கின்னஸ் உலக சாதனை : வெறும் 4 மாத கர்ப்பத்தில் பிறந்த இரட்டை குழந்தைகள் - எங்கே? Twitter
உலகம்

கின்னஸ் உலக சாதனை : வெறும் 4 மாத கர்ப்பத்தில் பிறந்த இரட்டை குழந்தைகள் - எங்கே?

Antony Ajay R

அடியா லேலின் மற்றும் அட்ரியல் லூகா நடராஜா என்ற குழந்தைகள் ஒரு வயதிலேயே கின்னஸ் சாதனைப் படைத்துள்ளனர்.

ஷகினா ராஜேந்திரம் இந்த குழந்தைகளின் தாய். அவர் கர்ப்பமாக இருந்த போது 21 வாரங்கள் 5 நாட்களிலேயே பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது.

கரு கலைவதாகவே ஷகினா நினைத்திருந்தார். ஆனால் கடந்த மார்ச் 4ம் தேதி இரண்டு குழந்தைகளும் ஆரோக்கியமாக முதல் பிறந்தநாளைக் கொண்டாடினர்.

அமெரிக்காவைச் சேர்ந்த இந்த குழந்தைகள் உலகிலேயே மிகக் குறைந்த காலம் வயிற்றில் இருந்த இரட்டையர்கள் என அறியப்படுகின்றனர்.

இதற்காக கின்னஸ் விருதுகளும் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது.

சரியான பிரசவ தினத்துக்கு 126 நாட்கள் முன்னதாக பிறந்துள்ளனர் அடியா லேலின் மற்றும் அட்ரியல் லூகா நடராஜா.

இதற்கு முன்னதாக காம்ப்ரி மற்றும் கீலே என்ற இரட்டையர்கள் 125 நாட்கள் முன்னதாக பிறந்தது சாதனையாக இருந்தது.

அடியா மற்றும் அட்ரியல் குழந்தைகள் 23 நிமிட இடைவெளியில் பிறந்தனர். முறையே 330 மற்றும் 420 கிராம் எடையுடன் இருந்தனர்.

இருவரையும் சேர்த்தால் 750 கிராம். இவர்கள் தான் மிகவும் எடை குறைந்த இரட்டையர்கள்.

மூளை இரத்தப்போக்கு, செப்சிஸ் உள்ளிட்ட காரணங்களுக்காக 6 மாதம் வரை இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதில் இருந்து நன்றாக வளரத் தொடங்கினர்.

அடியா இப்போது 6 கிலோ எடையில் இருக்கிறார். ஆனால் அட்ரியல் சுவாச பிரச்னை மற்றும் தொற்றுநோய்க்காக இரண்டு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

கடந்த ஒரு வருடத்தில் குழந்தைகள் பல நாட்கள் மரணத்தைக் கடந்து வருவதாகவும், அனைவரின் பிரார்த்தனையாலுமே அவர்கள் ஆரோக்கியமாக இருப்பதாகவும் ஷகினா கூறியுள்ளார்.

இப்போதும் மருத்துவ நிபுணர்கள் இரட்டையர்களை கண்காணித்து வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?