Countries To Travel To Where The Indian Rupee Will Make You Feel Rich
Countries To Travel To Where The Indian Rupee Will Make You Feel Rich Twitter
உலகம்

1 ரூபாய்க்கு இவ்வளவு மவுசா? இந்திய ரூபாய்க்கு அதிக மதிப்பு கொடுக்கும் நாடுகள் தெரியுமா?

Priyadharshini R

நம் நாட்டை விட்டு வெளிநாட்டிற்கு சுற்று பயணம் மேற்கொள்ள திட்டமிடும்போது பண மதிப்பு தான் நம் நினைவிற்கு உடனே வரும். நம் ஊரில் அதன் மதிப்பு வேறு, வெளிநாடுகளில் அதன் மதிப்பு வேறு.

பொதுவாக சர்வதேச பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்றாலே, தங்குவதற்கு ஹோட்டல் புக் செய்வது, விசா அனுமதி வாங்குவது, ஷாப்பிங் செலவுகள் என பயண திட்டமிடலுக்கு காரணமான ரூபாயின் மதிப்பு நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது.

டாலருக்கு நிகரான மதிப்பு இந்திய ரூபாய்க்கு இல்லை என்றாலும், பல நாடுகளின் இந்திய ரூபாயின் மதிப்பு அதிகமாக இருக்கிறது.

இந்த அழகான நாடுகளில் தான் இந்திய ரூபாய் மதிப்பு உங்களை பணக்காரர்களாக உணர வைக்கும். அங்கு 1 லட்சம் ரூபாய் கூட, உங்களை உள்ளூர் கோடீஸ்வரனாக்கும். இந்திய ரூபாய்க்கு அதிக மதிப்பு கொடுக்கும் நாடுகள் குறித்து இங்கே தெரிந்துகொள்ளலாம்.

ஈரான்

₹1 = 569.43 ஈரானிய ரியால்

நீங்கள் 1 லட்சம் இந்திய ரூபாயை ஈரானுக்கு எடுத்துக் சென்றால்,அது சுமார் 5.6 கோடி ஈரானிய ரியாலாக மாற்றப்படும்.

அங்கு ராஜ வாழ்க்கை வாழலாம்.

வியட்நாம்

₹1 = 310.46 வியட்நாமிய டாங்

தெற்காசியாவில் அமைந்துள்ள, வியட்நாமிற்கு பயணம் செய்வது என்பது ஒரு அற்புதமான அனுபவத்தை கொடுக்கும்.

1 லட்சம் இந்திய ரூபாயை வியட்நாமிற்கு எடுத்துக் சென்றால்,அது சுமார் 3 கோடி வியட்நாமிய டாங்காக மாற்றப்படும்.

இந்தோனேசியா

₹1 = 195.09 இந்தோனேசிய ரூபியா

உலகின் மிகப்பெரிய தீவுகளை கொண்ட இந்தோனேசியாவுக்கு பயணம் மேற்கொண்டால் பல்வேறு மற்றும் மாறுபட்ட சுற்றுலாத் தலங்களை கண்டு ரசிக்கலாம்.

கண்கவர் விலங்கினங்களைப் பார்க்கலாம். பல்வேறு கலாச்சாரங்கள் குறித்து தெரிந்துக்கொள்ளலாம்.

1 லட்சம் இந்திய ரூபாயை இந்தோனேசியாவுக்கு எடுத்துக் சென்றால்,அது சுமார் 2 கோடி இந்தோனேசிய ரூபியா மாற்றப்படும்.

கினியா

₹1 = 134.13 கினியன் பிராங்க்

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு அற்புதமான நாடான கினியா, பணக்கார மற்றும் மாறுபட்ட சுற்றுலாத் தலங்களை கொண்டது.

கினியாவுக்கு 1000 ரூபாயை எடுத்துக் சென்றால்,அது சுமார் 1 கோடி கினியன் பிராங்க்காக மாற்றப்படும். அது உங்களை அங்கு கோடீஸ்வரனாக உணர வைக்கும்.

கம்போடியா

₹1 = 55.73 கம்போடிய ரியல்

கம்போடியாவுக்கு செல்வதால் உலகின் மிகவும் கவர்ச்சிகரமான இடங்களை கண்டு ரசிக்கலாம்.

ஆசியாவில் பயணம் செய்ய மலிவான இடங்களில் இதுவும் இன்றும். இங்கு பத்தாயிரம் ரூபாய் எடுத்துக் சென்றால், அது 4 லட்சம் கம்போடிய ரியலாக மாற்றப்படும்

கொலம்பியா

₹1 = 49.66 கொலம்பிய பேசோ

கொலம்பியாவில் பல்வேறு கடற்கரைகள், மலைத்தொடர்கள், வரலாறு இடங்களை பார்த்து மெய் மறந்துபோவீர்கள்.

இங்கு பத்தாயிரம் ரூபாய் எடுத்துக் சென்றால், அது 5 லட்சம் கொலம்பிய பேசோவாக மாற்றப்படும்

சிலி

₹1 = 9.87 சிலி பேசோ

அற்புதமான நிலப்பரப்புகளைக் கொண்ட நாடு! மலையின் மீது அமைந்திருக்கும் வண்ணமயமான வீடுகள் காண்போரை மதி மயக்கும்.

இங்கு பத்தாயிரம் ரூபாய் எடுத்துக் சென்றால், அது 1 லட்சம் சிலி பேசோவாக மாற்றப்படும்.

அங்கோலா

₹1 = 8.68 அங்கோலா குவான்சா

அங்கோலா ஆப்பிரிக்காவின் நடுப்பகுதியிலே தெற்காக அமைந்துள்ள ஒரு நாடு.

இங்கு இருக்கும் அருங்காட்சியகங்கள், கடற்கரைகள், அற்புதமான சுற்றுலா தலங்கள் சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது.

இங்கு 1 லட்சம் இந்திய ரூபாயை எடுத்துக் சென்றால், அது சுமார் 6.2 லட்சமாக அங்கோலா குவான்சாவாக மாற்றப்படும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?