உலகம் முழுவதும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வண்ணம் அற்புதமான நீர்வீழ்ச்சிகள் இருக்கின்றன. தலைகீழ் நீர்வீழ்ச்சி, கலர் கலர் நீர்வீழ்ச்சி என பல அற்புதமான நீர்வீழ்ச்சிகள் சுற்றுலாப் பயணிகளை பிரமிப்பில் ஆழ்த்துகின்றன.
அந்த வகையில் தாய்லாந்தில் உள்ள ஓட்டும் நீர்வீழ்ச்சி பற்றி தான் விரிவாக தெரிந்துகொள்ள போகிறோம்.
தாய்லாந்தின் சியாங் மாயில் உள்ள ஸ்ரீ லன்னா தேசிய பூங்கா ஒரு தனித்துவமான ஈர்ப்பைக் கொண்டுள்ளது. ஸ்ரீ லன்னா தேசிய பூங்காவின் மிகவும் சுவாரஸ்யமான அம்சங்களில் ஒன்று நாம்டோக் புவா டோங் ஆகும், இது ஒட்டும் நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த நீர்வீழ்ச்சியின் சிறப்பு என்னவென்றால், சுண்ணாம்புக் கற்கள் மற்றும் தண்ணீரில் உள்ள கனிமப் படிவுகள் பார்வையாளர்கள் நீர்வீழ்ச்சியில் வழுக்காமல் ஏற உதவுகிறது.
இந்த தனித்துவமான நீர்வீழ்ச்சியில் ஏற பார்வையாளர்களுக்கு கயிறுகள் உதவியாக உள்ளன.
சில இடங்களில் ஏறுவது செங்குத்தானதாக இருந்தாலும், கயிறு மற்றும் சரியான காலணிகளின் உதவியுடன் நீர்வீழ்ச்சியில் ஏறமுடியும் என்கின்றனர். சுண்ணாம்பு பாறைகளில் பாசிகள் வராததால் இதில் வழுக்காமல் சுற்றுலா பயணிகள் ஏற முடியும்.
சியாங் மாய்க்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த நீர்வீழ்ச்சி ஒரு பிரபலமான இடமாகும். நாம்டோக் புவா டோங் ஒரு பசுமையான வெப்பமண்டல காடுகளின் நடுவில் அமைந்துள்ளது.
இது ஒரு பிரபலமான சுற்றுலா தலமாக இருந்தாலும், நீங்கள் இங்கு நெரிசலை உணர மாட்டீர்கள். க்ரீம் நிற பாறைகள் காட்டின் பசுமைக்கு மத்தியில் தனித்து நிற்கின்றன.
இந்த நீர்வீழ்ச்சியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் இருக்கும். தாய்லாந்து செல்கிறீர்கள் என்றால் இந்த இடத்திற்கு நிச்சயம் சென்று ஒரு மறக்கமுடியாத அனுபவத்தை பெறுங்கள்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust