ஜெர்மனியைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடன் பழகிய ஆணுடன் உறவு கொள்ளும் போது ஆணுறையில் ஓட்டை போட்டு மாட்டிக் கொண்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்த வழக்குக்கு தீர்ப்பளித்த நீதிபதி வரலாற்றில் முதன் முதலாக இப்படி ஒரு வழக்கை விசாரிக்கிறோம் எனக் கூறியுள்ளார்.
39 வயதான பெண் ஒருவரும் 42 வயது ஆணும் “ஃப்ரெண்ட்ஸ் வித் பெனிஃபிட்ஸ்” உறவிலிருந்துள்ளனர். அதாவது அவர்கள் உடலுறவு வைத்துக்கொண்டாலும் நண்பர்களாகவே இருப்பர்.
ஆரம்பத்தில் இதற்கு இருவரும் ஒத்துக்கொண்டு தான் தங்கள் உறவைத் தொடங்கினர். ஆனால் காலப் போக்கில் அந்த பெண் ஆண் மீது காதலில் விழுந்துள்ளார்.
எனினும் அந்த ஆண் தன்னை காதலிக்கவில்லை என்பதைப் புரிந்து கொண்ட பெண் அவருடன் வாழ்வைத் தொடர குறுக்கு வழியை உபயோகிக்க முடிவு செய்தார்.
அவர்கள் உடலுறவு கொள்ளும் முன் ஆணுறையில் ஓட்டைப் போட்டு அதன் மூலம் கர்ப்பமாகி அதன் பிறகு அவரின் அன்பைச் சம்பாதித்துக்கொள்ளலாம் என எண்ணியிருக்கிறார்.
அவரது திட்டத்தையும் சரியாகச் செயல்படுத்தியுள்ளார். ஆனால் அவர் கர்ப்பமாகவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த அவர். ஒரு நாளில் அந்த ஆண் நண்பருக்கு வாட்ஸாப்பில் நடந்ததைக் கூறியிருக்கிறார்.
இதனால் கோபமுற்ற அந்த ஆண் பெண்ணுக்கு எதிராக காவல்துறையில் புகார் கொடுத்திருக்கிறார். இந்த புகாரை விசாரித்த நீதிபதி தான் வரலாற்றி முதன் முதலாக இந்த மாதிரியான வழக்கைச் சந்தித்துத் தீர்ப்பு வழங்கியிருக்கிறார்.
மிகவும் குழப்ப முற்ற நீதிபதி இதனைக் கற்பழிப்பில் சேர்ப்பதா? பாலியல் அத்துமீறலா? எனச் சிந்தித்த பின், அந்த ஆணின் காதலைப் பயன்படுத்தி அவரை ஏமாற்ற முயன்ற குற்றத்துக்காக அவருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை அளித்தது. இந்த விநோத வழக்கு சமுக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn: https://www.newssensetn.com/
Nalam360 : https://www.newssensetn.com/health
Newsnow: https://www.newssensetn.com/wow-news
Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu