Dubai Canva
உலகம்

துபாய் விசாவுக்கு விண்ணப்பிக்கிறீர்களா? இந்த கட்டுரை உங்களுக்கானதுதான்

நீங்கள் டெபாசிட் தொகையை பணமாகவோ அல்லது டெபிட் கார்ட், கிரெடிட் கார்ட் பயன்படுத்தியோ செலுத்தலாம். டெபாசிட் பணத்தைச் செலுத்திய பின், பணம் செலுத்தியதற்கான ரசீதை பெற்றுக் கொள்ளவும்.

Gautham

துபாய் விசாவுக்கு விண்ணப்பித்தால் சில நேரங்களில் விசாவுக்கான கட்டணம் போக, செக்யூரிட்டி டெபாசிட்டுகளும் செலுத்த வேண்டி வரும். இதை வாரன்டி டெபாசிட் என்றும் அழைப்பர்.

எப்போது, என்ன மாதிரியான சூழலில் வாரன்டி டெபாசிட் கேட்பார்கள்? எவ்வளவு ரூபாய் வாரன்டி டெபாசிட்டாகச் செலுத்த வேண்டி இருக்கும்? வாருங்கள் பார்க்கலாம்.

முதலீட்டாளர் அல்லது கூட்டாளி விசாவில் இருந்து கொண்டு உங்களைச் சார்ந்தவர்களுக்கு ஸ்பான்சர் செய்யும் போது:

ஐக்கிய அரபு அமீரகத்தில் வியாபாரம் செய்பவர்களுக்கு மூன்று ஆண்டு காலத்துக்கு முதலீட்டாளர்கள் அல்லது பார்ட்னர் எனப்படும் கூட்டாளி விசா வழங்கப்படும். இந்த விசாவில் அமீரகத்தில் வசிப்பவர்கள், தங்களைச் சார்ந்து இருப்பவர்கள் மற்றும் வீட்டு உதவியாளர்களுக்கு ஸ்பான்சர் செய்து அவர்களை அமீரகத்துக்கு அழைத்து வரலாம்.

அப்படி அழைத்து வரப்படுபவர்கள் ஒவ்வொருவருக்கும், ஸ்பான்சர் செய்பவர் 1,500 திர்ஹாமை டெபாசிட்டாகச் செலுத்த வேண்டி இருக்கும் என சுப்ரீம் பிசினஸ் சர்வீசஸ் நிறுவனத்தைச் சேர்ந்த வணிக வளர்ச்சி மேலாளர் சிராஜுதின் உமர் கல்ஃப் நியூஸ் வலைத்தளத்திடம் கூறியுள்ளார்.

Dubai

விசாவுக்கு விண்ணப்பிக்கும் போதே இந்த டெபாசிட்டைச் செலுத்தலாம். இல்லையெனில் அமீர் சென்டரில் கூடச் செலுத்தலாம்.

21 வயது நிறைவடைந்த மாணவர்களுக்கு ஸ்பான்சர் செய்யும் பெற்றோர்

ஒருவேளை, பெற்றோர் தங்களின் 21 வயது நிறைவடைந்த ஆண் குழந்தையின் படிப்புக்கு மாணவர் விசாவுக்கு ஸ்பான்சர் செய்யும் போது, 2,500 திர்ஹாமை வாரன்டி டெபாசிட்டாகச் செலுத்த வேண்டி இருக்கும்.

Dubai

பெற்றோர்களுக்கான விசா

அமீரகத்தில் வாழும் குழந்தைகள், தங்களின் பெற்றோருக்கு விசா எடுக்கும் போது, ஒரு பெற்றோருக்கு 2,000 திர்ஹாம் வீதம் செக்யூரிட்டி டெபாசிட்டாகச் செலுத்த வேண்டி இருக்கும்.

ஸ்பான்சர் செய்யும் நபர் அமீரகத்தில் பார்க்கும் வேலை மற்றும் அவரது பதவி பொறுத்து இந்த டெபாசிட்கள் செய்யப்பட வேண்டுமா வேண்டாமா என்று கோரப்படும். இது ஒவ்வொருவருக்கும் மாறுபடும் என்கிறார் உமர்.

Dubai

வீட்டு உதவியாளருக்கான விசா

அமீரகத்தில் வசிக்கும் ஒரு நபர், தன் வீட்டில் உதவியாளராக பணிபுரியப் போகும் ஒருவருக்கு ஸ்பான்சர் செய்கிறார் என்றால், பணியாளர் விசாவுக்கு விண்ணப்பிக்கும் போதே ஸ்பான்சர் செய்பவர் 2,000 திர்ஹாமை டெபாசிட்டாகச் செலுத்த வேண்டும்.

எப்படி டெபாசிட் செய்யலாம்?

சார்ந்தவர்களுக்கான விசாவிற்கு விண்ணப்பிக்கும் நேரத்திலேயே டெபாசிட் தொகை செலுத்த வேண்டும். அதை அமீர் மையத்தில் அல்லது தட்டச்சு மையத்தில் கூட செலுத்தலாம்.

நீங்கள் டெபாசிட் தொகையை பணமாகவோ அல்லது டெபிட் கார்ட், கிரெடிட் கார்ட் பயன்படுத்தியோ செலுத்தலாம். டெபாசிட் பணத்தைச் செலுத்திய பின், பணம் செலுத்தியதற்கான ரசீதை பெற்றுக் கொள்ளவும்.

டெபாசிட் பணத்தை மீண்டும் பெறுவதற்கு, டெபாசிட் ரசீதை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.

Dubai

டெபாசிட் தொகையைத் திரும்பப் பெறுவது எப்படி?

விசா ரத்து செய்யப்பட்ட பிறகு, டெபாசிட் தொகை மீண்டும் வழங்கப்படும் என பி ஆர் ஓ டெஸ்க் டாக்குமெண்ட் கிளியரிங் சர்வீசஸ் நிறுவனத்தின் மேலாளர் அப்துல் ஹசன் கூறுகிறார்.

ஒருவருக்கு ஸ்பான்சர் செய்து விசா வாங்கும் போது, ஸ்பான்சர் செய்பவரின் ஐ பி ஏ என் எண்ணும் விவரங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும். அதைப் பயன்படுத்தித் தான் டெபாசிட் பணம் மீண்டும் ஸ்பான்சர் செய்தவருக்கே வழங்கப்படும்.

Dubai

அமீர் சென்டருக்குச் சென்று விசா ரத்துக்கு விண்ணப்பித்து, டெபாசிட் ரசீதைக் காட்டினால், ஐ பி ஏ என் எண்ணை வைத்து ஸ்பான்சர் செய்தவருக்கே பணம் ரீஃபண்ட் வழங்கப்படும். அதற்கு 100 திர்ஹாமை பிராசசிங் கட்டணமாகச் செலுத்த வேண்டி இருக்கும்.

ஒருவேளை டெபாசிட் ரசீது தொலைந்துவிட்டால் General Directorate of Residency and Foreigners Affairs (GDRFA) அமைப்பின் amer@gdrfad.gov.ae மின்னஞ்சலுக்கு விவரங்களை விளக்கமாகத் தெரிவித்து ஒரு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்.

அதோடு உங்கள் பாஸ்போர்ட் மற்றும் விசா ஸ்பான்சர் விவரம்,சார்ந்தோரின் பாஸ்போர்ட் & விசா ஸ்பான்சர்ஷிப் விவரம்,

டெபாசிட் அத்தாட்சி ரசீதை வேண்டி எழுதப்பட்ட கடிதம் ஆகியவற்றையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

அதன் பிறகு டெபாசிட் அத்தாட்சி ரசீது அனுப்பப்படும். அதை வைத்து டெபாசிட் தொகையைப் பெறலாம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?