38 வயதாகியும் சிங்கிள்: மனநல மருத்துவரிடம் கூட்டிசென்ற தாய் - மருத்துவர் தந்த ட்விஸ்ட்! ட்விட்டர்
உலகம்

38 வயதாகியும் சிங்கிள்: மனநல மருத்துவரிடம் அழைத்து சென்ற தாய் - மருத்துவர் தந்த ட்விஸ்ட்!

இந்தியாவில் தான் இந்த நிலை நிலவுகிறது என்று நாம் சொல்லிவிடமுடியாது. சீனாவிலும் ஒரு தாய் தன் மகனுக்கு திருமணமாகவில்லை என்று மிகுந்த வருத்தத்தில் உள்ளார்.

Keerthanaa R

வளர்ந்து வரும் காலக்கட்டம் திருமணம் மீதான இளைஞர்களின் பார்வையை மாற்றிவருகிறது. பலரும், தாமதமானாலும் தங்களுக்கான இணையை கண்டுகொள்ளும்வரை திருமணம் செய்துகொள்வதில்லை என யோசிக்கின்றனர். இன்றைய நாளில் வயது திருமணத்திற்கு ஒரு தடை அல்ல.

நாம் இவ்வாறு யோசித்தாலும், நம் பெற்றோருக்கோ நமக்கு வயதாகிக்கொண்டே போகிறது என்ற கவலை. இந்தியாவில் தான் இந்த நிலை நிலவுகிறது என்று நாம் சொல்லிவிடமுடியாது. சீனாவிலும் ஒரு தாய் தன் மகனுக்கு திருமணமாகவில்லை என்று மிகுந்த வருத்தத்தில் உள்ளார்.

திருமணம்

வாங் என்பவர் இன்னும் கல்யாணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார் என்ற ஆதங்கம் அவரது தாய்க்கு அதிகமாகவே இருக்கிறது. இதுவரை தன் காதலி என்றோ, டேட் செய்துகொண்டிருக்கும் பெண் என்றோ யாரையும் வீட்டிற்கு அழைத்து வரவில்லை அல்லது தனக்கு அறிமுகப்படுத்தவில்லை என்று அவர் குற்றம் சாட்டுகிறார்.

இதனால் ”உனக்கு மண்டையில பிரச்சன” என்பது போல, மனதளவில் ஏதோ பாதிப்பு இருக்குமோ என்றெண்ணி மனநல மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார் வாங்கின் தாயார்.

நான்கு ஐந்து முறை மனநல மருத்துவரை சந்தித்துவந்த பிறகு மருத்துவர் சொன்ன பதில் தான் மிகவும் வேடிக்கையாக இருந்துள்ளது.

மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளது அவரது மகன் வாங் அல்ல, நீங்கள் தான் என்று கூறியுள்ளார் மருத்துவர். மகனை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தும் வியாதி அவருக்கு இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். தனது கதையை அவர் இணையத்தில் பகிர பல இளைஞர்களும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். தங்களது பெற்றோரும் தங்களிடம் இவ்வாறே திருமணம் குறித்து ஏதாவது ஒரு வகையில் அழுத்தம் தருவதாக கூறி வருகின்றனர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?