German Woman Killed Lookalike To 'Fake Her Own Death' Twitter
உலகம்

தன்னை போல இருக்கும் பெண்ணை தேடி கொலை செய்த மாடல் அழகி: சினிமாவை மிஞ்சும் க்ரைம் ஸ்டோரி

தன்னை போன்றே இருக்கும் ஒரு பெண்ணை கொலை செய்த ஜெர்மனியை சேர்ந்த மாடல் அழகி மரண வழக்கில் புதிய விவரங்கள் வெளிவருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Priyadharshini R

ஜெர்மனியை சேர்ந்த மாடல் அழகி தான் இந்த 23 வயதாகும் ஷஹ்ரபான். சோசியல் மீடியாவில் பியூட்டி டிப்ஸ் கொடுப்பதன் மூலம் பிரபலமானார்.

திருமணமாகி விவாகரத்து பெற்ற இவர் ஷேகிர் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஷஹ்ரபான் தனது பெற்றோரிடம் தான் தனது முன்னாள் கணவரை சந்திக்கப்போவதாக கூறி விட்டு சென்றிருக்கிறார்.

ஆனால் அவர் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக அவரது பெற்றோர் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் ஷஹ்ரபானை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அப்போது இங்கோல்ஸ்டாட் என்ற நகரில் ஷஹ்ரபானின் காரை போலீசார் கண்டுபிடித்தனர்.

அந்த காரில் இளம்பெண் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். காருக்குள் கிடந்த சடலம் ஷஹ்ரபான் போலவே இருந்ததால் அது அவர்தான் என அவரது பெற்றோரும், போலீசாரும் நம்பினர்.

இதையடுத்து, போலீசார் அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு ஷஹ்ரபானின் கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்க தொடங்கிவிட்டனர்.

இதற்கிடையில் பிரேத பரிசோதனையில் காருக்குள் சடலமாக கிடந்தது ஷஹ்ரபான் அல்ல என்பதும் கொலை செய்யப்பட்ட அந்த பெண் ஜெர்மனியை சேர்ந்த வேறு ஒரு மாடல் அழகியான கதீட்ஜா ஓ என்பதும் தெரியவந்தது. இதனால் இந்த வழக்கை விசாரிப்பது காவல்துறைக்கு பெரும் சவாலாக இருந்தது.

  • கதீட்ஜா எப்படி கொலை செய்யப்பட்டார்?

  • அவரது உடல் காணாமல்போன ஷஹ்ரபானின் காருக்குள் எப்படி வந்தது?

  • ஷஹ்ரபான் சாகவில்லை என்றால் அவர் என்ன ஆனார்? என பல்வேறு கேள்விகள் எழ தொடங்கியது.

இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டும் கொலைக்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. மர்மமாகவே இருந்துள்ளது.

இந்த நிலையில் சம்பவம் நடந்த 6 மாதத்துக்கு பிறகு மரண வழக்கில் புதிய விவரங்கள் வெளிவருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மாடல் அழகி ஷஹ்ரபான் குடும்ப பிரச்னைகளில் இருந்து தப்பிக்க, தான் இறந்துவிட்டதாக நாடகம் ஆட முடிவு செய்திருக்கிறார்.

Instagram

அதற்கு தன்னை போலவே இருக்கும் பெண்ணை தேடி கொலை செய்து, தான் இறந்துவிட்டதாக பெற்றோரையும், போலீசாரையும் நம்ப வைக்க அவர் திட்டம் தீட்டினார்.

அதற்காக இன்ஸ்டாகிராமில் பல போலி கணக்குகளை பயன்படுத்தி வந்திருக்கிறார். அப்போதுதான் கதீட்ஜா, ஷஹ்ரபானின் வலையில் சிக்கினார்.

இருவரும் நன்றாக பேசி பழகி இன்ஸ்டாவில் இன்ஸ்டண்ட்டாக நட்பாகியுள்ளனர். ஷஹ்ரபான் இன்ஸ்டாவில் அழகு குறிப்புகளை வழங்கி வருபவர் என்பதால் கதீட்ஜாவுக்கு அவ்வப்போது அழகுசாதன பொருட்களை சிபாரிசு செய்தும், வாங்கியும் கொடுத்துள்ளார்.

அப்படி ஒரு நாள் அழகு சாதன பொருட்களை தருவதாக கூறி கதீட்ஜாவை ஷஹ்ரபான் நேரில் அழைத்துள்ளார். அதை நம்பி சென்ற கதீட்ஜாவை ஷஹ்ரபான் மற்றும் அவரது காதலர் ஷேகிர் காரில் அழைத்து சென்றனர்.

வனப்பகுதியில் காருக்குள் வைத்து கதீட்ஜாவை இருவரும் குத்திக்கொலை செய்தனர்.

பின்னர் ஷஹ்ரபானும், அவரது காதலரும் காரை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு தலைமறைவாகினர். சினிமாவை மிஞ்சும் இந்த பதபதைக்கும் கொலை சம்பவம் நடந்து 6 மாதங்களுக்கு பிறகு தற்போதுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதனையடுத்து, ஷஹ்ரபானையும், அவரது காதலரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?