இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வாழும் இந்துக்கள் மிகவும் சொகுசாக வாழ்வதாக புதிய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
பிரிட்டனின் தேசிய புள்ளிவிவரங்கள் அலுவலகம் (ONS) இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் பல்வேறு துணைபிரிவுகளை ஆய்வு செய்து இதனைக் கூறியுள்ளனர்.
மேலும் சீக்கியர்கள் பெரும்பாலும் சொந்த வீடுகளில் வசிப்பதாகவும் புள்ளிவிவரங்கள் கூறியுள்ளன.
"இந்துவாக தங்களை அடையாளப்படுத்திக்கொள்பவர்கள் மிகவும் வசதியாக, நல்ல உடல்நலத்துடன் இருக்கின்றனர்" என ஓ.என்.எஸ் அறிக்கை தெரிவிக்கிறது.
87.8% இந்துக்கள் மிகவும் நல்ல நிலையில் இருக்கின்றனர். நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 82.0% தான் நல்ல நிலையில் இருக்கின்றனர்.
கல்வியிலும் இந்துக்கள் சிறந்த நிலையில் இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்துக்களில் 54.8 விழுக்காடு நபர்கள் லெவல் 4 தகுதி பெற்றிருக்கின்றனர். ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 33.8 விழுக்காடு நபர்களே இந்த கல்வி தகுதி உடையவர்களாக இருக்கின்றனர்.
இங்கிலாந்தின் பிரதமராக தேர்தெடுக்கப்பட்டுள்ள ரிஷி சுனக் கூட ஒரு இந்திய வம்சாவளியான இந்து என்பது குறிப்பிடத்தக்கது.
சீக்கியர்களில் 77.7 விழுக்காடு நபர்கள் தங்களது சொந்த வீடுகளில் வாழ்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுபக்கம் அங்கு வசிக்கும் இஸ்லாமியர்கள் 4 மடங்கு அதிக நெரிசலான வீடுகளிலேயே வாழும் நிலை இருக்கிறது.
மேலும் 16 முதல் 64 வயது உள்ள முஸ்லீம்களில் குறைந்த நபர்கள் (51.4%) மட்டுமே வேலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust