இங்கிலாந்து : தற்செயலாக வெடித்த இரண்டாம் உலகப் போர் குண்டு - முழு விவரம் Twitter
உலகம்

இங்கிலாந்து : தற்செயலாக வெடித்த இரண்டாம் உலகப் போர் குண்டு - முழு விவரம்

Antony Ajay R

இரண்டாம் உலகப் போர் காலத்தைச் செர்ந்த வெடிகுண்டு இங்கிலாந்தின் யார்மௌத் என்ற பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை செயலிழக்கச் செய்யும் முன் தற்செயலாக வெடித்துவிட்டது.

கடந்த செவ்வாய் கிழமை யாரோ நதியில் அகழாய்வு செய்துகொண்டிருந்த ஒரு ஒப்பந்ததாரர் 250 கிலோகிராம் எடை உள்ள இந்த வெடிகுண்டை கண்டுபிடித்தார்.

உடனடியாக அவசரகதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தொடங்கினர். வெடிகுண்டு ஆயுத கருவிகளைக் கையாளும் குழுவினர் அங்கு அழைத்துவரப்பட்டனர். சாலைகள் மூடப்பட்டு அந்த பகுதியில் இருந்த அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டனர்.

வெடிகுண்டை செயலிழக்க செய்யும் வேலைகளை வெள்ளிக்கிழமைத் தொடங்கியபோது அது தற்செயலாக வெடித்தது. மிகப் பெரிய வெடிப்பை ஏற்படுத்தியதாக செய்திதளங்கள் கூறுகின்றன.

பாதுகாப்பு அதிகாரிகள் அங்குள்ள பணியாளர்களையும் வீடுகளில் இருந்தவர்களையும் வேறு இடத்துக்கு மாற்றிவிட்டதனால் உயிர்பலிகள் தவிர்க்கப்பட்டன. மேலும் வெடிகுண்டை மணல் பெட்டிகள் சூழ வைத்திருந்ததால் காயங்களும் இல்லை.

குண்டு வெடிப்பை காவல்துறை ட்ரோன் கேமரா பதிவு செய்தது. அந்த வீடியோ வைரலாக பரவியது.

"கிரேட் யார்மவுத்தில் கிடைத்த வெடிகுண்டு, அதை செயலிழக்கச் செய்யும் போது வெடித்தது. எங்கள் ட்ரோன் அந்த தருணத்தை பதிவு செய்துள்ளது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதை எங்களால் உறுதிப்படுத்த முடியும்" என நார்ஃப்லோக் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?