மகாராணி எலிசபெத் மரணத்தினால் கேட்பரி உள்ளிட்ட 600 நிறுவனங்கள் தங்களின் ராயல் வாரண்ட்டை இழக்கும் ஆபத்தில் உள்ளன.
ராயல் வாரண்ட் என்பது பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஒரு பெருமையாகும். இதனால் அவர்கள் பொருட்களை சந்தைப்படுத்துவதில் ராயல் ஆர்ம்ஸ் பயன்படுத்திக்கொள்ள முடியும். இது சந்தையில் இவற்றை பிரபலப்படுத்துவதுடன், அதன் மதிப்பையும் அதிகரிக்கசெய்கிறது.
ராயல் வாரண்ட் என்பது தரத்தின் அடையாளம்.
Fortnum மற்றும் Mason தேநீர் நிறுவனங்கள், Burberry ரெயின் கோட்கள், Cadbury சாக்லேட் மற்றும் துடப்பத்திலிருந்து நாய் உணவுகள் வரை ராயல் குடும்பத்தினர் பயன்படுத்தும் பல பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் ராயல் வாரண்ட் பெற்றுள்ளன.
இப்போது ராயல் வாரண்டை இழந்தால் இந்த நிறுவனங்களின் சந்தை மோசமாக பாதிக்கப்படும். போட்டி நிறுவனங்களின் எதிர்பார்ப்பும் அதுவே.
இந்த நிறுவனங்களின் பாக்கேஜிங் முதல் அனைத்து விளம்பரங்களுக்கும், வண்டிகளிலும் கூட ராயல் ஸ்டாம்ப் உபயோகிக்கின்றன.
பல நிறுவனங்களின் பொருட்கள் ராயல் மதிப்பினால் தான் விற்பனையாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. Fortnum மற்றும் Mason தேநீர் நிறுவனங்கள் 1902 முதல் ராயல் வாரண்ட் பெற்றுள்ளன.
இப்போது இந்த நிறுவனங்கள் அரசர் சார்லஸின் அங்கிகாரத்துக்காக காத்திருக்கின்றன. சார்லஸ் மன்னர் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் பதவியிலிருந்த போது 150 நிறுவனங்களுக்கு ராயல் வாரண்ட் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை அங்கிகாரம் கிடைக்காவிட்டால் 2 ஆண்டுகளில் இவை இழப்பை சந்திக்க நேரிடும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust