்ஜென்டினா, பிரேசில் Twitter
உலகம்

அமெரிக்க ஆதிக்கத்துக்கு எதிரான பொது கரன்சி - அர்ஜென்டினா மற்றும் பிரேசிலின் திட்டம் என்ன?

NewsSense Editorial Team

பிரேசில் மற்றும் அர்ஜென்டினா ஆகிய இரு தென் அமெரிக்கா நாடுகள் இணைந்து ஒரு பொது கரன்சியை உருவாக்குவது தொடர்பாக இரு நாட்டு அதிபர்களின் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

பிரேசில் நாட்டின் அதிபர் லூயிஸ் இனாசியா லுலா டா செல்வா மற்றும் அர்ஜென்டினாவின் அதிபர் ஆல்பர்ட் பெர்னாண்டஸ், இந்த விஷயம் தொடர்பாக, பியூனஸ் ஆரிஸ் நகரத்தில் நடக்கவிருக்கும் தென் அமெரிக்க தலைவர்களுக்கான பிராந்திய உச்சி மாநாட்டில் இது குறித்து பேச உள்ளனர்.

நாங்கள் கரன்சி பரிமாற்ற சிக்கல்களில் இருந்து விடுபடவும், வர்த்தகங்களை எளிமையாக்கவும் உள்ளூர் கரன்சிகளை ஊக்குவிக்கவும் விரும்புகிறோம் என பிரேசில் மற்றும் அர்ஜென்டினாவின் தலைவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

அதோடு ஒட்டு மொத்த தென் அமெரிக்காவிற்கும் ஒரு பொது கரன்சியை கொண்டு வருவது தொடர்பான விவாதத்தையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல தீர்மானித்திருக்கிறோம். அப்படி ஒரு பொது கரன்சி ஒட்டுமொத்த தென் அமெரிக்கா பிராந்தியத்திற்கு கொண்டுவரப்பட்டால், அது நிதி ரீதியாகவும் வணிக ரீதியிலான புழக்கத்திற்கும் புற காரணிகளால் கரன்சி பாதிக்கப்படும் பிரச்சனைகளைக் குறைப்பதற்கும் உதவும் என்றும் அதில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

அதிபர்கள்

புதிதாக கொண்டு வர உத்தேசித்திருக்கும் கரன்சிக்கு ‘சர்’ (sur) என பிரேசில் பெயரிட்டு இருப்பதாகவும் தொடக்க கட்டமாக பிரேசிலியன் ரியல் மற்றும் அர்ஜென்டினாவின் பேசோ -வோடு ஒரே காலகட்டத்தில் பொருளாதாரத்தில் புழங்கும் என்றும் ஃபைனான்சியல் டைம்ஸ் பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இப்படி ஒரு புதிய கரன்சியை கொண்டு வந்தால் அது பிராந்திய அளவிலான வணிகம் மற்றும் வர்த்தகங்களை எப்படி மேம்படுத்தும், அமெரிக்க டாலரைச் சார்ந்திருக்கும் தன்மையை எந்த அளவுக்கு குறைக்கும் என்பதே இந்த விவாதத்தின் முதல் கட்டமாக இருக்கும் என்றும் சில வளைதலங்களில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

ஜெயர் பால்சினாரோ பிரேசில் நாட்டின் அதிபராக இருந்தபோது கியூபா நாடு உடனான உறவுகளில் பெரிய விரிசல்கள் ஏற்பட்டன. அதேபோல கடந்த 2019 ஆம் ஆண்டு கம்யூனிட்டி ஆப் லேட்டின் அமெரிக்கா அண்ட் கரிபியன் ஸ்டேஸ் என்கிற தென் அமெரிக்கா பிராந்திய கூட்டமைப்பில் இருந்தும் பிரேசில் வெளியேறியது.

இப்போது பிரேசிலின் அதிபர் லூலா அர்ஜென்டினாவுக்கு பயணம் மேற்கொண்டு இருப்பதால் மீண்டும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு முறையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. அதே போல சி இ எல் ஏ சி அமைப்பிலும் மீண்டும் பிரேசில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவான கரன்சி குறித்து கடந்த 2019 ஆம் ஆண்டிலேயே பேசப்பட்ட போது, அத்திட்டத்தை பிரேசில் நாட்டின் மத்திய வங்கி எதிர்த்தது இங்கு நினைவு கூறத்தக்கது.

தென் அமெரிக்கா

தென் அமெரிக்காவிலேயே பிரேசில் மற்றும் அர்ஜென்டினா இரண்டு மிகப்பெரிய பொருளாதாரங்களா இருக்கின்றன, இரு நாடுகளுக்கு இடையில் நீண்ட நாட்களாக வர்த்தக மற்றும் பொருளாதார ரீதியிலான உறவுமுறைகள் இருந்து வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்த தென் அமெரிக்க பிரந்தியம், உலக ஜிடிபியில் சுமார் ஐந்து சதவீதமாக இருக்கிறது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

ஐரோப்பிய ஒன்றியம், தங்களுக்கென தனி பொதுக் கரன்சியாக யூரோ என்கிற கரன்சியைக் கொண்டு வர சுமார் 35 ஆண்டுகள் ஆனது. எனவே, பிரேசில் & அர்ஜெண்டினா ஆகிய இரு நாடுகள் ஒரு பொது கரன்சியைக் குறித்து பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்தாலும், அதை எப்படி வெற்றிகரமாக செய்து முடிக்கிறார்கள் என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும் என சில சர்வதேச பத்திரிகைகள் குறிப்பிட்டு இருக்கின்றன.

இப்படி தென் அமெரிக்கா, தனக்கென ஒரு தனி பொதுக் கரன்சியை கையில் எடுப்பது, அமெரிக்க டாலரின் மதிப்பு சர்வதேச அளவில் பாதிக்கப்படும் என்பதால் அமெரிக்காவும் இந்த விவகாரத்தை உற்று நோக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?