தன் நிறுவன ஊழியர்களை லே ஆஃப் செய்தததை தொடர்ந்து, தொடர்ந்து இனி அலுவலகத்தில் இருக்கும் ஸ்டேப்லர், காகிதங்கள் போன்ற பொருட்கள் ஊழியர்கள் பயன்பாட்டிற்கு கிடையாது எனக் கூறியுள்ளது கூகுள் நிறுவனம்.
இது ஊழியர்களை கொதித்தெழச் செய்துள்ளது.
கொரோனா காலத்தில் அளவுக்கு அதிகமாக ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டதாகவும், பொருளாதார நெருக்கடி தலைத்தூக்கியிருப்பதாலும், ஊழியர்களை மாஸ் லே ஆஃப் செய்து வருகிறது பெரு நிறுவனங்கள்.
இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதும் உள்ள ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
கடந்த ஜனவரி மாதம் ஒரே மூச்சாக 12,000 பேரை லே ஆஃப் செய்தது கூகுள். தொடர்ந்து அவர்களின் நிறுவனத்தில் ஈடுபடுத்தப்பட்ட ரோபாட்களையும் பணி நீக்கம் செய்தது.
கடந்த பிப்ரவரி மாதம் அலுவலகங்கள் அளவை குறைக்க பணியில் இருக்கும் ஊழியர்களை டெஸ்க்குகளை பகிர்ந்துகொள்ள கூறியது.
தற்போது அடுத்த கட்டமாக, ஆபீஸில் ஊழியர்கள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டிருக்கும் ஸ்டேப்லர்கள், காகிதங்கள், செல்லோ டேப்கள் போன்றவற்றை இனி வழங்கப்போவதில்லை என அறிவித்துள்ளது.
தவிர பணியாளர்கள் யாருக்கும் இனி வேலை செய்ய லேப்டாப்கள் வழங்கப்படாது. பணியாளர்கள் இளைப்பாற வழங்கப்பட்ட மசாஜ் போன்ற சேவைகள் நிறுத்தப்படும் என நிறுவனம் கூறியுள்ளது
கூகுளின் நிதிகளை மேற்பார்வையிடும் ரூத் போராட் என்பவர் ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் இந்த தகவல்கள் இருந்ததாக வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு கூகுள் நிறுவன ஊழியர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. பலரும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இந்நிலையில், இணையவாசிகள் இந்த புதிய அறிவிப்பை பார்த்ததும், வழக்கம்போல தங்கள் பாணியில், மீம்கள் மூலம் நிறுவனத்தை கலாய்த்துள்ளது
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust