கர்ஹம் அஸ்கி Twitter
உலகம்

உலகத்தின் மிக மோசமான பொதுக் கழிவறையை எது? - 91 நாடுகளைச் சுற்றி கண்டுபிடித்த நபர்!

ட்ராவல் ப்ளாகரான கர்ஹம் அஸ்கி என்ற பிரிட்டனை சேர்ந்த நபர் பயணங்களில் விருப்பம் கொண்டவர். உலகின் மாறுபட்ட கலாச்சாரங்களை கண்டறிவதிலும் சர்வதேச விவகாரங்களை மற்ற நாடுகளின் பார்வையில் அணுகுவதிலும் ஆர்வம் கொண்டவர். அவர் பயணத்தின் அனுபவத்தை நகைச்சுவையுடன் எழுதி வருகிறார்.

Antony Ajay R

நீங்கள் பயணம் செய்ய வேண்டுமென்றால் அதற்கு எதாவது காரணம் வேண்டும். எதாவது தேடல் வேண்டும். இந்த தேடல் ஒவ்வொருவருக்கும் வேறுபட்டதாக அமையும். இந்த கட்டுரையில் வரும் நபர் உலகிலேயே மோசமான பொதுக் கழிப்பறையை தேடிச் சென்றுள்ளார். ஆம் சரியாக தான் வாசித்தீர்கள்! இவரது தேடல் எங்கு தொடங்கி எங்கு முடிந்ததெனப் பார்க்கலாம்.

ட்ராவல் ப்ளாகரான கர்ஹம் அஸ்கி என்ற பிரிட்டனை சேர்ந்த நபர் பயணங்களில் விருப்பம் கொண்டவர். உலகின் மாறுபட்ட கலாச்சாரங்களை கண்டறிவதிலும் சர்வதேச விவகாரங்களை மற்ற நாடுகளின் பார்வையில் அணுகுவதிலும் ஆர்வம் கொண்டவர். அவர் பயணத்தின் அனுபவத்தை நகைச்சுவையுடன் எழுதி வருகிறார்.

இப்போது 58 வயதான இவர் சுமார் 1.3 கோடி ரூபாய் செலவு செய்து 90க்கும் மேற்பட்ட நாடுகளைக் கடந்து 1.2 லட்சம் கிலோ மீட்டர் பயணித்தபிப் பின்னர் உலகின் மிக மோசமான கழிவறையை கண்டறிந்துள்ளார்.

தஜிகிஸ்தான் நாட்டில் உள்ள அய்னி என்ற மாகாணத்தில் தான் அந்த மோசமான கழிவறை அமைந்திருக்கிறது. இது ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகிலேயே இருக்கிறது.

அந்த கழிவறை குறித்து பின்வருபவற்றை விவரிக்கிறார் கர்ஹம். இந்த கழிவறையை பயன்படுத்த வேண்டுமென்றால் ஏற்கெனவே வெயிலில் காய்ந்த மலத்தின் மீது தான் முடியும். அத்துடன் இங்கு நான்கு பக்கமும் பாலித்தின் பைகள் தான் மறைப்புகளாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அருவருப்பின் உச்சம் என்னவென்றால் அந்த பாலித்தின் பைகளை ஏற்கெனவே டாய்லெட் பேப்பர்களாக உபயோகித்திருக்கின்றனர்.

அருவருப்பு மட்டுமில்லாமல் ஆபத்தும் நிறைந்த இடமாக இது உள்ளது. இந்த பகுதி கொடிய பாம்புகளும் அச்சுறுத்தும் எலிகளும் நிறைந்ததாக இருக்கிறது.

தஜிகிஸ்தானின் இந்த கழிப்பறையை அடைவதற்கு முன்னால் இவர் உலகின் பல நாடுகளில் 1000க்கும் மேற்பட்ட பொது கழிப்பறைகளைப் பார்த்திருக்கிறார். 'Toilets of the Wild Frontier' என்ற புத்தகத்தையும் எழுதியிருக்கிறார்.

இவருடைய மோசமான கழிப்பறைகள் வரிசையில் பங்களாதேஷ் மற்றும் சீனாவிலுள்ள கழிப்பறைகள் இடம் பெற்றிருக்கின்றன.

பொதுவாக கடல்கடந்து பயணம் செய்பவர்கள் மற்ற நாடுகளின் அழகிய தெருக்களையும், சின்னங்களையும் தான் அடையாளப்படுத்துவார்கள். ஆனால் கர்ஹம் வித்தியாசமாக மோசமான விஷயங்களைத் தேடிச் சென்றிருக்கிறார்.

இவர் முதன்முதலாக கடல்கடந்து மொராக்கோ பயணிக்கும் போது இவருக்கு பொதுக்கழிப்பறைக் குறித்த ஆர்வம் வந்திருக்கிறது. அப்போது முதல் மோசமான கழிவறைகளை புகைப்படம் எடுத்துப் பகிர்ந்து வருகிறார்.

உலகின் மோசமான கழிவறைக்கான இவரது பயணம் தஜிகிஸ்தானில் நிறைவடைந்திருக்கிறது. இவர் இப்போதும் பயன்பாட்டில் இருக்கக் கூடிய கழிவறைகளை மட்டுமே கணக்கில் சேர்த்திருக்கிறார்.

"இந்த கழிவறைகளில் ஒரு நிமிடம் அமர்ந்திருப்பதைக் கூட வாழ்வில் இன்னொரு முறை நினைத்துப்பார்க்க முடியாது. அவ்வளவு கொடுமையானதாக இருக்கிறது" என்று பத்திரிக்கையில் கூறியிருக்கிறார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?