Foods you thought were of Indian-origin but aren't Twitter
உலகம்

இந்திய உணவுகள் என நீங்கள் நினைக்கும் இவையெல்லாம் எந்த நாட்டு உணவு என்று தெரியுமா?

இன்று நாம் இந்திய உணவு என நினைத்து சாப்பிடும் பல உணவுகள் உண்மையில் இந்தியாவில் உருவானது இல்லை, இவை எல்லாம் வெளிநாடுகளில் உருவாகி படிபடியாக இந்தியாவிற்குள் நுழைந்தது.

NewsSense Editorial Team

இந்தியா கலாச்சாரத்திற்கு மட்டுமல்லாமல், பாரம்பரிய உணவுகளுக்கு பெயர் பெற்றது.

இந்தியாவின் பாரம்பரிய உணவுகளின் சுவைக்கு மற்ற நாட்டவர்களும் அடிமை என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு இந்திய பாரம்பரய உணவிற்கு தனி மதிப்பு உள்ளது.

ஆனால் இன்று நாம் இந்திய உணவு என நினைத்து சாப்பிடும் பல உணவுகள் உண்மையில் இந்தியாவில் உருவானது இல்லை, இவை எல்லாம் வெளிநாடுகளில் உருவாகி படிபடியாக இந்தியாவிற்குள் நுழைந்து தற்போது இந்தியர்களின் நாக்கில் நடனமாடுகிறது.

அப்படி இந்திய உணவு என நினைத்துக்கொண்டிருக்கும் வெளிநாட்டு உணவுகளை பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.

ஜிலேபி

மத்திய கிழக்கில் இருந்து உருவான ஜிலேபி பாரசீக படையெடுப்பாளர்களால் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது.

இது முதலில் பாரசீக மொழியில் ‘ஸலிபியா’ அல்லது ‘ஜுலாபியா’ என்றும் அரபியில் ‘ஜலபியா’ என்றும் அழைக்கப்பட்டது.

குலாப் ஜாமுன்

இந்தியாவில் அதிலும் குறிப்பாக வட மாநிலங்களின் வீட்டு விஷேசங்களில் கண்டிப்பாக இந்த ஸ்வீட் இருக்கும். பரம்பரிய உணவாக மாறிப்போன குலாப் ஜாமுனின் பூர்வீகம் பெர்சியா நாடு.

அங்கிருந்து தான் இந்தியாவிற்குள் வந்துள்ளது. பெர்சியாவில் இந்த உணவிற்கு லுக்மேட் அல் க்வாடி என பெயராகும்.

தால் பாத்

இந்தியா முழுவதும் உண்ணப்படும் மிகவும் பொதுவான மற்றும் பிரபலமான உணவாக இது இருக்கிறது.

தமிழகத்தில் பருப்பு சாதம் என இதை அழைக்கிறோம். இந்திய உணவு என பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் உண்மையில் இது நேபாளத்தில் உருவானது. பின்னர் அங்கிருந்து இன்று இந்தியா முழுவதும் பரவி விட்டது.

Tea

தேநீர் (சாய்)

இது முதலில் மருந்து பானமாக சீனாவில் உருவானது. பின்னர் சீன சந்தையை கட்டுப்படுத்த ஆங்கிலேயர்கள் அதை தயாரிக்க முடிவு செய்தனர். மேலும் இந்தியாவில் அறிமுகப்படுத்தவும் முயற்சித்து, வடகிழக்கு பகுதியில் தேயிலை பயிரிடும் நுட்பத்தை பழங்குடியினருக்கு கற்றுக் கொடுத்தனர். பின்னர் அது இந்தியாவின் ஒரு அங்கமாக மாறி 1950 இல் பிரபலமடைந்தது.

ராஜ்மா

பஞ்சாபி வகை உணவாக இந்த ராஜ்மா பார்க்கப்படுகிறது. இந்த ராஜ்மா உணவு உண்மையில் மத்திய மெக்சிகோ மற்றும் குவாத்தமாலா மூலமாக தான் இந்தியாவிற்குள் வந்தது.

இந்தியர்கள் தான் இதில் வெங்காயம், பூடு, தக்காளி, மற்றும் சில மசாலாக்களை சேர்த்து கிரேவியாக மாற்றினர்.

samosa

சமோசா

முதலில் வட இந்தியாவிலும், தற்போது தென்னிந்தியாவிலும் பிரபலமாக இருக்கும் ஸ்நாக் என்றால் அது சமோசா தான். ஆனால் இந்த சாமோசா மத்திய கிழக்கு நாடுகளை பூர்வீகமாக கொண்டது.

10ம் நூற்றாண்டிற்கு முன்பே உருவான இந்த சமோசா இந்தியாவிற்குள் 14ம் நூற்றாண்டில் தான் வந்தது. இதன் உண்மையான பெயர் சாம்போசா என கூறப்படுகிறது.

சிக்கன் டிக்கா மசாலா

இந்த உணவு வகை பஞ்சாபி உணவு என பலர் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த உணவு கிளாஸ்கோவ் என்ற ஸ்காட்லாந்து பகுதியைச் சார்ந்தது.

1971ம் ஆண்டு செப் அலி அகமது என்பது டிரை சிக்கன் என புதிய வகை சிக்கனை முயற்சி செய்யும் போது இது உருவானது.

பில்டர் காபி

இந்தியாவில் அதிகமாக பருகப்படும் இந்த பில்டர் காபி இந்தியாவை சேர்ந்தவை அல்ல. இது ஏமன் பகுதியை சேர்ந்தவை. இந்தியாவிற்குள் இதை கொண்டு வந்தது ஒரு இஸ்லாமிய சுஃபி என கூறப்படுகிறது.

அவர் மெக்கா பணத்தின் போது இந்த காபியை அருந்தி அதன் சுவை பிடித்து போய் ஏமனிலிருந்து இந்தியாவிற்கு காபி கொட்டைகளை வாங்கி வந்தார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?