சீனா : சிட்டுக்குருவிகளை கொல்ல ஆணையிட்ட மாவோ, ஏன் தெரியுமா? - நடுங்க வைக்கும் வரலாறு Twitter
உலகம்

சீனா : சிட்டுக்குருவிகளை கொல்ல ஆணையிட்ட மாவோ, ஏன் தெரியுமா? - நடுங்க வைக்கும் வரலாறு

Antony Ajay R

உலக சிட்டுக்குருவி தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. சிட்டுக்குருவிக்கு தினமா என பலர் வியக்கின்றதை கவனிக்க முடிகிறது.

இயற்கையில் எந்த ஒரு உயிரினத்தின் மறைவும் சூழலியலை வெகுவாக பாதிக்கக் கூடியது. எல்லா உயிர்களும் ஏதோ ஒரு வகையில் ஒன்றை ஒன்று சார்ந்து வாழ்கின்றன.

அந்த வகையில் சிட்டுக்குருவிகள் மனித வாழ்வுக்கு அத்தியாவசியமானவை. இதனை உணர்ந்த இந்தியரான முகமது திலாவர் என்பவர்தான் சிட்டுக்குருவிக்கு ஒரு தினம் வேண்டும் என ஐ.நாவிடம் கோரிக்கை வைத்தார்.

இந்த சின்ன குருவிக்கு இவ்வளவு பில்டப்பா என எண்ண வேண்டாம். சிட்டுக்குருவிகள் இல்லாவிட்டால் நடக்கும் அவலங்களை இந்த மனித சமூகம் ஏற்கெனவே கடந்து வந்திருக்கிறது.

இது குறித்து தெரிந்துகொள்ள நாம் மாவோ காலத்து சீனாவுக்கு பயணிக்க வேண்டும்.

மாவோ சீனாவைக் கைப்பற்றியது முதலே பெரும் வறுமை வாட்டியது. 30 ஆண்டுகள் உள்நாட்டுப் போர் நடைபெற்றிருந்ததால் பொருளாதாரம் பாதிப்படைந்திருந்தது.

பெரும்பாலான இளைஞர்கள் வாழ்நாள் முழுவது சண்டைகளை மட்டுமே பார்த்தவர்களாக இருந்தனர். சரியான கல்வி கூட அவர்களை சென்று சேர்ந்திருக்கவில்லை.

மறுபக்கம் நாட்டின் பொருளாதாரம் கம்யூனிசம் என்ற புதிய பாதைக்கு செல்ல வேண்டியதாக இருந்தது.

Mao

நான்கு பூச்சி திட்டம்

வறுமையிலிருந்து மக்களை மீட்க உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தேவை மாவோ அரசுக்கு ஏற்பட்டது. அதற்காக பல திட்டங்கள் அதிரடியாக செயல்படுத்தப்பட்டன.

அதிலொன்று தான் நான்கு பூச்சி திட்டம். இந்த திட்டத்தின் படி, எலிகள், ஈக்கள், கொசுக்கள் மற்றும் சிட்டுக்குருவிகள் ஆகிய நான்கும் தேவையில்லாத உயிரினங்களாக, மனிதர்களுக்கு தீங்கு மட்டுமே விளைவிக்கக் கூடியதாக கருதப்பட்டன.

எலிகள், ஈக்கள், கொசுக்கள் மலேரியா, பிளேக் உள்ளிட்ட நோய்களை பரப்பின என்பதால் அவற்றை அழித்தொழிக்க உத்தரவிடப்பட்டது.

சிட்டுக்குருவிகள் பயிர்களை நாசம் செய்வதாக கருதப்பட்டதே சிட்டுக்குருவிகள் இந்த பட்டியலில் சேர்கப்படக் காரணம்.

அவை வயலில் விளையும் தானியங்களை உண்ணும், விதைகளை உண்ணும்போது உற்பத்தி பாதிக்கப்பட்டு உணவுப் பற்றாக்குறை ஏற்படுகிறது என்பதனால் அழிக்கப்பட வேண்டிய பூச்சிகள் பட்டியலில் சிட்டுக்குருவியும் சேர்க்கப்பட்டது.

கொல்லப்பட்ட சிட்டுகுருவிகள்

பூச்சிகளை அழிக்கும் திட்டத்தில் சிட்டுக்குருவிகளை விரட்டுவதற்கு அதீத வரவேற்பு கிடைத்தது. கண்முன்னே பயிர்களை தின்னும் குருவிகளை விவசாயிகள் சத்தமான ஒலி எழுப்பி விரட்டினர். குருவிகளுக்கு உணவுகிடைக்காமல் போனது.

எல்லா மக்களும் கிடைத்தவரை குருவிகளை கொன்றனர். குருவிகளை எப்படி விரட்டுவது, எப்படிக் கொல்வது என சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.

உணவில்லாமல் தவித்த குருவிகள் பறக்க திராணியற்று விழுந்து மடிந்தன. குருவிக்கூடுகளை கலைத்தனர்.

முட்டைகளை கீழே போட்டு உடைத்த மனிதர்கள், "குருவிகள் ஒழிந்துவிட்டன, இனி மகசூல் பெருகி வழியும்" என நம்பினர்.

"சில புள்ளிவிவரங்கள் படி, நூறுகோடிக்கும் அதிகமான எலிகளும் குருவிகளும் கொல்லப்பட்டன. பல்லாயிரம் ஈக்களும் கொசுக்களும் அழிக்கப்பட்டன. நான்கு பூச்சிகள் இயக்கம் வெற்றிபெற்ற ஒன்றாகவே இருந்திருக்க வேண்டும்" எனக் கூறுகிறது பிபிசி வலைத்தள அறிக்கை ஒன்று.

குருவிகள் கொலை மனிதர்களின் தற்கொலை?

கிட்டத்தட்ட சிட்டுக்குருவிகளே இல்லாத சீனா உருவானது. குருவிகளின் மறைவு மாவோ எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தியது.

நான்கு பூச்சிகள் இயக்கத்தின் விளைவாக விளைச்சல் பெருமளவில் குறைந்து உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டத் தொடங்கியது. ஸ்தம்பித்துப் போனது சீன அரசு.

சிட்டுக்குருவிகளை ஒழித்தது தான் பெரும் பற்றாக்குறைக்கு காரணம் என்பதை சீனா தெரிந்துகொள்ளவே அதிககாலமானது.

இதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஆய்வாளர்கள் இறந்த குருவிகளின் வயிற்றைக் கிழித்துப் பார்த்தபோதுதான் அவை தானியங்களை விட அதிகமாக பூச்சிகளை சாப்பிட்டன என்று கண்டறிந்திருக்கின்றனர்.

சிட்டுக்குருவி இல்லாததால் பூச்சிகளிடமிருந்து பயிர்களைக் காக்க யாராலும் முடியவில்லை. உண்மையான நண்பனாக இருந்த குருவிகளை இழந்துவிட்ட விவசாயிகள் கைக்கட்டி பயிர்கள் அழிவதைப் பார்க்கும் நிலை ஏற்பட்டது.

சிட்டுக்குருவி அழிப்பின் விளைவுகள்

நான்கு பூச்சிகள் இயக்கத்தை வரலாற்றறிஞர்கள் சிட்டுக்குருவி இயக்கம், சிட்டுக்குருவி அழிப்பு இயக்கம் என்றுதான் குறிப்பிட்டனர்.

அந்த அளவுக்கு அதன் தாக்கம் மோசமானதாக இருந்தது. அந்த காலத்தில் வறட்சியும் ஏற்பட்டதனால் பஞ்சம் வரத் தொடங்கியது.

இரண்டு, மூன்று ஆண்டுகளில் பஞ்சத்தால் மக்கள் உயிரிழக்கத் தொடங்கினர். "சிட்டுக்குருவி இனத்தை அழித்ததற்கு சீனா கொடுத்த விலை... ஒன்றரை கோடி மனித உயிர்கள் (சீன அரசின் கணக்குப்படி). ஆனால் 3 கோடியே 60 லட்சம் பேர் வரை இறந்து போனதாக "Tombstone' என்ற புத்தகத்தில் சீனப் பத்திரிகையாளர் யாங் ஜிஜெங் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புத்தகத்துக்கு தற்போது சீனா தடை விதித்துள்ளது. அந்தப் புத்தகத்தில் , சீன மக்கள் பட்டினி காரணமாக ஒருவரை ஒருவர் அடித்துக் கொன்று சாப்பிட்டதாகக்கூடச் சொல்லப்பட்டுள்ளது." என விகடன் தளத்தின் பதிவில் பார்க்க முடிகிறது.

இறுதியாக நான்கு பூச்சிகளை கொல்லும் இயக்கத்தில் சிட்டுக்குருவி நீக்கப்பட்டு மூட்டைப் பூச்சி சேர்க்கப்பட்டது. சிட்டுக்குருவிகளை காக்க இளைஞர்படை விரைந்தது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?