Chinese mother finds her son alive after thinking he was dead for 17 years Twitter
உலகம்

இறந்துவிட்டதாக எண்ணிய தாய் : 17 ஆண்டுகள் கழித்து மகனை கண்டுபிடித்த நெகிழ்ச்சி சம்பவம்

பின்னர் ஜாங் தனது குழந்தை என்பதை உறுதிப்படுத்த டிஎன்ஏ சோதனையும் செய்தார். சோதனையில் அவர் குழந்தை என உறுதியாகியுள்ளது.

Priyadharshini R

இறந்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருந்த மகனை 17 வருடங்கள் கழித்து உயிருடன் தாய் கண்டுபிடித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவைச் சேர்ந்த பெண் 17 வருடங்களாக அவரது மகன் இறந்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறார். ஜியாங்சு மாகாணத்தைச் சேர்ந்த ஜாங் கெய்ஹாங் தனது மகன் உயிருடன் இல்லை என நினைத்து பல ஆண்டுகள் வாழ்ந்தார்.

கடந்த 2005 இல் தனது மகன் அவரது உறவினரால் கடத்தப்பட்டதை அவர் கண்டுபிடித்தார். அவர் கர்ப்பமான பின் கணவரை பிரிந்து இருந்த ஜாங் கெய்ஹாங், முன்னாள் கணவருக்கு பயந்து உறவினர்கள் வீட்டில் தஞ்சம் புகுந்தார்.

இதனையடுத்து அங்கேயே அந்த பெண் பிரசவித்து ஒரு குழந்தையை பெற்றெடுத்துள்ளார். பிரசவத்திற்குப் பிறகு, உறவினர் ஜாங்கிடம் குழந்தை குறைபாடுகளுடன் பிறந்ததாகக் கூறினார்.

குழந்தைக்கு இரண்டு கால்களும் செயலிழந்து விட்டதாக தாயிடம் கூறினார். மேல் சிகிச்சைக்காக குழந்தையை விட்டுச் செல்லுமாறு தாயை வற்புறுத்தியுள்ளார்.

அதன் பின்னர் அந்த குழந்தை இறந்துவிட்டதாக ஜாங்கிடம் உறவினர் கூறியிருக்கிறார். சமீபத்தில், தான் அது உண்மையில்லை என்பதை கண்டுபிடித்தார் ஜாங்.

newborn baby

அந்த குழந்தை தற்போது ஒரு பள்ளி மாணவராக உள்ளார். மகனை பார்க்கும் போது அவர் முன்னாள் கணவன் போன்று இருப்பதை கண்டறிந்தார்.

பின்னர் ஜாங் தனது குழந்தை என்பதை உறுதிப்படுத்த டிஎன்ஏ சோதனையும் செய்தார். சோதனையில் அது அவர் குழந்தை என உறுதியாகியுள்ளது.

இருப்பினும், சிறுவனை வளர்ப்பு பெற்றோர் இத்தனை வருடங்களாக கவனித்துக் கொள்வதற்காக பணம் கேட்டுள்ளனர். இதனால் ஜாங் சிரமங்களை எதிர்கொண்டுருக்கிறார். பணம் கொடுக்க தயாராக இல்லாத போதிலும், சிறுவனை அவரிடமிருந்து ஜாங் அழைத்து செல்ல பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?