அர்தர் உர்ஸோ : ஒரே வீட்டில் 9 மனைவியுடன் வாழும் நபர் - சோகத்தில் இருக்க காரணம் என்ன? Twitter
உலகம்

அர்தர் உர்ஸோ : ஒரே வீட்டில் 9 மனைவியுடன் வாழும் நபர் - சோகத்தில் இருக்க காரணம் என்ன?

Antony Ajay R

ஆர்தர் உர்ஸோ பிரேசில் நாட்டை சேர்ந்தவர். மாடலிங் துறையில் இயங்கிவரும் இவருக்கு மொத்தம் 9 மனைவிகள் இருந்தனர். 9 மனைவிகளுடனும் அமைதியான ஆனந்தமான வாழ்க்கையை நடத்தி வந்த இவரை ஏப்ரல் மாதம் ஒரு மனைவி விவாகரத்து செய்தார்.

இப்போது மேலும் 4 பேரை அவர் விவாகரத்து செய்யப்போகின்றனர் என்று செய்திகள் எழுந்துள்ளன.

கடந்த ஆண்டு 9 பெண்களை திருமணம் செய்ததனால் உலகம் முழுவதும் பேச்சு பொருளானார் ஆர்தர் உர்ஸோ.

ஆர்தர் தனது மண வாழ்வை லூயானா கஸாகி என்ற பெண்ணுடனே தொடங்கினார்.

ஆர்தர், லூயானா இருவரும் பலதார மண வாழ்வில் நாட்டம் கொண்டிருந்திருந்ததால் ஆர்தரின் அடுத்தடுத்த திருமணங்களுக்குச் சம்மதித்தார் லூயானா.

Arthur Urso

காதல் சுதந்திரமான உணர்வு அதனை ஒருதார மண வாழ்வில் அடக்கிவிட முடியாது என்பதை வெளிக்காட்டவும், பலதார மணவாழ்வு தவறானதில்லை என்பதை உரைக்கவும் 2021ல் அடுத்தடுத்து 8 திருமணங்கள் செய்து கொண்டார் ஆர்தர்.

ஆர்தரின் முதல் மனைவி லூயானவுக்கு மட்டும் ஒரே ஒரு பெண் குழந்தை உள்ளது, மற்ற அனைத்து மனைவிகளும் தலா ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஆர்தரின் விருப்பம் எனத் தெரிவித்திருக்கிறார்.

என்ன தான் ஆர்தர் உர்ஸோ பல திருமணங்கள் செய்து கொண்டாலும் பிரேசிலில் பல தார மணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடையாது. எனவே சட்டப்படி அவர் முதல் மனையின் கணவனாக மட்டுமே இருக்கிறார்.

ஆனாலும் மோனோகேமி எனப்படும் ஒருதார மணத்துக்கு எதிராக போராடுவதற்காக பல திருமணங்கள் செய்துகொள்வதாக கூறுகிறார்.

இப்போது 4 பேர் விவாகரத்து பெற்றாலும் தொடர்ந்து திருமணம் செய்யப் போவதாக கூறியுள்ளார் ஆர்தோ. எனினும் விவாகரத்தினால் சோகமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?