24 நாட்கள் நடுக்கடலில் சிக்கிய நபர்; ஹெய்ன்ஸ் நிறுவனம் இவரை வலைவீசி தேட என்ன காரணம்? twitter
உலகம்

24 நாட்கள் நடுக்கடலில் சிக்கிய நபர்: உயிர் பிழைத்தது எப்படி? - விறுவிறு கதை

NewsSense Editorial Team

பொதுவாக ஒருவரால் உணவில்லாமல் சுமார் ஒரு சில வார காலத்தைக் கடக்க முடியும். நல்ல தண்ணீர் இல்லாமல் ஒரு சில நாட்களைக் கடப்பதே பெரிய விஷயம்.

ஆனால் இங்கு ஒரு மனிதர் வெறுமனே கெட்ச் அப், சாஸ் போன்ற சில சுவையூட்டக் கூடிய, வாசனை சேர்க்கக் கூடிய ஐட்டங்களை மட்டும் சாப்பிட்டு, நடுக்கடலில் சுமார் 24 நாட்களைக் கழித்து, உயிரோடு தப்பிப் பிழைத்து இருக்கிறார்.

டொமினிகாவைச் சேர்ந்த 47 வயதான எல்விஸ் ஃப்ரான்காயிஸ் (Elvis Francois) ஒரு கடலோடி (sailor). செயின்ட் மார்டின் பகுதியில் உள்ள கடற்கரையில் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தன் படகை பழுது பார்க்கத் தொடங்கியுள்ளார்.

கடல் அலையின் வலிமை காரணமாக, படகு மெல்ல கடல் பக்கமாக நீந்திச் சென்றுவிட்டதாக சி என் என் வலைதளக் கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தக் கடலோடியால் கரையைக் கண்டுபிடித்து திரும்ப வந்து சேர முடியவில்லை.

எனவே, அப்படியே படகில் தத்தளித்தபடி சுமார் 24 நாட்கள் கடலிலேயே பொழுதைக் கழித்து இருக்கிறார்.

படகில் கைவசம் இருந்த கெட்ச் அப், பூண்டுப் பொடி போன்ற சில பல விஷயங்களை வைத்து மனிதர் வயிற்றை நிறப்பி உயிர் பிழைத்து இருக்கிறார் என்பது தான் ஆச்சர்யமான செய்தி.

நடுக்கடலில் மிதந்து கொண்டிருந்த படகில், உதவி என எழுதி இருந்ததைப் ஒரு விமானத்தில் பறந்து கொண்டிருந்த விமானி பார்த்து, கொலம்பிய ராணுவத்திடம் தகவல் கொடுத்ததார்.

அதன் பிறகே அவரை கொலம்பிய கடற்படையினர் காப்பாற்ற முடிந்ததாக கூறப்படுகிறது.

கௌரவ் ஷிண்டே: GPS, மொபைல் கூட இல்லாமல் தனியாக பெருங்கடலில் பயணிப்பவர் - யார் இவர்?

கெட்ச் அப் சாஸை மட்டுமே வைத்து உயிர் வாழ்ந்த எல்விஸ் ஃப்ரான்காயிஸுக்கு ஒரு நவீன நேவிகேஷன் வசதிகளைக் கொண்ட கப்பலை பரிசளிக்க, ஹெய்ன்ஸ் என்கிற கெட்ச் அப் நிறுவனம் முன் வந்தது.

அதில் பிரச்னை என்னவென்றால், எல்விஸை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஹெய்ன்ஸ் நிறுவனம், எல்விஸின் சொந்த நாடான டொமினிகா அரசாங்கத்திடம் விவரங்களை எடுத்துச் சொல்லி எல்விஸைக் கண்டுபிடித்துக் கொடுக்குமாறு முறையிட்டது, பலனில்லை.

அதே போல, கொலம்பியா நாட்டின் கப்பற்படை தான் எல்விஸை காப்பாற்றி கரையில் கொண்டு வந்து சேர்த்தனர். அவர்களிடமும் எல்விஸைப் பற்றியும், அவர் கிடைத்தால் தங்களுக்குத் தகவல் கொடுக்குமாறு கூறியதும் ஹெய்ன்ஸ் நிறுவனத்துக்கு போதிய பலனளிக்கவில்லை.

கடந்த பல நாட்களாக, எல்விஸ் ஃப்ரான்காயிஸ் எங்கிருக்கிறார், என்ன ஆனார் என்பது குறித்த எந்த விவரங்களும் ஹெய்ன்ஸ் நிறுவனத்துக்குத் தெரியவில்லை.

அதிகாரிகளிடமும், அரசாங்கங்களிடமும் எல்விஸைக் கண்டுபிடித்துக் கொடுக்குமாறு கோரிக்கை வைத்து சலித்துப் போன ஹெய்ன்ஸ் நிறுவனம், நேரடியாக பொதுமக்களிடம் எல்விஸ் ஃப்ரான்காயிஸைக் கண்டுபிடித்துக் கொடுக்குமாறு கோரிக்கை வைத்தது.

இதற்காக #FindTheKetchupBoatGuy என்கிற ஹேஷ்டேகை உருவாக்கி பல்வேறு சமூக வலைதளங்களிலும் டிரெண்டாக்கியது ஹெய்ன்ஸ் நிறுவனம்.

மக்கள் மன்றத்தில் ஹெய்ன்ஸ் நிறுவனம் வைத்த கோரிக்கை வெற்றிகரமாக நிறைவேறிவிட்டதாக, கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி சி பி எஸ் நியூஸ் வலைதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

கடைசியில் மனிதர் டொமினிகா தீவிலேயே இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக ஹெய்ன்ஸ் நிறுவன தரப்பிலேயே கூறியுள்ளனர். விரைவில் நல்ல நேவிகேஷன் வசதியுள்ள கப்பலை ஹெய்ன்ஸ் நிறுவனத்திடமிருந்து எல்விஸ் பரிசாகப் பெறுவார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?