துபாயில் பறக்கும் டாக்ஸிகளைப் பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது.
பறக்கும் டாக்ஸி எப்போது, எப்படி சாத்தியமாகும் என்பதைக் காணலாம்.
பெரிய நகரங்களில் வசிப்பவர்கள் எதிர்கொள்ளும் மிகப் பெரிய பிரச்னை போக்குவரத்து நெரிசல் தான்.
நெரிசலில் மாட்டிக்கொண்டால் நமக்கே எப்படியாவது பறந்து சென்றுவிட மாட்டோமா என்று தோன்றும். இதனை நடைமுறைப்படுத்த இருக்கிறது துபாய்.
துபாயில் நியோம் நகரம் முதல் மூன் ரெசார்ட் வரை பல நவீன கட்டடங்கள், வசதி வாய்ப்புகள் வர இருக்கின்றன. இவற்றுடன் பறக்கும் டாக்ஸி பற்றிய எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது.
2026ம் ஆண்டு பறக்கும் டாக்ஸிகள் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக கூறப்பட்டுள்ளது. முதல் கட்டமாக துபாய் சர்வதேச விமான நிலையம், டவுன்டவுன் துபாய், பாம் ஜுமேரா, துபாய் மெரினா ஆகிய இடங்களுக்கு செல்லும் ஏர் டாக்ஸிகள் இயக்கப்பட உள்ளன.
மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் இவை அபுதாபி உள்ளிட்ட பிற நகரங்களை இணைக்கும்படியாக விரிவுபடுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
துபாயில் 35 இடங்களில் பறக்கும் டாக்ஸிக்கான நிலையங்களை (வெர்டிபோர்ட்ஸ்) அமைக்கும் பணியில் பிரேசிலைச் சேர்ந்த எம்பரர் என்பவரின் ஈவ் ஹோல்டிங் மின்சார வானூர்தி நிறுவனம் மற்றும் யுஏஇ-யைச் சேர்ந்த ஃபால்கன் ஏவியேஷன் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இந்த நிறுவனங்களின் டிசைனுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டதாக கடந்த பிப்ரவரி 12ம் தேதி பிரதமர் முகமது பின் ராஷித் அல் மக்தூம் ட்விர்ட்டரில் தெரிவித்திருந்தார்.
இந்த ஏர் டாக்ஸியில் ஒரே நேரத்தில் 4 பயணிகளும் ஒரு பைலட்டும் பயணிக்கலாமாம்.
சமீபத்தில் ஜப்பானைச் சேர்ந்த ஸ்கை ட்ரைவ் என்ற பறக்கும் டாக்ஸி நிறுவனம் துபாயுடன் இணைந்துள்ளது. 2045ம் ஆண்டுக்கும் 1500 வெர்டிபோர்ட்களை உருவாக்கும் தொலைநோக்கு திட்டத்தில் பணியாற்றுவதாக கூறியிருக்கிறது.
முஸிக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust