Alien நம்மை தொடர்பு கொள்ள வாய்ப்பு இருக்கிறதா? அறிவியல் சொல்வதென்ன? Twitter
உலகம்

Alien நம்மை தொடர்பு கொள்ள வாய்ப்பு இருக்கிறதா? அறிவியல் சொல்வதென்ன?

பூமியில் மனிதர்கள் வாழ்வதை மொத்த அண்டத்துக்கும் எடுத்துரைக்கும் வகையில் நாம் பல தடையங்களைக் கசிய விடுகிறோம். இவற்றில் ஏதேனும் ஒன்றை கண்டறிந்தால் ஏலியன்கள் நம்மை அடைய முடியலாம்.

Antony Ajay R

ஏலியன்கள் நமக்கு எப்போதுமே ஆர்வம் குறையாத விவாதப் பொருளாக இருக்கிறது. ஏலியன்களின் இருப்பை நாம் கண்டறியும் நாள் அல்லது ஏலியன்கள் நம் கண்முன்னே தோன்றும் நாளுக்காக காத்திருப்பபவர்கள் ஏராளம்.

ஆனால் ஏலியன்கள் இந்த பிரபஞ்சத்தில் இருக்கின்றன என்பதைக் உறுதியாகக் கூறும் அறிவியல் சான்றும் நம்மிடம் இல்லை.

ஒரு வேளை ஏலியன்கள் இருக்கலாம். கோடிக்கணக்கான பிரபஞ்சங்கள் இருக்கும் இந்த சூரியக் குடும்பத்தில் பூமியில் மட்டுமே உயிர்கள் இருக்குமா என்ன?

வேற்றுகிரகத்தில் இருக்கும் உயிரினங்கள் புழு, பூச்சியைப் போலில்லாமல் மனிதனைப் போல அறிவுள்ளவையாகவும் இருக்கலாம்.

அப்படி இருந்தால், பல லட்சம் கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஏலியன்களால் நம் இருப்பை அறிய முடியுமா?

பூமியில் உயிர்கள் இருப்பதை விண்வெளியில் இருக்கும் மற்ற கிரகங்களுக்கு தெரியப்படுத்துகிறது மனித இனம். பூமியில் இருந்து நாம் பிற கோள்களைக் கண்காணிப்பது போல ஏலியன்களும் நம்மைக் கண்காணிக்கலாம்.

பால்வீதியில் இருக்கும் 5,500 கோள்களை மட்டுமே நாம் அடையாளம் கண்டுள்ளோம். இவைத் தவிர இங்கிருக்கும் கோடிக்கணக்கான கோள்கள் குறித்து நமக்கு விவரம் தெரியாது.

நமக்கு தெரிந்த கோள்களின் வளிமண்டலத்தில் ஏதேனும் ரசாயனங்கள் இருக்கிறதா? பூமியில் இருந்து அங்கு ஏதேனும் ரேடியோ சிக்னல்கள் சென்றிருக்கின்றதா என்பது குறித்தும் ஆராய்ந்து வருகிறோம்.

இதேப்போல ஆராய்ச்சிகள் ஏலியன்கள் சார்பில் செய்யப்பட்டால் நம் இருப்பை எளிமையாக அவை கண்டுபிடிக்கும் வண்ணம் வெளிப்படையாக விண்வெளிக்கு தெரிவித்துக்கொண்டிருக்கிறோம்.

ரேடியோ சிக்னல்கள் நம் வாழ்வில் அன்றாடம் பயன்பட்டு வருகிறது. நமக்கான ரேடியோ, தொலைக்காட்சி, இணையம் போன்றவற்றுக்கு வலிமை குறைந்த சிக்னலையே பயன்படுத்துவோம்.

ஆனால் விண்கலன்களுக்கு அனுப்பக் கூடிய சிக்னல் வலிமையானதாக இருக்கும்.  நாசாவின் வாயேஜர் 1 விண்கலம், பூமியிலிருந்து 2,400 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது.

இதுபோன்ற விண்கலன்களுக்கு அனுப்பப்படும் சிக்னல்கள் பக்கத்து நட்சத்திரங்களைக் கூட சென்றடைய முடியும் எனக் கண்டறிந்துள்ளனர்.

அந்த நட்சத்திரத்தில் ஏலியன்கள் இருந்து, அவை சிக்னலைப் பெறலாம். அவை அதற்கு எதிர்வினையாக சிக்னலை அனுப்பினால் ஏறத்தாழ 2031ம் ஆண்டில் நமக்கு அந்த சிக்னல் வந்தடையலாம் எனக் கணக்கிட்டுள்ளனர்.

பூமியிலிருக்கும் நைட்ரஜன், ஆக்ஸிஜன் மற்றும் நீராவி இங்கு உயிர் வாழ்வதற்கான தடையங்களாகும். பூமியின் வளிமண்டலத்தில் இருக்கும் நைட்ரஜன் டை ஆக்ஸைடு மனிதனைப் போல அறிவார்ந்த உயிர் வாழ்வதற்கான அடையாளம் என்கின்றனர்.

மேலும் நமது நகரங்களில் இருக்கும் விளக்குகளும் அதிலிருந்து வெளியேறும் சோடியமும் கூட நம் இருப்பிற்கான தடையங்களே. இரவு விளக்குகள் ஒளிர்வதை வைத்து வேற்றுகிரக வாசிகள் நம்மை அடையாளம் காண முடியுமா என்ற கேள்வி உங்களுக்கு எழலாம்.

ஆனால் உண்மையில் மொத்த பூமியும் இரவில் ஒளிர்வதில்லை. நம் பூமியின் நகரமயமாக்கல் விகிதம் 1 விழுக்காடு தான். நம் வளர்ச்சி இதே விகிதத்தில் தொடர்ந்தால் 2150 வாக்கில் நாம் விண்வெளியில் இருந்து கவனிக்கப்படும் கிரகமாக ஒளிர்ந்துகொண்டு இருப்போம்.

நாம் பூமிக்கு வெளியில் அனுப்பியிருக்கும் செயற்கை கோள்களும் இந்த விஷயத்தில் பெரிதாக உதவுவதில்லை. நாம் இப்போது அனுப்பியிருப்பதை விட பில்லியன் செயற்கை கோள்கள் அதிகமாக அனுப்பினால் தான் விண்வெளியில் பிரகாசமாக செயற்கைக் கோள்கள் தெரியும்.

இதெல்லாம் நடக்குற காரியமா? எனக் கேட்பதற்கு முன்னர் முதல் கார் கண்டுபிடிக்கப்பட்டு 100 ஆண்டுகளில் நாம் 100 கோடி கார்களைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம் என்பதை மறந்துவிடக் கூடாது.

குழந்தைத் தனமாக இருந்தாலும் மற்றொரு யோசனையை முன்வைக்கின்றனர் அறிவியலாளர்கள். பொது மக்கள் மற்றும் அரசாங்கங்களின் உதவியோடு நாம் மிகப் பெரிய வட்ட அல்லது சதுர வடிவ தகடு ஒன்றை செய்து அதை விண்வெளியில் வைப்பதன் மூலம் ஏலியன்களை ஈர்க்கலாம்.

நாம் இப்போது இருப்பதனை நேரடியாக ஏலியன்கள் அறிந்துகொள்ள மிகக் குறைந்த காரணிகளே உள்ளன. ஆனால் ஏதோ பேரதிசயம் நடந்தால் தான் நாம் ஏலியன்களுடன் தொடர்புகொள்ள முடியும் என்றில்லை.

நாமும் அவர்களும் ஒரே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும். அது பெரியதாக இருக்கவேண்டும். அவ்வளவுதான்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?