Hand Bag-ஆக மாறிய விண்கல் : புதிய ஃபேஷன் முயற்சி - விலை எத்தனை லட்சம் தெரியுமா? Twitter
உலகம்

Hand Bag-ஆக மாறிய விண்கல் : புதிய ஃபேஷன் முயற்சி - விலை எத்தனை லட்சம் தெரியுமா?

தியேட்டர் முண்டி என்ற ஆய்வு மையம் மூலம் விண்கல் என உறுதிபடுத்தப்பட்ட கற்களே பைகளாக உருவாகின்றன. இவற்றில் 55,000 ஆண்டுகளுக்கு முன்னர் பூமியின் விழுந்த கற்கள் கூட அடங்குமாம்.

Antony Ajay R

நம் ஹோரோயின்கள், சர்வதேச பிரபலங்கள், இன்ஸ்டாகிராம் மாடல்கள் மற்றும் ஃபேஷன் விழாக்களில் தோன்றுபவர்களின் ஆடைகளை கவனித்திருக்கிறீர்களா? அவர்கள் வைத்திருக்கும் பொருட்களை? அவை எல்லாமே வித்தியாசமானதாக இருக்கும்.

ஆடம்பரமான அலங்காரத்தில் எப்போதும் எதாவது வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதனால் விதவிதமான முயற்சிகளை மேற்கொள்வார்கள்.

சில சமயம் அவர்களின் விநோதமான கண்டுபிடிப்புகளுக்கு நெஞ்சைப் பதரவைக்கும்படி அதிகமான விலையும் வைத்திருப்பார்கள்.

அப்படி ஒரு ஆடம்பரமான பொருள்தான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அது ஒரு விண்கல் ஹேண்ட் பேக்.

காபெர்னி (Coperni) என்ற பிரஞ்சு நிறுவனம் தான் இதனைத் தயாரித்துள்ளது. உண்மையான விண்கல்லில் தயாரிக்கப்பட்ட இந்த ஹேண்ட் பேக்குக்கு நாற்பதாயிரம் யூரோ விலைவைத்துள்ளனர். இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 35 லட்சம்.

'மினி விண்கல் ஸ்வைப் பேக்' எனப் பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த பையானது சாதாரண அடர் சாம்பல் நிற கல் போலவே தோற்றமளிக்கிறது.

இந்த பைகள் ஒவ்வொன்றுக்கும் பூமியின் வெவ்வேறு இடங்களில் விழுந்த விண்கற்களைப் பயன்படுத்துவதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.

இதன் எடை 1.8 கிலோகிராம் மற்றும் உயரம் 23 சென்டிமீட்டர். மேலும் எல்லா பைகளும் ஒரேப்போல இருக்காது என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

கற்கள் வேறுபடுவதனாலும், ஒவ்வொன்றும் தனித்தனியாக கையால் செய்யப்படுவதாலும் இந்த விண்கல் பைகளின் தோற்றம் வெவ்வேறானதாக இருக்கும்.

தியேட்டர் முண்டி என்ற ஆய்வு மையம் மூலம் விண்கல் என உறுதிபடுத்தப்பட்ட கற்களே பைகளாக உருவாகின்றன. இவற்றில் 55,000 ஆண்டுகளுக்கு முன்னர் பூமியின் விழுந்த கற்கள் கூட அடங்குமாம்.

இந்த பையை வாங்கும் போது நம்பகத்தன்மை சான்றிதழும் உடன் வழங்கப்படுகிறதாம்.

இணையத்தில் இது ஒரு வீண் செலவு என சிலரும்., இது கலைத்துவமான பொருள் என சிலரும் வாதாடிக்கொண்டிருக்கின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?