எலான் மஸ்க் Twitter
உலகம்

நெட்ஃபிளிக்ஸை விமர்சித்த எலான் மஸ்க் - பற்றி எரியத் தொடங்கிய இணையம்

NewsSense Editorial Team

உலகின் நம்பர் 1 பணக்காரராக வலம் வரும் எலான் மஸ்க், ட்விட்டரை அதிகம் பயன்படுத்தும் பிரபலங்களில் ஒருவர். தன் நிறுவன விவரங்கள் தொடங்கி, குடும்ப விவரங்கள் வரை அனைத்தையும் ட்விட்டரில் பதிவிடுபவர். சில முறை இதைச் செய்யலாமா வேண்டாமா என வாக்கெடுப்பு எல்லாம் கூட ட்விட்டரிலேயே நடத்துவார் எலான் மஸ்க்.

சமீபத்தில் ட்விட்டரை வாங்கப் போகிறேன் எனப் பேசி, ஒட்டுமொத்த உலக இணையத்தையும் சூடாக்கிய மனிதர், தற்போது நெட்ஃப்ளிக்ஸ் குறித்துப் பேசி மீண்டும் இணையவாசிகளை தன் பக்கம் திருப்பியுள்ளார்.

உலகின் முன்னணி ஓடிடி தளங்களில் ஒன்றான நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலான சேவையில் முதல் முறையாக சந்தாதாரர்களின் எண்ணிக்கை சரிவைக் கண்டுள்ளது. அது குறித்து இணையத்தில் பரவலாக விவாதங்கள் நடந்து கொண்டிருக்க, டெஸ்லா நிறுவனத் தலைவர் மற்றும் உலகின் நம்பர் 1 பில்லியனர் எலான் மஸ்கும் அது குறித்து தன் கருத்தை ட்விட்டரில் பதிவிட்டார்.

"விழிப்படைந்த மனம் என்கிற வைரஸ் நெட்ஃபிளிக்ஸை பார்க்கவிடாமல் செய்கிறது" என ஸ்லேஷ்டாட் என்கிற தளத்தின் ட்விட்டுக்குக் கீழ் தன் கருத்தைப் பதிவு செய்திருந்தார்.

Netflix

இக்கருத்தை இதுவரை சுமார் 46.4 ஆயிரம் பேர் ரீ-ட்விட் செய்திருக்கின்றனர், 2.88 லட்சத்துக்கு மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.

எலான் மஸ்க் விழிப்பு நிலையைக் குறித்து தன் கருத்தைப் பதிவு செய்வது இது ஒன்றும் முதல் முறையல்ல. விழிப்புநிலை தான் மனித நாகரிகத்தில் மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என அவர் முன்பு ஒரு முறை கூறியதும் இங்கு நினைவுகூரத்தக்கது.

நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தில் 2022ஆம் ஆண்டு முதல் காலாண்டில் 221.6 மில்லியன் சந்தாதாரர்கள் இருக்கின்றனர். கடந்த 2021ஆம் ஆண்டின் நான்காவது மற்றும் கடைசி காலாண்டிலிருந்த சந்தாதாரர்கள் எண்ணிக்கையை விட இது கொஞ்சம் குறைவு.

2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நெட்ஃப்ளிக்ஸ் சுமார் 2 லட்சம் சந்தாதாரர்களை இழந்திருப்பதாகவும், ரஷ்யாவில் தன் சேவையை நிறுத்தியதால் 7 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மேற்கொண்டு அடுத்த காலாண்டில் சுமார் 20 லட்சம் (2 மில்லியன்) வாடிக்கையாளர்களை இழக்கலாம் என்றும் சில சந்தை கணிப்புகள் உலாவிக் கொண்டிருக்கின்றன.

இந்த செய்தியைக் கேட்ட பங்குச் சந்தை முதலீட்டாளர்கள், நெட்ஃப்ளிக்ஸ் பங்கை வந்த விலைக்கு விற்றுவிட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர். அமெரிக்காவின் நாஸ்டாக் பங்குச் சந்தையில் கடந்த வர்த்தக நாளில் 348 டாலருக்கு வர்த்தகம் நிறைவடைந்து இருந்தது. ஆனால் இன்று காலை முதல் சுமார் 35 சதவீதம் விலை சரிந்து சுமார் 226 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?