ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் தலைநகர் பெர்லின். கோடைக்காலம் தொடங்குவதனால் இப்போதே இங்குள்ள நீர் நிலைகள் பரபரப்பாகத் தொடங்கிவிட்டன.
நீச்சல் குளங்கள், பார்க்கள் உள்ளிட்ட சூரிய குளியல் செய்யும் இடங்களில் பெண்கள் மேலாடையின்றி இருக்க அனுமதிக்கப்படவுள்ளனர்.
பொது இடங்களில் பெண்கள் மேலாடையின்றி இருப்பதா? என நீங்கள் எண்ணலாம். ஆனால் அங்கு அது சாதாரணமான ஒன்றாக இருக்கிறது. பாலியல் ரீதியிலானதாக கூட கருதப்படுவதில்லை.
கடந்த டிசம்பர் மாதம் ஒரு பெண் மேலாடையின்றி குளித்ததற்காக நீச்சல்குள அதிகாரிகளால் தடுக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து அந்த பெண் சட்டநடவடிக்கையை மேற்கொண்டார்.
அந்த பெண் மீது பாகுபாடுகாட்டப்பட்டதை அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர். அனைவருக்குமே நீச்சல் குளத்தில் மேலாடையின்றி குளிக்கும் உரிமை உள்ளது என அறிவிக்கப்பட்டது.
ஜெர்மனியின் சுதந்திர உடல் கலாச்சாரத்தை ஆதரிப்பவர்கள் இதனை வரவேற்கின்றனர். அது என்ன சுதந்திர உடல் கலாச்சாரம் எனத் தெரிந்துகொள்வதற்கு முன்னர், ஜெர்மனி மீதான பிற நாட்டு மக்களின் பார்வை எப்படியிருக்கிறது எனப் பார்க்கலாம்.
ஜெர்மனிக்கு புதிதாக வரும் சுற்றுலாப்பயணிகளை நிர்வாணமாக பார்கில் தூங்கும் மக்களும் ஏரி, குளங்களில் குளிப்பவர்களும் அதிர்ச்சியடையச் செய்கின்றனர்.
சிலருக்கு இது மிகவும் அதிருப்தியானதாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். நீச்சல்குளங்களைப் பொருத்தவரையில் பிறப்புறுப்புகளை மறைக்க வேண்டும் என்பது தான் விதி. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இது சமமாக பொருந்தும்.
முன்னதாக குறிப்பிட்ட சுதந்திர உடல் கலாச்சாரம் இயற்கையுடன் இணைந்து வாழும் வழியாக கருதப்படுகிறது.
சூரிய குளியலின் போதும் விளையாடும் போதும் நிர்வாணமாக இருப்பது மக்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளிலும் இந்தியா போன்ற நாடுகளிலும் நிர்வாணம் என்பது ஆபாசமானதாக, பாலியல் நோக்கமுள்ளதாகவே பார்க்கப்படுகிறது.
ஆனால் ஜெர்மனியில் அன்றாட நடவடிக்கைகளான நீராவிக் குளியல், நீச்சல் குளத்தில் கூட மக்கள் நிர்வாணமாக இருக்கின்றனர்.
வரலாற்று ரீதியிலான கட்டுப்பாடுகளை உடைத்து நிர்வாணத்தை சாதாரணமானதாக ஏற்கும் பழக்கம் 19ம் நூற்றாண்டில் கடைசியில் தொடங்கியது.
நிர்வாணமாக இருப்பது இயற்கையுடன் இணந்து இருப்பது மட்டுமே என எடுத்துரைத்தது சுதந்திர உடல் கலாச்சாரம்.
இயற்கை உணவு, பாலியல் விடுதலை, மாற்று மருத்துவம் மற்றும் இயற்கையுடன் இணைந்த எளிமையான வாழ்க்கை ஆகியவற்றை முன்னிருத்தி 20ம் நூற்றாண்டில் தொடக்கத்தில் முன்னெடுக்கப்பட்டது லெபென்ஸ் சீர்திருத்தம்.
இந்த சீர்திருத்தத்தின் பகுதியாகவே நிர்வாணமும் இருந்தது. 1918 முதல் 1933 வரையிலான காலக்கட்டத்தில் சிறிய அளவில் மக்கள் கடற்கரையில் நிர்வாணமாக குளிக்கத் தொடங்கினர்.
ஆண்களும் பெண்களும் நிர்வாணமாக இருப்பதை ஊக்குவித்து பயிற்சி அளிப்பதற்காக நியூடிஸ பள்ளிகள் உருவாகின.
நிர்வாணமாக இருப்பது ஆரோக்கியத்துக்கும் இயற்கைக்கும் நற்பயன் தரக்கூடியது என்ற நம்பிக்கையை இந்த பள்ளிகள் உருவாக்கின.
நாஜிக்கள் ஆரம்பத்தில் சுதந்திர உடல் கலாச்சாரத்தை ஒழுக்கக் கேடானதாக கருதினர். ஆனாலும் 1942ம் ஆண்டுக்கு பிறகு அதன் கராரான கட்டுப்பாடுகளைத் தளர்த்தினர். ஆனாலும் நாடுமுழுவதும் சுதந்திர உடல் கலாச்சாரம் பரவ அதிக நாட்கள் ஆனது.
கிழக்கு ஜெர்மனியில் சில காலத்துக்கு நிர்வாணமாக இருப்பது முதலாளி வர்கத்துக்கு மட்டுமே உரிய சலுகையாக இருந்தது.
சில இடங்களில் நிர்வாண குளியலை மறைந்திருந்து செய்யும் நிலை இருந்தது.
1971ம் ஆண்டு எரிச் ஹொனெக்கர் என்ற கம்யூனிஸ்ட் ஜெர்மனியில் ஆட்சிக்கு வந்தபோது நிர்வாண குளியல் முழுமையாக அனுமதிக்கப்பட்டது.
1990ம் ஆண்டு கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனி இணைந்த பின்னர் சுதந்திர உடல் கலாச்சாரமும் நிர்வாணமாக குளிக்கும் பழக்கமும் தேய்ந்தது.
2019ம் ஆண்டு சுதந்திர உடல் கலாச்சாரத்துக்கான இயக்கத்தில் அதிகாரப்பூர்வமாக 30,000 உறுப்பினர்கள் இருந்தனர். பெரும்பாலனவர்கள் 50, 60 வயதினர்.
ஜெர்மனி முழுவதும் பொதுவெளியில் நிர்வாணமாக இருப்பது பாரம்பரியமான ஒன்றாக இருக்கிறது. குறிப்பாக கிழக்கு ஜெர்மனியில் சுதந்திர உடல் கலாச்சாரம் பெருகியிருக்கிறது.
பொதுவெளிகளில் நிர்வாணமாக இருப்பது உடலளவிலும் மனதளவிலும் ஆரோக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மனிதர்களை நிர்வாணமாக பார்க்கப்பழகிவிட்டால் உடல் தோற்றம் குறித்த சிந்தனைகள் நம்மிடம் இருக்காது என்கின்றனர்.
மக்களை வெளித்தோற்றத்தை வைத்து இல்லாமல் உள்ளத்தை சீர்தூக்கி பார்க்க முயலலாம் எனவும் கூறுகின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust