Doctors Remove Vodka Bottle From Man's Stomach In Nepal (Rep Imag) Twitter
உலகம்

வயிற்றிலிருந்து வெளியே எடுக்கப்பட்ட வோட்கா பாட்டில்: அதிர்ந்த மருத்துவர்கள்- என்ன நடந்தது?

மலக் குடல் வழியாக நுர்சாத்தின் உடலுக்குள் நுழைக்கப்பட்டு இருந்த பாட்டில், அவரது குடலை சேதப்படுத்தி இருந்தது. எனவே, அவரது உடலில் மலம் கசிந்து, குடல் வீக்கம் கண்டது.

NewsSense Editorial Team

விளையாட்டு எப்போதும் மனிதனை உயிர்போடு வைத்திருக்கும். ஆனால் சில நேரங்களில், விளையாட்டாகச் செய்வது, மிகப் பெரிய விபரீதமாக மாறுவது உண்டு.

அப்படி, நேபாளத்தில் விளையாட்டாக மது அருந்திவிட்டு ஒருவரின் மலக்குடல் வழியாக வோட்கா மதுபான பாட்டிலை நுழைத்துள்ளனர்.

என்ன நடந்தது?

நேபாளத்தைச் சேர்ந்த, 26 வயதான நுர்சாத் மன்சூரி கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். கூஜாரா நகராட்சியைச் சேர்ந்த இவரை மருத்துவமனையில் பரிசோதித்த போது, அவர் வயிற்றில் வோட்கா பாட்டில் இருந்தது தெரிய வந்தது.

விவரம் தெரிய வந்த மருத்துவர்கள், நுர்சாத்துக்கு அறுவை சிகிச்சை செய்தே ஆக வேண்டும் என்பதை எடுத்துச் சொல்லி சம்மதிக்க வைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, சுமார் இரண்டரை மணி நேரம் அறுவை சிகிச்சை நடைபெற்றது.

மலக் குடல் வழியாக நுர்சாத்தின உடலுக்குள் நுழைக்கப்பட்டு இருந்த பாட்டில், அவரது குடலை சேதப்படுத்தி இருந்தது. எனவே, அவரது உடலில் மலம் கசிந்து, குடல் வீக்கம் கண்டது.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு, நுர்சாத் ஆபத்தான நிலையை கடந்துவிட்டார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த செய்தி கடந்த வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டு வெளியானதாக இந்தியா டைம்ஸ் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

காவல் துறை விசாரணை

நுர்சாத்துக்கு நடந்தது குறித்து விசாரித்த நேபாள காவல்துறை அதிகாரிகள், இது அவருடைய நண்பர்கள் செய்த காரியமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர். அதிர்ஷ்டவசமாக அவருடைய வயிற்றுப் பகுதியையோ, குடலையோ அந்த வோட்கா பாட்டில் அதிக சேதங்களை ஏற்படுத்தவில்லை என்றும் செய்திகளில் கூறப்படுகின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக, ஷேக் ஷமீம் என்பவரை நேபாள காவல்துறை கைது செய்துள்ளது. மேலும் நுர்சாத்தின் நண்பர்கள் சிலரையும் காவல் துறை விசாரித்து வருகிறது.

இதே போல, இந்தியாவில், ஒருவரின் மலக்குடல் வழியாக ஸ்டீல் டம்ளரை வயிற்றுக்குள் செலுத்தியதாக கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் செய்திகள் வெளியாயின. சுமார் 8 செமீ விட்டமும், 15 செமீ நீளமும் கொண்ட டம்ளரை ஓடிசா மாநிலத்தில் உள்ள கஞ்சம் மாவட்ட மருத்துவமனையில் வைத்து அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்பட்டது இங்கு நினைவுகூரத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?