சீனா : பாலத்தின் மீது கட்டப்பட்ட கலர்ஃபுல் கிராமம் - பின்னணியில் இருக்கும் சோகக்கதை என்ன? Twitter
உலகம்

சீனா : பாலத்தின் மீது கட்டப்பட்ட கலர்ஃபுல் கிராமம் - பின்னணியில் இருக்கும் சோகக்கதை என்ன?

சீனாவில் ஒரு பாலத்தின் மீது கட்டப்பட்டுள்ள பாலம் சீன மற்றும் ஐரோப்பிய கட்டடக்கலைகளின் கலவையாக இருப்பதனால் கவனம் பெறுகிறது. இதன் பின்னிருக்கும் சோகக்கதை தெரியுமா?

Antony Ajay R

சீனாவின் சோங்கிங் என்ற இடத்தில் இருக்கும் பாலம் அதன் தனித்துவமான அமைப்புக்காக புகழ்பெற்றது.

இங்கு ஒரு முழு கிராமமும் ஒரு பாலத்தின் மேல்தான் கட்டப்பட்டிருக்கின்றன.

லிசியாங் நதியின் மேல் இருக்கும் இந்த கிராமம் நவீன கட்டிடக்கலையின் வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

இதில் சீன மற்றும் மேற்கத்திய கட்டடக்கலையில் அமைந்த கட்டடங்கள் இருக்கின்றன.

ஏன் ஒரு பாலத்தின் மீது கிராமத்தை அமைக்க வேண்டும் என்ற கேள்வி இருக்கலாம். சீன அரசானது முழுக்க முழுக்க சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நோக்கத்திலேயே இந்த அமைப்பை உருவாக்கியதாம்.

பொருளாதார லாபத்தை மனதில் வைத்துக் கட்டப்பட்டதால் மிகவும் தனித்துவமான அமைப்பை உருவாக்க மிகவும் மெனக்கெட்டுள்ளனர்.

இதற்காக இங்கு மேற்கத்திய வடிவில் தங்குமிடங்களும் சீன பாரம்பரிய வடிவில் சில இடங்களும் கட்டப்பட்டுள்ளன.

சுற்றுலாப்பயணிகளை கவருவதற்காக ரியோவில் இருப்பது போன்ற இயேசுவின் சிலை முதலான பல மினியேச்சர்களை இங்கு எழுப்பியுள்ளனர்.

இங்குள்ள கட்டிடங்களுக்கு கண்ணைப் பறிக்கும் நிறங்களில் பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த நிறங்கள் இப்போது வெளுத்துப்போய்விட்டது.

பாலத்தில் கட்டப்பட்ட கிராமம் எதிர்பார்த்த அளவு சுற்றுலாப்பயணிகளைக் கவரவில்லை. இப்போது பலர் இங்கிருந்து இடம் பெயர்ந்து வெளி ஊர்களுக்கு சென்றுவிட்டனர். வீடுகள் காலியாகவே கிடக்கின்றன.

அக்கம்பக்கத்து ஊர் மக்கள் மட்டும் அவ்வப்போது வந்து செல்லும் இந்த பாலத்தை சுற்றுலாப்பயணிகளும் அவ்வப்போது எட்டி பார்கின்றனர். ஆனாலும் வருமானம் எதுவுமில்லை.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?