Ecuador நாட்டில் நமது உடல் எடை குறைவாக இருப்பது ஏன்? ஆச்சரிய தகவல்கள்! Twitter
உலகம்

Ecuador நாட்டில் நமது உடல் எடை குறைவாக இருப்பது ஏன்? ஆச்சரிய தகவல்கள்!

நிலவுக்கு மிக அருகில் இருக்கும் மலை உச்சி எது தெரியுமா? உலகின் மிக உயரமான மலை எவரெஸ்ட் உச்சிதான் என்றால் தவறான விடை! ஈக்குவேடரில் உள்ள ஒரு மலைதான் அது. வாருங்கள் விரிவாக பார்க்கலாம்

Antony Ajay R

உடல் எடை இப்போது பலரும் அதிக கவனம் செலுத்தும் ஒன்றாக இருக்கிறது. நாம் எதுவுமே அதிகமாக சாப்பிடாமல் எடையைக் கூட்டலாம், எடையை குறைக்கவும் செய்யலாம். இதற்காக நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு பயணம் மட்டுமே.

ஆம் உலகின் எல்லா பகுதிகளிலும் நமது எடை ஒரேப்போல இருப்பதில்லை. எடை மற்றும் நிறைக்கு இடையில் இருக்கும் வித்தியாசத்தை நீங்கள் அறிவீர்கள். நிறை என்பது புவியின் ஈர்ப்புவிசை மற்றும் பிற விசைகள் நீங்க நம் எடையாகும்.

விண்வெளியில் உள்ள பொருட்களின் எடையை நிறையாக தான் குறிப்பிடுவர். எடை என்பது புவியில் எல்லா விசைகளையும் சேர்த்து குறிப்பிடப்படும். நாம் அண்டத்தின் (Universe) எந்த பகுதியில் இருந்தாலும் நமது நிறை மாறாது. ஆனால் எடை நாம் இருக்கும் இடத்தைப் பொருத்து மாறுபடக் கூடியது.

பூமியில் எடை இப்படி மாறுவதற்கு பூமி சுற்றுவதும் அதனால் ஏற்படும் மையவிலக்கு விசையும் தான் காரணம்.

பூமத்திய ரேகையில் இருக்கும் ஈக்குவேடர் நாட்டை எடுத்துக்கொண்டால் அங்கு மக்கள் எடை குறைவாக இருப்பார்கள். காரணத்தை கொஞ்சம் விளக்கமாக பார்க்கலாம்.

பூமி தன்னைத் தானே சுற்றும்போது அதன் மையத்தில் இருந்து தொலை தூரத்தில் உள்ள ஈக்குவேடர் அல்லது பூமத்திய ரேகைப் பகுதியில் உள்ள பொருட்களின் மீது மையவிலக்கு விசை (centripetal forces) செயல்படும்.

இதுவே துருவப்பகுதியில் பூமி சுழலும் வேகமும் குறைவாக இருக்கும். பூமியின் மையத்துக்கும் நெருக்கமாக இருப்போம், இதனால் மையவிலக்கு விசை செயல்படாது.

பூமிக்கு அருகில் இருக்கும்போது புவி ஈர்ப்பு விசையும் அதிகமாக இருக்கும். இதனால் நம் எடையும் 0.5 விழுக்காடு அதிகமாக இருக்கும்.

எனவே நீங்கள் பூமியின் துருவப்பகுதியில் 200 கிலோ இருந்தால் பூமத்தியரேகைப் பகுதியில் 199 கிலோதான் இருப்பீர்கள். எனவே தான் ஈக்குவேடர் சென்றால் குறைவான எடையில் இருப்பீர்கள்.

ஈக்குவேடர் நாட்டில் புவியீர்ப்பு விசை குறைவாகத்தான் இருக்கும். அந்த நாட்டில் சில பகுதிகளில் கண்கூடாக பார்க்கலாம். இங்கு ஒரு சிறிய ஆணியில் முட்டையை நிற்கவைக்க முடியும்.

ஈக்குவேடரில் சரியாக பூமத்திய ரேகையில் வரையப்பட்ட ஒரு கோடு உள்ளது. அதில் கால்வைத்து நடப்பதே சவாலானதாக இருக்கும். இங்கு உள்ள தொட்டியில் தண்ணீர் ஊற்றினால் சுழலாமலே கீழே செல்லும்.

ஈக்குவேடரில் இந்த இடம் முக்கியமான் சுற்றுலா தளமாகவும் இருக்கிறது.

பூமியின் மையத்தில் இருந்து தொலைவில் இருப்பதனால் ஈக்குவேடரில் உள்ள மலைகளில் ஆக்ஸிஜன் குறைவாக இருக்கும். இதனால் அங்கு ஓடுவது கூட சவாலானது.

உலகின் மிக உயரமான சிகரம் எவரெஸ்ட் என்பது நமக்குத் தெரியும். ஆனால் நிலவுக்கு அருகில் இருக்கும் மலை உச்சி ஈக்குவேடரில் உள்ள சிம்போராசோ மலைதான். இது பூமத்திய ரேகைப்பகுதியில் இருப்பதனால் கடல் மட்டத்தில் இருந்து சிறிய மலையாக இருந்தாலும் புவியின் மையத்தில் இருந்து தொலைவில் இருக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?