Elon Musk Twitter
உலகம்

Elon Musk: ”நான் ராஜினாமா செய்கிறேன்”- CEO பதவியில் இருந்து விலகும் எலான் மஸ்க்!

Priyadharshini R

ட்விட்டர் சிஇஓ பதவியிலிருந்து விலக போவதாக எலான் மஸ்க் தனது வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் போன்ற புதிய தொழில்நுட்பங்களை கையாளும் நிறுவனங்களை நடத்தி வருகிறார் எலான் மஸ்க்.

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கடந்த அக்டோபர் மாதம் வாங்கினார்.

elon musk

அதன் பிறகு, நிறுவனத்தில் நிறைய மாற்றங்களை கொண்டு வந்த மஸ்க், லே ஆஃப் , புளு டிக்கான கட்டணம் என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

அப்படி டிசம்பர் 18 ஆம் தேதி ”தான் ட்விட்டர் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டுமா? “ எனக் கேட்டு கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தினார் எலான் மஸ்க்.

Twitter

அதன் முடிவில் கிட்டத்தட்ட 58 சதவிகிதம் பேர் அவர் அந்த பதவியை விட்டு விலகவேண்டும் என்று பதிலளித்திருந்தனர்.

ஏற்கனவே கருத்துக்கணிப்பை பதிவிட்ட மஸ்க், அதன் முடிவுகளுக்கு ஒத்துப்போவேன் என உறுதியளித்திருந்தார்.

இந்நிலையில் ட்விட்டர் சிஇஓ பதவியிலிருந்து விலக போவதாக எலான் மஸ்க் தனது வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில் பதவி ஏற்க ஒரு முட்டாளை விரைவில் கண்டறிந்த பின் ட்விட்டர் சிஇஓ பதவியில் இருந்து நான் ராஜினாமா செய்கிறேன். அதன் பின்னர் மென்பொருள் மற்றும் சர்வர் குழுவில் மட்டுமே தலைமை வகிப்பேன் என்று பதிவிட்டிருக்கிறார்.

இந்த இந்த ட்விட்டர் பதிவிற்கு பல்வேறு கமெண்டுகளை இணைவாசிகள் தெரிவித்து வருகின்றன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?