சீனாவில் உயிரிழந்து விட்டார் என மருத்துவமனையில் கூறப்பட்ட முதியவர் பிரேதப் பரிசோதனை கூடத்தில் உயிருடன் எழுந்தது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
சீனா, தற்போது மீண்டும் கொரோனாவின் தாக்கம் தலைதூக்கியுள்ளது. பரவலைக் கட்டுப்படுத்த சீனாவில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. பல நகரங்களில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
பல நாடுகள் கொரோனா கட்டுப்பாடுகளுக்குத் தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், சீனா பொது முடக்கத்தை அமல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், ஷாங்காய் நகரில் புட்டுவோ மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் முதியவர் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அந்த முதியவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவரை பிரேதப் பரிசோதனை கூடத்திற்கு எடுத்துச் சென்றனர். ஆனால் அங்கு முதியவரின் உடல் பாகங்கள் அசைவதைக் கண்ட ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இதன் பின்னர் அவரது உடல்நலம் சீரடைந்துள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தக் குழு ஒன்றை அமைத்து உள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn: https://www.newssensetn.com/
Nalam360 : https://www.newssensetn.com/health
Newsnow: https://www.newssensetn.com/wow-news
Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu