புறாவின் முதுகில் வைத்து சிறைக்குள் போதைபொருள் கடத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுமார் 30 கிராம் எடையுள்ள கிறிஸ்டல் மெத் எனும் போதைபொருளை கடத்தியுள்ளனர்.
புறா பழங்காலத்திலிருந்து செய்தி பரிமாற்றத்திற்கான முக்கிய கருவியாக இருந்துள்ளது. உளவு பார்ப்பதற்கும்புறாக்கள் பயன்படுத்தப்பட்டன.
இதன் கால்களில் ஒரு துருப்புச்சீட்டினை கட்டிவிட்டால், சேரவேண்டிய இடத்திற்கு சரியாக சென்று சேரும். கிட்ட தட்ட 75 கிலோகிராம் எடை வரை புறாக்களால் சுமந்து செல்ல முடியும்.
ஆனால், புறாவை வேறு பரிமாற்றத்திற்காக பயன்படுத்தியுள்ளனர் கனடா நாட்டினர்.
க்ளோபல் மெயில் பத்திரிக்கையின் அறிக்கையின்படி கனடாவிலுள்ள ஒரு கூட்டாச்சி சிறைச்சாலையில் ஒரு புறா பிடிப்பட்டது.
அதன் முதுகில் ஒரு சிறிய பை கட்டப்பட்டிருந்தது. அதனுள் போதைபொருள் இருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சிறைச்சாலை அதிகாரிகள் சற்று சிரமப்பட்டு தான் புறாவைனை பிடித்துள்ளனர். அதன் முதுகில் கட்டப்பட்டைருந்த பையை கைப்பற்றிய பின்னர் அதனை விடுவித்தனர். இதுவரை சிறைச்சாலைக்குள் போதைப்பொருளை கடத்த பல விதமான முயற்சிகளை சிறைவாசிகள் மேற்கொண்டுள்ளனர் எனவும் ஆனால், இது போன்ற சம்பவம் இதுவே முதல் முறை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust