துபாயின் மிகவும் விலையுயர்ந்த வீடு இதுதானா? இதன் மதிப்பு என்ன? Twitter
உலகம்

துபாயின் மிகவும் விலையுயர்ந்த வீடு இதுதானா? இதன் மதிப்பு இத்தனை கோடியா?

Priyadharshini R

உலகிலேயே ஆடம்பர வாழ்க்கை முறைக்கு பெயர் போன நாடு துபாய். ரஷ்ய பணக்காரர்கள் முதல் முகேஷ் அம்பானி வரை துபாயில் பெரிய பெரிய ஆடம்பர வீடுகளை வாங்கி வருகின்றனர்.

ஆனால் துபாயின் விலையுயர்ந்த வீடு குறித்து தெரியுமா? அப்படி என்னதான் இருக்கிறது அந்த வீட்டில், இந்த பதிவில் பார்க்கலாம்.

துபாயில் ஒரு அரண்மனை போன்று கட்டி வந்த வீடு சுமார் 750 மில்லியன் திர்ஹாம் அதாவது 1,600 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனால் துபாயில் மிகவும் விலையுயர்ந்த வீடு என்று பெயரிடப்பட்டது.

துபாய் ரியல் எஸ்டேட் தரவுகள் படி, நகரத்தில் பல கட்டிடம் பல ஆயிரம் கோடிக்கு விற்கப்பட்டு இருந்தாலும் சதுரடி மதிப்பில் இதுதான் விலையுர்ந்தது.

இந்த வீட்டில் ஐந்து படுக்கையறைகள் மட்டுமே இருந்தாலும், சுமார் 60,000 சதுர அடியில் அமைந்துள்ளது. இது துபாயின் பெவர்லி ஹில்ஸ் என்று பிரபலமாக அறியப்படும் எமிரேட்ஸ் ஹில்ஸில் அமைந்துள்ளது.

இந்த வீட்டிற்கு பயன்படுத்தப்பட்ட இத்தாலிய பளிங்கு மட்டும் $27 மில்லியன் டாலர்கள் மதிப்புடையது. அது மட்டுமில்லாமல் சுமார் 7,00,000 தங்கத் தாள்களைப் பயன்படுத்தி இந்த வீடு கட்டப்பட்டுள்ளது.

இந்த மாளிகை "மார்பிள் பேலஸ்" என்று அழைக்கப்பட முக்கிய காரணம் இந்த கட்டிடம் சுமார் 80 முதல் 100 மில்லியன் திர்ஹாம் மதிப்பிலான மிகவும் காஸ்ட்லியான இத்தாலிய மார்பிள் கல்லால் கட்டப்பட்டுள்ளது.

மார்பிள் பேலஸில் 5 பெரிய படுக்கையறைகள், 19 குளியலறைகள் மற்றும் பணியாளர்கள் தங்கக்கூடிய 12 அறைகள் உள்ளன.

மார்பிள் பேலஸில் 15 கார்கள் வரை வைத்திருக்கக்கூடிய ஒரு கேரேஜ், வீட்டின் தரை மட்டத்தில் பொழுதுபோக்கு மற்றும் உணவருந்துவதற்கான இடங்கள் உள்ளன.

இந்த மாளிகையின் பிரதான தளமானது உட்புறக் குளம், இங்கு 24 காரட் தங்கத்தால் செய்யப்பட்ட ஜக்குஸி இருக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?