துருக்கி: இந்திய விமானத்திற்கு வான்வெளியை தர மறுத்ததா பாகிஸ்தான்?
துருக்கி: இந்திய விமானத்திற்கு வான்வெளியை தர மறுத்ததா பாகிஸ்தான்?  twitter
உலகம்

துருக்கி : உதவ சென்ற இந்திய விமானம் - பாகிஸ்தான் வழியாக பறக்க அனுமதி மறுக்கப்பட்டதா?

Keerthanaa R

துருக்கி நாட்டிற்கு மருத்துவ உதவிகளை கொண்டு செல்லும் இந்திய விமானத்திற்கு வான்வெளியை தர பாகிஸ்தான் மறுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி துருக்கி மற்றும் சிரியா நாடுகளை பயங்கர நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவில் 7.8 ஆக பூகம்பத்தின் அளவு பதிவானது. இது வரலாற்றிலேயே ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்று கூறப்படுகிறது.

பலி எண்ணிக்கை 8000த்தை எட்டியுள்ள நிலையில், பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன, மக்கள் இடிபாடுகளில் சிக்கித் தவித்துவருகின்றனர்.

இடிபாடுகளுக்குள் 12 மணி நேரமாக சிக்கியிருந்த சிறுமி ஒருவரை மீட்பு படையினர் வெளியில் எடுக்கும் வீடியோ, பிறந்த குழந்தை ஒன்றை மீட்டு எடுக்கும் வீடியோக்கள் இணையத்தில் பரவி மனதை கனக்கச் செய்து வருகின்றன.

உலக நாடுகளும் பேரிடரில் பாதிக்கப்பட்டுள்ள இரு நாடுகளுக்கும் மீட்பு குழு மற்றும் மருத்துவ உதவிகளை அனுப்பி வருகின்றன.

இந்நிலையில், துருக்கிக்கு மருத்துவ உதவி மற்றும் மீட்புக் குழுக்களை ஏற்றிச் சென்ற விமானத்திற்கு பாகிஸ்தான் தனது வான்வெளியை தர மறுத்ததாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.

சிஎன்என் நியூஸ் 18 தளத்தின் அறிக்கையின்படி, மருத்துவ உதவிகளை ஏற்றிச் சென்ற இந்திய விமானப் படையின் சி 17 விமானம் பாகிஸ்தான் வான்வெளி வழியாக செல்வதற்கு அனுமதி மறுத்துள்ளது பாகிஸ்தான்.

இதனால் தனது பாதையை மற்றிக்கொண்டு துருக்கி செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் தனது வான்வெளியை இந்திய விமானத்திற்கு தரமறுப்பது இது முதன்முறையல்ல.

இதற்கு முன்னர் கடந்த 2021ல் தாலிபான் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியபோது அங்கு சிக்கியிருந்த இந்தியர்களை மீட்டு அழைத்துவர நடவடிக்கைகள் எடுத்திருந்தபோதும் பாகிஸ்தான் வழியாக இந்திய விமானம் பறக்க அனுமதி மறுத்ததாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது.

இருப்பினும், துருக்கிக்கான இந்திய தூதர் சித்தாந்த் சிக்பால், இந்த சம்பவம் குறித்து தன்னிடம் எந்த தகவலும் வரவில்லை எனக் கூறியுள்ளார். பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் தரப்பிலிருந்தும் இது குறித்த எந்த தகவலும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

வளர்ப்பு நாய்க்கு ₹2.5 லட்சத்தில் தங்கச் சங்கிலி பரிசளித்த பெண்!

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?