முத்தமிட துரத்திய பெண்கள்; தப்பிக்க நினைத்து உயிரிழந்த 15 வயது சிறுவன் - என்ன நடந்தது? ட்விட்டர்
உலகம்

முத்தமிட துரத்திய பெண்கள்; தப்பிக்க நினைத்து உயிரிழந்த 15 வயது சிறுவன் - என்ன நடந்தது?

Keerthanaa R

மரணங்கள் பல விதமான காரணங்களால் நிகழும். சிலவை கொலைகள், சில இயற்கையானவை, சில விபத்துகளால் நிகழும். அந்த விபத்துகளுக்கு பின்னால் இருக்கும் கதைகள் சமயங்களில் கேட்க சுவாரஸ்யமாக இருக்கும். அப்படி ஒரு சுவாரஸ்யமான மரணம் குறித்த கதை தான் இது.

ஒரு 15 வயது சிறுவன், இளம் பெண்கள் தன்னை முத்தமிடாமல் தப்பிப்பதற்காக ஓடியபோது, தடுக்கி விழுந்து உயிரிழந்துள்ளான். இந்த கதையை அச்சிறுவனின் கல்லறையில் பதிந்திருக்கின்றனர் அவனது பெற்றோர்.

ஜார்ஜ் ஸ்பென்சர் மில்லெட் நியூயார்க் பகுதியை சேர்ந்தவன். 15 வயதான ஜார்ஜ் நியூயார்க்கின் மெட்ரோபாலிட்டன் சேவை கட்டிடத்தில் ஆபீஸ் பாயாக பணியாற்றி வந்தான்.

"ஜார்ஜின் மென்மையான குணமும், மரியாதையான நடத்தையும், அங்கிருந்தவர்களை வெகுவாக ஈர்த்தது. முக்கியமாக பெண் ஸ்டெனோகிராஃபர்களை!" என்கிறது டைம்ஸ் அறிக்கை

அவர்கள் அவ்வப்போது ஜார்ஜை கேலி செய்து, அவனுடம் விளையாடி வந்துள்ளனர்.

இப்படியிருக்க, பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி ஜார்ஜின் பிறந்தநாள். வழக்கம் போல அலுவலகம் சென்ற ஜார்ஜ், அன்று தன் பிறந்தநாள் எனக் கூறியுள்ளான்.

உடனே அங்கிருந்த பெண்கள், "உன்னை முத்தமிடுவது தான் உனக்கான சிறந்த பிறந்தநாள் பரிசு" என தெரிவித்தனர். அதிலும் ஒரு பெண், "நீ வாழ்ந்த ஒவ்வொரு வருடத்திற்கும் உனக்கு ஒரு முத்தம் தருவேன்" எனக் கூறியதாக தெரிகிறது.

ஜார்ஜும் வெட்கப்பட்டுகொண்டு, யாரும் என்னருகில் கூட வரக்கூடாது என எச்சரித்துள்ளான். அன்று நாள் முழுவதும் அப்பெண்கள் ஜார்ஜை கேலி செய்துள்ளனர்.

வேலை நேரம் முடிந்தது. சுமார் 4.30 மணியளவில் ஜார்ஜுடன் வேலை பார்த்த பெண்கள் கும்பலாக அவனை தேடி அவனுக்கு முத்தமிட சென்றுள்ளனர். அவர்களிடமிருந்து தப்பிக்க ஓடிய சிறுவன், தடுக்கி கிழே விழுந்தான். அப்போது "நான் குத்தப்பட்டேன்" என்று அலறியிருக்கிறான்.

மனிதர்கள் முத்தமிட என்ன காரணம்? தெரிந்துகொள்ள...

சிறுவன் விளையாடுவதாக நினைத்து பெண்கள் அருகில் சென்றபோது ரத்த வெள்ளத்தில் கிடந்தவனை பார்த்து, அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஒரு பெண் மயக்கமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

உடனடியாக மருத்துவர்களுக்கு தகவலளிக்கப்பட்டு அவனை வீட்டிற்கு அழைத்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டது. எனினும், செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டான் சிறுவன்.

சிறுவனின் மரணம் தொடர்பாக காவல்துறையினர் முதலில் மிஸ் ராபின்ஸ் என்ற பெண்ணை கைது செய்தனர். விசாரணையில் சிறுவனிடம், கத்தி போன்றதொரு வடிவத்தில் இன்க் இரேசர் ஆயுதம் இருந்ததாகவும், தடுக்கி விழுந்ததில் அந்த ஆயுதம் அவனை குத்தியுள்ளது. இதன் காரணமாகவே உயிரிழந்திருப்பான் எனக் கூறியுள்ளார்.

பிரேத பரிசோதனையின்போது, சிறுவனின் கோட்டிற்குள், கத்தி ஒன்று இருந்தது தெரியவந்துள்ளது. அவனது உடலில் இருந்த காயமும், கத்தியுடன் ஒத்துப்பயிருந்தது. இதனால், அப்பெண் விடுவிக்கப்படார்.

சிறுவனுக்கு இறுதிசடங்குகள் செய்யப்பட்டு அவனை அடக்கம் செய்தனர். அவனது கல்லறையில், பிறந்த இறந்த தேதிகளுடன், அவன் இறந்த விபத்தின் கதையும் பொறிக்கப்பட்டுள்ளது.

"அலுவலகத்தில் உடன் பணியாற்றிய 6 இளம் பெண்கள் முத்தமிட முயற்சித்த போது அவர்களிடம் இருந்து தப்பிக்க நினைத்து ஓடியதில் தடுக்கி கீழே விழுந்து, இன்க் இரேசர் குத்தியதில் உயிர் பிரிந்தது" என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?